வியாழன், 16 மே, 2024

சோகி சிவா சொல்வழக்கு - 1

 1.

பத்தி - வளவு, முகப்பு ஆகியவற்றில் புழங்கும் பகுதி.

பஞ்சாட்சரம் - சிவனின் ஐந்தெழுத்து மந்திரம். நமச்சிவாய

உபதேசம் - சிவகோத்திரத்தைச் சேர்ந்த நகரத்தார் இன மக்கள் துலாவூர், பாதரக்குடி ஆகிய மடங்களில் தங்கள் குருக்களிடம் சிவதீட்சை பெற்று உபதேசம் பெறுவார்கள். இதில் ஆண்கள் பாதரக்குடியிலும் பெண்கள் துலாவூரிலும் சமய தீட்சை பெறுவார்கள். 

வேடுகட்டி - ஜாடி, கண்ணாடி சீசா போன்றவற்றில் வாய்ப்பகுதியைத் துணியால் மூடிக் கட்டுதல்.

பெரியப்பச்சி மகமிண்டி - பெரியப்பாவின் மருமகள்

ஒடைகஞ்சி - அரிசியை உடைத்து வைத்த கஞ்சி

பாயிவரப்பாய்ங்களா - பாவி வரப்பான் என்ற வசை மொழி

பட்டுக்கிடப்பாய்ங்களா - பட்டுக் கிடப்பான் என்று வசைமொழிதான் ஆனாலும் பட்டில் கிடக்க வேண்டும் என வாழ்த்தாகவும் அமையும்

ஆக்கி அவிச்சமணியம் - எப்போதும் உணவைத் தயாரித்துக் கொண்டே இருத்தல்.

உண்ணுக்கினே - சாப்பிட்டுக்கொண்டே

மோர்மான் ஜாடி - அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜாடி வகையறா. ஊறுகாயைக் கெடாமல் பத்திரப்படுத்தப் பயன்படுவது.

சீசா - கண்ணாடி பாட்டில்

மலயா - மலேஷியா

அரசாளுவைகளா - திட்டுவதுதான் . ஆனால் அரசை ஆளுவீர்கள் என்று வாழ்த்தாகத் திட்டுவது.

ஓவியம் என்ன - அருமை பெருமை

 

2.

சம்பாப்பாவாடை - சாதத்தால் கடவுளுக்கு வேண்டுதல் செய்தல். சாதம், ஜிலேபி, காய்கனி போன்றவற்றால் இறைவன் திருவுருவை அலங்கரித்தல்.

காரைக்குடியார் மடத்துக் கட்டளை - வேத பாடசாலை, மடம் போன்றவற்றிற்கு வயல், கோசாலை போன்றவற்றிலிருந்து வருமானம் வரும்படி ட்ரஸ்ட் அமைத்து  அதன் மூலம் கோவில் திருவிழா, மண்டகப் படிகளில் பங்களிப்பார்கள்.

சிகண்டி பூரணம் - பல மணிகள் சேர்ந்து ஒலிக்கும் வித்யாசமான மணி ஓசை

பிரதக்ஷிண அப்பிரதக்ஷிண உலா - பிரதோஷ காலத்தில் ஈசனை நந்தியிலிருந்து சண்டீசர் வரை வலம் வரும் ஈசனின் ரிஷப வாகனத்தோடு மும்முறை சென்று வரும் உலா. 

ப்ளஷர் கார் - காரை அந்தக் காலத்தில் ப்ளஷர் கார் ( மகிழுந்து ) என்று சொல்வார்கள்.

வலியன் குருவி - இது இடமிருந்து வலமாகப் பறந்தால் தீமை என்பார்கள்.

2 கருத்துகள்:

  1. ஆக்கி அவிச்சமணியம் ... தவறான சொல். அவிச்சமேனியும் என்பதுதான் சரி. எப்போதும் படிச்சமேனிக்கி இருப்பான் என்பதுபோல மேனிக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. பட்டுக்கிடப்பான் .. வசைமொழி. அனுபவிப்பான் என்றர்த்தம். அது வாழ்த்தல்ல. அடப் பிசாசுப் பயலே என்று சொல்லின் ஒலிமூலம் வசவு இல்லாமல் வசவுச் சொற்கள் சொல்லப்படலாம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)