வியாழன், 8 ஜூன், 2023

உடலுறுப்பு தானம் செய்துள்ள கன்னிவாடி காயத்ரி

உடலுறுப்பு தானம் செய்துள்ள கன்னிவாடி காயத்ரி


திண்டுக்கல் கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயலெக்ஷ்மி ஒரு அஷ்டாவதானி. 26 வயது ஆராய்ச்சி மாணவி. பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இன்று அவர் கண்டுள்ள வளர்ச்சி அவரின் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பெருமுயற்சியே ஆகும். அஷ்டாவதானியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு இச்சிறு வயதிலேயே தன் உடலையும் ( இறப்பிற்குப் பின்) தானம் அளித்துள்ளார் எனக் கேட்டு வியப்பாய் இருந்தது. எனவே அவரின் தொடர்பு எண் பெற்றுப் பேசியபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.

“திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் 06.06.1997 இல் பிறந்தேன்நடுத்தர வர்க்கக்குடும்பத்தை சார்ந்தவள் நான்வீட்டிற்கு மூன்றாவது பிள்ளைஉடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும், ஒரு  அக்காவும். அம்மா (பஞ்சவர்ணம்எங்களை ரொம்பக்  கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்ஐம்பது கிலோ மூட்டைகளைக் கூடச் சுமந்து எங்களைப் படிக்க வைத்தார்கள்நவாப்பட்டி மு.ரெ.அரசு மகளிர் பள்ளியில் படித்தேன்.அங்கு தமிழாசிரியர் கலைவாணி அம்மா நன்கு பழக்கம்அவர்களின் உதவி மிகப் பெரியதாக எங்களுக்கு இருந்தது.

பள்ளியில்படிக்கும்போதுஎட்டாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இடைவேளை நேரத்தில் சுண்டல் விற்பேன்.ஒரு பாக்கெட் இரண்டு ரூபாய்நூறு பாக்கெட் கூட அம்மா போட்டு தந்த ஞாபகம் இருக்கிறதுமாலையில் அம்மாவிடம் பர்ஸ் நிறைய சில்லறைக் காசுகளைக் கொடுப்பேன்அம்மாவின் முகத்தில்அப்போது ஒரு புன்னகை  தவழும்சிறிய வயதிலேயே அம்மாவிற்கு உதவியாக இருந்ததை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன் .

அம்மாசிறு தொழில் நிறையச் செய்வார்கள்அக்கா நன்றாகப் படிப்பாள்விளையாட்டு பேச்சு கவிதை என்று எல்லாவற்றிலும் திறமைசாலிஅவளைப் பார்த்து நானும் வளர்ந்தேன்அம்மா சிறிய வயதிலிருந்தே நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.எல்லாப் பெற்றோர்களையும் போலத்தான் பெற்ற கஷ்டம் தம் பிள்ளைகள் படக்கூடாது என்று எண்ணினார்கள்.கல்வி நம் பிள்ளைகளை உயர்த்தும் என்று நம்பினார்கள்.கிடைத்த வேலைகளை நன்கு செய்வார்அம்மாவிடமிருந்தே நான் உழைப்பைக் கற்றுக்கொண்டேன்.

சொல்லப்போனால்அப்பாவின் ஆதரவு எங்களுக்கு இல்லாமல் இருந்ததுபெரும்பாலான குடும்பங்களில் நிலவும் அதே பிரச்சினைதான்குடிஆனால் அப்பாவின் அறிவுரையும் வழிநடத்தலும் மிகச் சிறப்பாக இருந்தது.அப்பா பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்அம்மா ஐந்தாம் வகுப்பு வரை படித்தாகச் சொல்லுவார்எங்கள் மூவரையும் நன்றாகப் படிக்க வைத்தார்கள்.


திண்டுக்கல் எம்.வி.எம்.கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்தேன்காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலைத்  தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டேன்எம் ஃபில்  படிப்பதற்கு  10,000 ரூபாய் காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் இந்தித்துறைப் பேராசிரியர்கள் சேர்ந்து வழங்கினார்கள்... எல்லாப் பட்டங்களிலும் பல்கலைக்கழகத்தின் முதல் தரம் பெற்ற மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.

கல்லூரிக் காலங்களில் நிறையப் பரிசில்கள் பெற்றேன்..நிறைய மேடைகள் ஏறினேன்என்னுடைய வளர்ச்சிக்குக் கல்லூரிக் காலம் பொற்காலமாக அமைந்தது.பேச்சு,கவிதைபட்டிமன்றம்நாட்டுப்புற நடனம்நாட்டுப்புறப் பாட்டுவிளையாட்டு என எல்லாவற்றிலும் தடம் பதித்து வளர்ந்தேன்எம்ஃபில் படிக்கும் போதே யூசிஜி நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று JRF  (ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ) வாங்கினேன்..”

அண்ணா computer engineer, அக்கா M.Sc Maths.  நான்  டாக்டர்  பட்டத்திற்குப் படித்துக் கொண்டு இருக்கிறேன்இதை என் குடும்பத்தினர் பெருமையாகக் கருதுகிறார்கள், எங்கள் ஊரில், எங்கள்  உறவினர்களில் நம் வீட்டுப் பெண் முதன் முதலாக டாக்டர் பட்டம் வாங்கப் போகிறது என்றுநான் நாளிதழ்களில் வந்ததில் எங்கள் ஊர் மக்களும் பெருமைப்பட்டார்கள், “கன்னிவாடி  என்ற ஊரை அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டாய்”” என்று.

