வெள்ளி, 17 நவம்பர், 2017

உன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.

தெரிந்தவற்றைத்
தெரியப்படுத்து
புரிந்துகொள்ளப்
ப்ரியப்படுகிறேன்.

ஆகாச நிர்மலமாய்
உன் மனசைக் கொட்டு
செடிப்பசுமையாய்ப்
பரந்து விரிந்து ஆக்ரமி
மண்ணாய் நீரை உள்வாங்கு

அறிந்தவற்றை
அறியப்படுத்து
ஆவலாயிருக்கிறேன்
அகத்துள்ளும்
புறத்துள்ளும்.


நீ
மயில்போல் பாடினாலும்
குயில்போல் வெளிப்படுத்தினாலும் சரி..
நீ பாடு..
எனக்காய்.
நீ தரிசனம் தா.. எனக்காய்.

உன் வருகை மழைக்காய்
தரிசனக் (ச் சொட்டுக்காய்) கணத்துக்காய்
சாதகப் பட்சியாய் நான்.

*    *     *    *      *       *      *      *       *       *

மைல்கற்களாய்
நான்
நீ கடக்கக் கடக்க
நான் உன் எதிரேயே
கூடவே.

நீ நடக்கும்
ஒவ்வொரு மரத்திலும் நான்
பச்சையமாய் உனை
உறுத்துப் பார்த்தவாறு
உன்னைச் சுவாசிக்கும்
குளிர்ந்த காற்றாய்
உன்னில் குளிக்கும்
ஆக்ரோஷ அருவியாய்
உன்னைச் சூடும்
அதிசயப் பூவாய்.

-- 1982 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)