திங்கள், 25 ஆகஸ்ட், 2025

செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் பற்றி திரு.இளங்கோவன் அவர்கள்.

 


அன்புடையீர்! வணக்கம்.

   நான் எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய 'மற்றும் சில செட்டி நாட்டுப் பெண்கள்' சிறுகதைப் புத்தகத்தைப் படித்தேன். மிகச்சிறந்த முறையில் கதைகளைக் கொண்டு செல்கிறார். எந்தக் கதையிலும் குறிப்பிட்ட ஒருவரை முற்றிலும் எதிர் நிலைப் பாத்திரமாகப் படைக்காமல், மனித இயல்புக்கு ஏற்றபடி படைத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகள்.

புத்தகத்தில் உள்ள சில குறைகளையும் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
அச்சுப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் குறைவான அளவில் உள்ளன. அவற்றைத் தவிர்த்து, கதையின் ஓட்டத்தில் நெருடலைக் கொடுக்கும் சில குறைகளைச் சுட்டிக் காட்ட, அவற்றின் புகைப்படப் பிரதிகளை இத்துடன் அனுப்பி உள்ளேன். அவற்றைச் சரிபார்த்து, அடுத்த பதிப்பில் திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
சீ.இளங்கோவன்
05.07.2025
சேலம்





** இதில் ஆறுமுகம் சொக்கலிங்கம் என்று பெயர் குழப்படி செய்து உள்ளேன் ஒரே ஒரு இடத்தில் மட்டும்

**எங்களுக்கு ஒன்பது கோயில் உள்ளதால் அதன் பிரிவுகளுக்குள் திருமணம் செய்ய மாட்டோம்.  அதை அவர் கோவிலில் பார்த்து என்று திருத்தம் சொன்னார்.

**தன் மகனின் நண்பன் ரங்கன் என்பதால் உன் நண்பன் என்று குறிப்பிட்டுள்ளேன்.


கதையின் படி, லெட்சுமியின் சின்னத்தாள் ஜெயாச்சியின் கணவர் அடைக்கப்பன் கொடுக்கல் வாங்கல் லேவாதேவி செய்கிறவர். அடைக்கப்பன், லெட்சுமியின் அப்பா விவசாயம் செய்வது குறித்து  விமர்சனம் செய்ய, ஜெயா அவனை அடக்குகிறாள் என்பது என் புரிதல்.

முதல் பத்தியிலேயே லெட்சுமியின் அப்பச்சி சாலியக்க மங்கலத்தில் விவசாயம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே இந்தத் தகவல் விடுபட்டிருந்தாலும் பாதகமில்லை.

நான் சொல்வது, அடைக்கப்பனின் விமர்சனமும், ஜெயா அவனை அடக்குவதுமான உரையாடல் ஒரே மேற்கோள் குறிக்குள் அடங்கியுள்ளது. அதனைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதைத்தான் பென்சிலால் அடையாளம் காட்டி உள்ளேன்.

எனது கருத்தைப் பரிசீலித்துப் பார்த்து முடிவு எடுங்கள்.

-- ஒப்புக் கொள்கிறேன் சார். 


ஹெர் ஸ்டோரீஸ் அலுவலகத்தில் இருந்து வாட்சப் எண் வாங்கி அவர் எனக்குத் தனித்தகவலில் அனுப்பியது. 

அம்மா, வணக்கம்.
நான் சேலத்தில் இருந்து இளங்கோவன் எழுதுகிறேன்.
தங்களின் புத்தகத்தில் உள்ள சில குறைகளைச் சுட்டிக் காட்டி பதிப்பகத்திற்கு நான் கடிதம் அனுப்பி இருந்தேன். அதன் மீதான உங்கள் பதிலையும் அவர்கள் அனுப்பினார்கள். அதன் மீதான எனது கருத்தை அவர்களின் ஆலோசனைப்படி உங்களுக்கு அனுப்புகிறேன். பரிசீலனை செய்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன், 
சீ.இளங்கோவன்
சேலம் 
08.07.2025


இந்தப் பகுதி மகன் அப்பாவுக்கு ஏற்பட்ட வியாதி குறித்தும், அதன் பிறகு தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் சொல்வது போலவே அமைக்கப்பட்டுள்ளது. அப்பா நினைத்துப் பார்ப்பது போல இருந்தால் 'உன் நண்பன்' என்பதே சரியாக இருக்கும். எனவே, எனது கருத்து சரி என்று நினைக்கிறேன்.

பக்கம் 130இல் உள்ளது குறித்து.

'ஏதோ ஒரு பெண்ணைக் கோவிலில் பார்த்து, அவளது வயது படிப்புப் பையனுக்குப் பொருந்தி வந்தால்' என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து.


இதற்கு என் விளக்கங்கள்.

அம்மா மகனிடம் அப்பாவுக்குத் தெரியாமல் பேசியபோது 'உன் நண்பன் ரங்கா' என்று கூறுகிறார்.

மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் உள்நாட்டில் உள்ள அவனது நண்பன் ரங்காவிடம் உதவி பெற்று கொள்கிறார்கள்

மேலும் நாங்கள் ஒன்பது கோவிலை சேர்ந்தவர்கள் என்பதால் ஏதோ ஒரு பெண்ணுடன் கோயில் வயது படிப்பு பொருந்தி வந்தால் என்று எழுதியுள்ளேன்

அவரின் பதில் :- ஆம். நான் தவறாகப் புரிந்து கொண்டேன். தவறுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


------

**தன்னுடைய எவ்வளவோ பிரச்சினைகளுக்கு நடுவில் நம் புத்தகத்தை ஒருவர் வாங்கிப் படித்து இவ்வளவு தூரம் நுணுக்கமாக விமர்சனம் செய்வதே நமக்கு சன்மானம் கிடைத்ததற்குச் சமம்தானே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)