செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு -- 8.

 13.

பொட்டல் - மைதானம்.

கூட்டுப் பட்டா - கூட்டாக இருக்கும் பட்டாப் பத்திரம்.

கூட்டுப் பத்திரம் - ஒரே பத்திரம்.

தாய்ப்பத்திரம் - பூர்வீக சொத்துப் பத்திரம்.

வேத்தாள் - அந்நியர், வேறு ஆள்.

பாட்டையா - அப்பாவின் ஐயா. ஐயாவின் அப்பச்சி.

இருசி மட்டை - கருணை இல்லாதவள்.

வட்டிக்கடைத் தடைச்சட்டம் - 1977 இல் கொண்டு வரப்பட்ட அரசுச் சட்டம்.

போக்கடாப் பயல் - போக்கற்றவன், அயோக்கியன்.

கொண்டிமாடு மாதிரி - கண்டிக்க ஆள் இல்லாமல், கோவில் மாடு மாதிரி அலைவது,

வாய்செத்துப் போனாக - பயத்தால் பேச இயலாமல் இருப்பவர்கள்.

பக்கத்து வளவு - பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்.

ஈமக் கிரியை - இறுதிச் சடங்கு

பங்குக்காரவுக - வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வெவ்வேறு கோயிலைச் சேர்ந்தவர்கள் பங்கு வாங்கிக் கொண்டு வந்தாலோ அவர்களைப் பங்குக்காரவுக என்று சொல்வார்கள்.

 

14.

ஆத்தங்குடிக் கல் - போன நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஆத்தங்குடி டைப் மார்பிள் கல்/மொஸைக் கல்/பூக்கல்.

ரெட் ஆக்ஸைட் - தரைக்கு சிமெண்ட் தளம் போடுவது போல் இந்த ரெட் ஆக்ஸைடையும் போட்டுப் பூசி வைப்பார்கள்.

பெறளுது - பிரண்டு போதல்.

இரண்டாம்கட்டு - வீட்டின் பின்பகுதி. முதற்கட்டை அடுத்து ஆல்வீடு அதன் பின் இருப்பது இரண்டாம் கட்டு.

சங்கு - குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சில்வர் பாலாடை

கேதம் - இறப்பு, சாவு.

ஒரந்தட்ட - உடம்பில் பிடித்த வாயு போன்றவற்றைத் தட்டுவதன் மூலம் நீக்குவது.

பொறைத்தட்ட - புரை ஏறியவர்கள் இருமிக்கொண்டே இருப்பார்கள். புரைத்தட்டினால் அது நீங்கிக் குணமடைவார்கள்.

ஒரமெடுக்க - தலை நிற்காத குழந்தைகளுக்குக் கழுத்தில் சிலசமயம் சுளுக்கு விழுந்துவிடும். அதை நீக்கப் புடவையில் வைத்து உருட்டி ஒரமெடுப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)