புதன், 2 ஜூலை, 2014

வண்ணப் பயணங்கள்.

தினமும் எதையோ
விற்பவனைப் போல
இறக்கை மணியடித்தபடி
உள்நுழைகிறது பட்டாம் பூச்சி.

சுற்றிச் சுற்றிப் பறந்து
திருடுகிறது
என் நேரத்தை.


வண்ணப் பயணங்களில்
ஆழ்ந்து கிடக்கும் நான்
மறுதலிக்கும் மொழியற்றிருக்கிறேன்.

பறந்ததின்பின் பறந்து
விட்ட நேரத்தைப் பிடிக்க
யத்தனிக்கையில் தெரிகிறது
அது எதையும் விற்கவில்லை
நானும் எதையும் வாங்கவில்லை
இருந்தும்
நிரம்பிக் கிடக்கிறது வீடு.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 1 - 15 , 2014 புதிய தரிசனத்தில் வெளிவந்தது.


5 கருத்துகள்:

  1. நிரம்பிக்கிடக்கிறது வீடு. நிறைந்துகிடக்கிறது மனம். ஒரு பட்டாம்பூச்சியின் கிரகப் பிரவேசம் உருவாக்கியது அழகிய கவிதைப் பிரசவம். அற்புதம். பாராட்டுகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜீவலிங்கம் சார்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி குமார்

    நன்றி கீதா :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)