இறந்த பின் தன் உடல் உறுப்புக்களையும் மற்றும் முழு உடல் தானமும் செய்துள்ளார். டோனர் கார்டைப் புகைப்படமாக அனுப்பி இருந்தார். இவ்வளவு சிறு வயதிலேயே இம்மாதிரி எண்ணம் ஏற்பட்டது எப்படி என வினவியபோது”நான் இல்லாமல் போனால் கூட  என்னால் ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் எப்போதும் இருக்கும்நமக்கு பயனற்று போவது யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.என் அக்கா மகாலட்சுமி அவர்களும் உடல் உறுப்பினைத் தானம் செய்துள்ளார்.” என்று கூறி அசரவைத்தார்.

இவரைப் பற்றி வெளிவந்த  பத்திரிக்கைகள்  மற்றும்  காட்சி  ஊடகங்கள்  இவள் தாரகை இதழ்தினமலர்நாளிதழ்.மக்கள் தொலைக்காட்சியின்  உழவர் மேடைராஜ் டிவியின் அகடவிகடம்பட்டிமன்றங்களில் பேசியுள்ளார்நாட்டுப்புறப் பாடல்கள்நாட்டுப்புற நடனம்நிகழ்ச்சித் தொகுத்து வழங்குதல்கவிதை, நடனம்பாடல்எழுத்துபேச்சுதனிநபர் நடிப்புஒப்பாரிப்பாடல்நூல் விமர்சனம்பள்ளிகல்லூரி மற்றும் பல்வேறு அமைப்புகளிலும் மாவட்டமாநில அளவிலான கவிதைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதிப் பதக்கங்களை வென்றுள்ளார்எனவே அஷ்டாவதானி  என்ற பட்டமும் இவருக்கு உண்டு.


பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் : இவள் தாரகை - சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்முரசொலி அறக்கட்டளை ,பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல்எம்.வி.எம் முத்தையா அரசு பெண்கள் சுலைக் கல்லூரி - கைப்பந்து விளையாட்டுப் போட்டியில், The Gandhigram Rural Institute Center Women's Studies-Certificate, MVM Muthaiah GovtArts College for Women - SHUTTLE - Winner, MVM Muthaiah Govt Arts College for Women-Ball Badminton-Winner, MVM Muthaiah Govt Arts College for Women -P.V.Das,நினைவு பேச்சுப் போட்டிகல்வி உரிமை இயக்கம் - தனி நடிப்பு - பாராட்டுச் சான்றிதழ். MVM Muthaiah Govt Arts College for - Women- Throw Ball.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்மதுரை மாவட்டம் - கவி 7th National Voters Day 2017 Certificate of Appreciation-Poetry

தமிழ்நாடு அரசு-உலகப்புத்தக தினம் - பாராட்டுச் சான்றிதழ்-முதலிடம்மற்றும் ஓவியப் போட்டிநாட்டுப்புறக்குழு நடனம்,

Ball Badminton, Matribhesha diwas மதர் தெரசா கல்லூரியில் Badminton Winner

கபடிபேச்சுப்போட்டி இப்படி பல்வேறு துறைகளில் 35 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுத் தனது ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

”தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக பயின்று வருகிறேன்..இந்தச் சமூகத்தில் இன்னும் நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருக்கிறது.. மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும்இன்றையநிலையைநான்எட்டஎன் குடும்பம்,  நண்பர்கள்பேராசிரியர்கள் அனைவரும் உதவியாக இருக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமகிழ்வு.

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டபோது, “ எதிர்கால திட்டங்கள் நிறைய உள்ளது.‌பேராசிரியாக  ஆக  வேண்டும். என்னால் முடிந்த வரை கல்விக்காக உதவ வேண்டும்.என் மண்ணிலே நிறைய முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும்.நாட்டுப்புற நடனத்தில் அதிக ஆர்வம் உள்ளது.நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஊடகங்கள் மீதும் ஆர்வம் அதிகம்.RJ ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.RJ மாதிரி பேசி என் கைபேசியில் பதிவு செய்து நானே கேட்டுக் கொள்வேன்வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.”

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் காயத்ரி. உங்கள் அம்மா உங்களை உருவாக்கப் பட்ட சிரமங்களையும், அச்சிறு வயதிலேயே நீங்கள் பள்ளியில் எந்த ஈகோவும் பார்க்காமல் சுண்டல் விற்றுச் சம்பாதித்ததையும் கேட்கும்போது உழைப்பின் உயர்வு புரிந்தது. உங்கள் தொடர் முயற்சிகள் நீங்கள் அஷ்டாவதானி மட்டுமல்ல தசாவதானி என்றும் கூறுகிறது. இன்னும் நூறு விஷயங்களைக் கூட உங்களால் செய்ய முடியும், அதற்கெல்லாம் பொருளாதாரம் என்பது ஒரு தடைக்கல்லாக இருக்க முடியாது என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். ஆராய்ச்சிப் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் வாங்கி இச்சமூகத்துக்கு நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. உங்கள் எண்ணங்கள் நிறைவேறவும் உங்களால் இச்சமூகம் இன்னும் பயனடையவும் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)