திங்கள், 23 அக்டோபர், 2023

நரியங்குடி ஆதினமிளகி அய்யனார் கோவில் & புரவி எடுப்பு . மை க்ளிக்ஸ்.

 கடந்த மே மாதம் நரியங்குடியில் புரவி எடுப்பு நிகழ்ந்தது. அந்தப்புகைப்படங்களை இப்போது பகிர்கிறேன். 

இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும். 





கம்மாய்க்கரையோரம் ஒய்யாரமாய்க் காத்திருக்கும் புரவிகளும் பூதங்களும். 
காட்டுக்கருப்பரின் வடக்கு நுழை வாயில் இருபுறமும் கடந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பூதங்கள். 
டிங் டாங் கோயில் மணி.. இந்த மணி போதுமா :)
கால பைரவர் சந்நிதி. 
கருப்பரின் வாகனம் யானை.. ஆனை. 
அழகான காட்டுக்கருப்பர் சந்நிதி. கடந்த ஆண்டுகளில் புரவிஎடுப்பில் உலா வந்த காட்டுக்கருப்பர்கள் சுதைச் சிற்பம் வெளி வாயிலில்
பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஆதினமிளகி ஐயனார் திருக்கோயில்  கருவறை வாசல். மேலே விநாயகரும் முருகரும். 
வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர். 
கன்னிமூல கணபதி. 
கடந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புரவிகள் அணிவகுப்பு. 
வீரபத்திரர், சப்த கன்னி, அரசமுகம், சன்னியாசி. 
கருப்பரின் கருக்கரிவாள்கள் ஒன்பது. 

கோயில் உள்முகப்பும் மூன்று நிலை ராஜகோபுரமும்.  உள்ளே முன்னோடி. 

கம்மாய்க்கரையில் நிற்பவர்களும், கோயில் உள்ளே நிற்பவர்களும். 


7+3=10. கடந்த ஐந்து ஆண்டு புரவிஎடுப்பில் வந்த பூதங்கள். . இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். 
ஸ்ரீ நொண்டிக் கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ ராக்காச்சி அம்மன், ஸ்ரீ சின்னக் கருப்பர். 













முன்புறத்தோற்றம். 

புரவி எடுப்பில் திருமண வேண்டுதலுக்காய் உலா வரக் காத்திருந்த பசுக்களும், காளைகளும். பொதுவாகப் பத்துப் பசுக்களும் கடைசியாக ஒரு காளையும் உலாவில் வருகின்றன. 








இந்த வருடப் புரவி எடுப்பு இனிதே நடைபெற்றது. 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)