வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஸ்மைலியும்., க்ளாடியும்., கல்கியும்...


சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..

உடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..?


கற்கை நன்றே .. கற்கை நன்றே..
பிச்சை புகினும் கற்கை நன்றே..
நன்றோ.. நன்றாய்க் கற்றும் பிச்சை புகுதல்..

தன் பாலியல் அறுவை சிகிச்சைக்காக பிச்சை எடுத்தும்., பின்பு வியாபாரம் செய்தும்., உத்யோகம் பார்த்தும்.. தற்போது டைரக்டர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கசியவைக்கும் கவிதைதான் இது..

பாதுகாப்பே இல்லாத சூழலில் யாரென்றே தெரியாத பலரால் அடிக்கப்படும் நிலை.. நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது அல்லவா.. பார்க்கும் போது பதற்றம் ஏற்படுத்தியது அந்த இயலாமை.. அழுகை..ஓலம் என்றும் சொல்லலாம்...

கவுன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடும்.. கல்யாணம் செய்தால் சரியாகிவிடும் என பெற்றோர் தவறான முடிவெடுக்காமல் என்ன பிரச்சனை என கண்டுபிடித்து அதற்கு ஏற்றதை செய்வதே சரியாக இருக்கும்..

டாக்டர் ஷாலினி சொல்கிறார்.. ஒவ்வொரு குழந்தையும் உருவாகும் போதே பெண்ணாகத்தான் உருவாகுது என்கிறார்.. ஆறாம் வாரத்தில்தான் அது ஆணாகவோ., பெண்ணாகவோ தீர்மானிக்கப்பட்டு ஆண் என்றால் Y க்ரோமோசோம் இணைந்து டெக்ஸ்ட்ரோன் பரவி ஆண் உறுப்புகள் உருவாகின்றன..

ஆண்கள் பால் கொடுக்கும் தேவை இல்லாமலே மார்புக் காம்புகள் இருப்பது இதனால்தான்.. ஆண் மிருகங்களுக்கோ வேறு எந்த உயிரினத்திற்கோ இப்படி இல்லை.. இப்படி பெண் மூலம் பெண்ணாகவே உருவாகி ஆணாக பிறக்கும் ஆண்கள் இவர்களை குறைத்து மதிப்பிடுவதும்., கேலி செய்வதும் ., சம்பந்தமில்லாமல் அடிப்பதும் என்ன நியாயம்..?

க்ளாடி முதலில் ஒரு திருநங்கையை சந்திக்கும்போது அவரின் குடிசைக்கு வரும் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து நடுங்குவதும்.. திருநங்கைகள் சமூகத்தால் மட்டுமல்ல.. அவர்களுக்குள்ளே ஏற்படும் உணர்வுக் குழப்பமும் ( தான் உருவத்தில் ஆணாக இருந்தும் ஆணின் மேலேயே காதல் வருவது..) முழுமையாய் வெளிப்பட்டு சங்கடம் ஏற்பட்டது..

எறும்பைப் போலவும் புல்லைப் போலவும் தன் அந்தரங்கம் மிதித்துச் செல்லப்படும் வலி.. என் கண்கள் கசங்கி விட்டன..

பிறப்பில் ஏற்படும் குறைபாட்டாலும் ., ஹார்மோன்களின் குளறுபடியாலும் ஏற்படும் இந்நிலைக்கு.. முழுமையான பெண்ணாக மாற முன்பு எல்லாம் தாயம்மா முறை என்றும் அதிகாரபூர்வமற்ற மு்றையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையே வழியாய் இருந்தது என்றும்.. தற்போது தமிழக அரசின் திருநங்கைகள் நல்வாழ்வு மையத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளிலும் கவுன்சிலிங்குகள்., டெஸ்ட்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் கிளாடி சொல்கிறார்.

நம்மைவிட நளினமாக அழகாக உடையணியும் ரோஸும்., கல்கியும்., ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார்கள்.. விஜய் டிவியில் இப்படிக்கு ரோஸ் சிலமுறை பார்த்து இருக்கிறேன்.. பால் சுயம்புவின் உயிரின்நிலை குறித்த கட்டுரைகள் பத்ரிக்கையில் படித்து அசந்திருக்கிறேன்.. திறமை எங்கு இருந்தாலும் ஜெயிக்கும்.. இன்பத்துப்பாலில் விளைந்த மூன்றாம் பால் இது..
இன்பத்துக்காக பெற்றுவிட்டு புறந்தள்ளுவது என்ன நியாயம்.. பெற்றவர்களே யோசியுங்கள்.. உங்கள் ரத்தமும் சதையும் கொடுத்து நீங்க உருவாக்கிய உயிர்
அது.. ( அது .. இது என்று தாங்கள் அழைக்கப்படும் அவலம் குறித்து ஸ்மைலியின் வரிகள்.. கவிதைகளாய் )

லிங்கிஸ்டிக்கில் முதுநிலை படித்த ஸ்மைலியும்., முதல் முறை கல்லூரியிலேயே தான் பெண் என்று சர்டிஃபிகேட் கொடுத்து சேர்ந்த முதல் திருநங்கை க்ளாடியும்.. அவர்களின் தன்னம்பிக்கையும்.,க்ளாடியை புரிந்து உதவி செய்த.. தோழி சபியும்.. டாக்டர் ஷாலினியும்., மதுரையில் ஸ்மைலிக்கு முதலில் வேலை தந்த நிறுவனத்தாரும்., சரவணனை.. ஸ்மைலி என தன் கதையை வெளியிட உதவிய கிழக்கு பதிப்பகத்தாரும் என்னை வியக்க வைக்கிறார்கள்..

