ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வெளிநாட்டு உள்நாட்டு காயின் கலெக்ஷன் - 3 ஓட்டைக் காலணா.

 அமீரக திர்ஹாம்ஸ்.

அரேபிய நாணயங்கள். 


இத்துடன் யூரோ நாணயங்களும். 

கலவையாக நாணயங்கள். யூரோ, டாலர், வெள்ளி, திர்ஹாம்ஸ்.


இத்துடன் ஃப்ரான்க் நாணயங்களும். 

இந்திய நாணயங்கள்

ஜவஹர்லால் நேரு, அசோகச் சின்னம், மஹாத்மா காந்தி, நான்காம் ஜார்ஜ் மன்னர் பொரித்த பித்தளை, செம்பு நாணயங்கள். 

1891 ஆம் ஆண்டு நாணயமும் உள்ளது. ஒன் க்வார்டர் அணா. அதாவது காலணா. 

1936 ஆம் ஆண்டின் 1/12 அணாவும் உள்ளது. ஓரணா, இரண்டணா ஆகியவை 1930, 40 களில் வெளியிடப்பட்டவை. 

197, 80 களில் வந்த தாமரைப்பூ போட்ட பித்தளை 20 பைசா , முற்றிய நெற்கதிர், காந்திஜி, மான், தேசிய விலங்கு சிங்கம் ஆகியன பொரித்த நாணயங்கள். பத்துப் பைசாக்களும், ஐந்து பைசாக்களும் ஒரு நயா பைசாக்களும் கூட உள்ளன. 

எட்டணா - 1/2 அரை ரூபாய் , காலணா - 1/4 கால் ரூபாய் ஆகியவை 1950 களின் வெளியீடு.



இவற்றில் 1891 இல் வெளிவந்த ஒன் க்வார்ட்டர் அணா ரொம்பவே விஷேஷம். ஓரணா, ரெண்டணாக்களும் உள்ளன. சதுர வடிவில் ஐந்து பைசாக்கள் போல இரண்டணாக்கள். நெளி பத்துப்பைசா, இருபது பைசாக்கள் போல ஓரணாக்கள். 

ஒன் பைசா என்று அச்சிடப்பட்ட ஓட்டை நாணயங்கள். 

1944- 45 களில் வெளிவந்த இதை ஓட்டைக் காலணா என்பார்கள். 


1274 இல் வாழ்ந்த துறவி தியானேஷ்வருக்காக வெளியிடப்பட்ட நாணயம். 


அடுத்து ரூபாய் நோட்டுக்கள் பற்றிப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)