சென்னையின் பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம். இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ
மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு.
இது ரிஸப்ஷன்.
அறைக்குள்ளே வந்துவிட்டோம்.
டபிள் பெட் வேண்டும் என்று சிங்கிள் பெட் இருந்த ரூமை மாற்றிக் கொண்டோம்.
வெளியே தண்ணீர் இருக்கிறது. மினரல் வாட்டர். ரூம் சர்வீஸிலும் ஒரு பாட்டில் உண்டு.
காரிடார் புகைப்பட ஓவியங்கள்.
டாய்லெட். த்ராஷ் டின், பக்கெட், கப், வாஷ்பேஸின் கண்ணாடியோடு உண்டு.
இருநாட்களிலும் காலை ப்ரேக்ஃபாஸ்ட். சூப்பர். மேல் மாடியில் உணவு அருந்தினோம். நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சம் கொண்ட தளம்.
முதல் நாள் ரவா கேஸரி, சேமியா வெஜ் கிச்சடி, பூரி, தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, உருளை மசால், ப்ரெட் பட்டர் ஜாம்.
ரூமுக்கு வெளியே உள்ள டிஸைன் ஜன்னலில் தெரியும் சென்னை நகரம்.
ஃபுல் ஃபர்னிஷ்ட், ஏசி, மற்றும் டபுள் கர்ட்டன்ஸ்.வெளியே வெள்ளை உள்ளே அரக்குக் கலர். பகலிலும் இரவு போல் திரைச்சீலையை இழுத்து மூடிவிட்டுத் தூங்கலாம்.
நல்ல பெட், தலையணைகள், துவாலைகள், ரஜாய்.
மறுநாள் காலை உணவு ஊத்தப்பம், ரவா கிச்சடி, வடை, தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்.
காரிடார் ஓவியம்.
பஃபே ஹால்.
காரிடார் ஓவியம்.
பஃபே ஹால்.
நிறைய நார்த் இந்தியன்ஸையும், அலுவல் நிமித்தம் தங்குபவர்களையும் பார்க்க நேர்ந்தது.
லிஃப்ட் வசதி உண்டு.
லிஃப்ட் வசதி உண்டு.
ஃப்ரீ வைஃபை, டாய்லெட்டரீஸ் எல்லாம் கொடுக்கின்றார்கள். ஹாட் வாட்டர் வருகின்றது. நல்ல சுவையான காலை உணவு. இருவர் இரு நாட்கள் தங்க 5000/- ரூ ஆகும். எக்ஸ்ட்ரா ஒருவர் தங்கினாலும் எக்ஸ்ட்ரா பெட்டும் உணவும் உண்டு. கார் பார்க்கிங் மற்றும் எண்ட்ரன்ஸுக்கு சரியான வழி செய்ய வேண்டும்.
இந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு எனது ரேட்டிங். நான்கு ஸ்டார். ****
எனக்கு நல்லதொரு ரிசார்ட்டில் சென்று தங்க வேண்டும் என்று ஒரு ஆசையிருக்கிறது. ஆசை இருக்கிறது தாசில் பண்ண...!
பதிலளிநீக்கு