இதை குறும்படமாக எடுத்த என் முகப்புத்தகத் தோழி கீதாவும்., அவர் கணவர் இளங்கோவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.. சரியான சமயத்தில் சரியான விழிப்புணர்ச்சி கொடுத்ததற்காகவும்.. இவர்களை என் நண்பர்களாக கொடுத்ததற்காகவும் ஆணாகிப் பெண்ணாகி நின்ற ., தான் பாதி உமைபாதி என்றான கடவுளுக்கு நன்றி..

” உன் சுதந்திரம் வெறும்
கண்ணாடிக் குடுவைக்குள் அடக்கம்..
எனக்கு இந்தப் பிரபஞ்சத்தைப்போல...”

பிரபஞ்சம் உங்கள் கையில் தோழி.. ஸ்மைலி.. பின்னென்ன..:))
இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்..:))
இந்த நாள்.. இனிய நாளில் என் முகப்புத்தகத்தோழி கல்கிக்கு இந்த இடுகையை பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்.. என் அன்புத்தோழி... கல்கி..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.



 




20 கருத்துகள்:

  1. அருமையான விரிவான விமர்சனம் அக்கா. நல்ல புரிதலுடனும், பரிவுடனும் எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இன்பத்துக்காக பெற்றுவிட்டு புறந்தள்ளுவது என்ன நியாயம்.. பெற்றவர்களே யோசியுங்கள்.. உங்கள் ரத்தமும் சதையும் கொடுத்து நீங்க உருவாக்கிய உயிர்
    அது..

    உண்மை தான் திரு நங்கைகள் பற்றிய தங்களின் இப்பதிவு நெகிழ வைத்தது தேனம்மா

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  4. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல புரிதலுடனும் எழுதியுள்ளீர்கள்.....congrats

    பதிலளிநீக்கு
  6. மிக்க சந்தோஷமும் மகிழ்ச்சியும் தேனம்மை

    இந்தப் பகிர்வு ஆழமும் அகலமும் கொண்டது

    பதிலளிநீக்கு
  7. எப்பவுமே அடுத்தவர்களின் நிலையிலிருந்து யோசிக்கும் போதுதான் அதன் வீரியம் தெரியும் ..பாவம் ...!!

    பதிலளிநீக்கு
  8. மிகுந்த காருண்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு எங்கு அவர்களை கேலி செய்யப்படுவதை
    கண்டாலும் மனம் பதறும். நமது சினிமாக்களும் நிறையவே அவர்களை கேலி செய்திருக்கிறது.ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்பது வெறும் உபச்சாரப் பேச்சு மட்டுமே..
    ஒரு பேரியக்கமாய் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. மிக முக்கியமான பதிவு..அதுவும் கல்கியின் பிறந்த நாள் பரிசாக. அற்புதமானதும் அவசியமானதுமான அறிமுகம்..நல்ல புரிதலுடன் எழுதப்பட்டுள்ளது.. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  10. அக்கா, இதைப் பற்றிய ஒரு ப்ளாக் உங்களிடம் வந்தது எனக்கு சந்தோசமே..
    என்னுடைய ஆராய்ச்சியில்...(விஞ்ஞான பகுத்தறிவில்)
    திருநங்கைகளால், செவ்வாய் கிரகத்திற்கும் செல்லமுடியும் என்பது...
    ஆண்கள் மூளையால் பலசாலி...பெண்கள் இதயத்தால் பலசாலி...
    இந்த இரண்டும் இவர்களிடம் மட்டுமே காணமுடியும்....
    (பெரியார் கூட...நான் 'அலி' தாண்டா என்று சொல்லக் கேள்வி)
    பெயரே SMI'LEE
    தைரியாமா கலக்குங்க....

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. ஆணாய் இல்லாமல்,
    பெண்ணாய் இல்லாமல்,
    அவலமாய் வாழ்கிறோம்
    பரிகாசம் வேண்டாம்..
    பரிதாபமும் வேண்டாமே!
    சாகவும் முடியாமல்,
    வாழவும் பிடிக்காமல்..
    என்ன ஒரு வாழ்க்கை!
    பழி
    பெற்றோர்!
    பலி
    நாங்கள் !!
    ஒன்று மட்டும்
    சொல்கிறோம்..
    நாங்கள் யாருக்கும்,
    சுமையல்ல..
    பாரத்தை,
    எங்கள் மீது
    மேல்
    ஏற்றாதீர்கள் ப்ளீஸ்!!
    (இந்த சமுதாயத்தில் அவர்கள்
    படும் கஷ்டங்களுக்காக,
    இந்த கவிதை அர்ப்பணிக்கப் படுகிறது)

    பதிலளிநீக்கு
  13. நன்றி கீதா., ஸ்ரீராம்., சக்தி., சசி., வினோ., பெயரில்லா., குரு., வெங்கட்., நேசன்., ஜெய்., மோஹன் ஜி., வெற்றி., ஆகாய மனிதன்., விஜய்., டி வி ஆர்., ஆர் ஆர் ஆர் ., அஷோக்., மெய்

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)