புதன், 26 ஏப்ரல், 2023

எனது ஐந்து நூல்கள் ( 20 - 24) வெளியீடு.

 எனது ஐந்து நூல்கள் நேற்று டிஸ்கவரியில் வெளியிடப்பட்டன.



கமலா சினிமாஸ் அதிபர் திரு. வி என். சிடி. வள்ளியப்பன் அவர்கள் வெளியிட "சோகி சிவா" நாவலை திரு. சோம. வள்ளியப்பன் அவர்களும்,



"சாணக்ய நீதி - உரை" நூலை திரு. வள்ளிதாசன் அவர்களும்,



"ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள் " நூலை திருமதி. மணிமேகலை அவர்களும்,



"மகாபாரதத் துணைக்கதைகள்" நூலை திருமதி. கயல்விழி மோகன் அவர்களும்,



"நீலகேசி - புதினம்" நூலை திருமதி. டெய்சி மாறன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.


இறைவணக்கம் திருமதி.மீனா பெரியண்ணன், தொகுப்புரை.திருமதி. வள்ளி பழனியப்பன், ஏற்புரை. திரு. சபா அருணாச்சலம்.

எனது 7 நூல்களை வெளியிட்ட பாரதி பதிப்பகம் செல்வி. நித்யா ராஜேந்திரன் தனது தாயாருடன் கலந்து கொண்டார்.



உணவுலகம் திரு. மெய்யப்பன், பொதிகை மங்கையர்சோலை திரு. விஜயகிருஷ்ணன், நண்பர்கள் திரு. பாபு, திரு. பாகி தங்கவேல் சார், திரு.ராமன் நாகப்பன், திரு. இரா. குமார் சார், புவனா, முத்து மீனாக்ஷி தேனப்பன் ஆகியோரும் மற்றும் என் உறவினர்களும் கலந்து கொண்டார்கள். மிகச் சிறந்த நிகழ்வாக அமைந்தது.

அன்பின் தோழி மணிமேகலை எங்கள் இருவருக்கும் வழக்கம்போல் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார். என் நாத்தனார் திருமதி மீனா பெரியண்ணன் அவர்களும் ஒரு பொன்னாடை போர்த்தினார்கள்.




வந்திருந்த விருந்தினர்களுக்கு என் உறவினர்கள்மூலம் பொன்னாடை போர்த்திப் புத்தகப் பரிசு வழங்கி சிறப்புச் செய்தோம்.

முதலில் திரு. வி என் சிடி. வள்ளியப்பன் சார் அவர்களுக்கு என் கணவர் பொன்னாடை போர்த்தினார்.


அதன் பின் திரு. சோம வள்ளியப்பன் சாருக்கு என் சகோதரன் சபா அருணாச்சலமும்



திரு வள்ளிதாசன் சாருக்கு என் மகன் திருவேங்கடநாதனும்


திருமதி மணிமேகலை மேடமுக்கு என் நாத்தனார் திருமதி மீனா பெரியண்ணன் அவர்களும்



திருமதி கயல்விழிமோகனுக்கு என் பெரிய தம்பி மனைவி இந்துவும்



திருமதி டெய்சி மாறனுக்கு என் நடுத்தம்பி மனைவி அடைக்கம்மையும்


நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கிய திருமதி வள்ளி பழனியப்பன் அவர்களுக்கு என் சகோதரி மீனா வள்ளியப்பன் ஆச்சி அவர்களும்


பொன்னாடை போர்த்தினார்கள்.


திரு வி என் சி டி வள்ளியப்பன் சார் புத்தக தினத்தில் என் புத்தகங்களை வெளியிட்டுப் பணப்பரிசும் அளித்தார்கள். ( 3,000/-) ரூபாய்!.




புத்தக தினத்தில் சிறந்த அரங்கு அமைத்துக் கொடுத்து என் நாவலை டிஸ்கவரியின் வெளியீடாகக் கொணர்ந்து சிறப்புச் செய்த சகோ வேடியப்பன், சஞ்சய் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வுகளை வீடியோ எடுத்து யூ ட்யூபில் டிஸ்கவரி சேனலில் பதிவிட்டிருக்கும் சகோவுக்கும், நிகழ்வு முழுதும் உடனிருந்து உதவிய டிஸ்கவரி டீமுக்கும், ஹரிஹரன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
முகநூலிலும் வாட்ஸப்பிலும் வாழ்த்திய 700 பேருக்கும், ஃபோனிலும் மெசேஜிலும் வாழ்த்திய நூறு பேருக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய 50 பேருக்கும் அன்பு நன்றிகள். வாழ்க வளமுடன் 🙂
இந்நிகழ்வைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய என் அன்பின் அத்தைமகள் சாலாவின் கணவர் மதிப்பிற்குரிய தம்பி திரு. சுந்தரம் அவர்களுக்கும், எனது பெருமதிப்பிற்குரிய வள்ளியப்ப அய்த்தான் அவர்களுக்கும், நண்பர் திரு பாபு அவர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வை வீடியோ எடுத்து யூ ட்யூபில் பதிந்திருக்கும் டிஸ்கவரி நகர்வு சேனலுக்கும், திரு பிகே தங்கராஜ் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

////தேனம்மை லட்சுமணணின் ஐந்து நூல் வெளியீடு தலைமையேற்று நூல்களை வெளியிடுபவர் திரு. " வி. என்.சிடி வள்ளியப்பன்" #tamilliterature #tamilart #tamilwriters #tamil https://www.youtube.com/watch?v=LvwsCAsiBXg ////


////அன்புள்ள தோழமைகளுக்கு.... சென்னை டிஸ்கவரி பேலஸ் அரங்கத்தில் .... திருமதி. தேனம்மைலெஷ்மணன் அவர்கள் எழுதிய ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோழமைகளுக்கு வணக்கம். சென்னை டிஸ்கவரி பேலஸில்... திருமதி.தேனம்மைலெஷ்மணன் அவர்கள் எழுதிய, சோகி சிவா, நீலகேசி, சாணக்ய நீதி, ஒப்பற்ற இந்தியப் பேரரசு, மகாபாரதக் கதைகள், ஐந்து புத்தங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கமலம் திரை அரங்கின் உரிமையாளர் வி.என்.சிடி.வள்ளியப்பன், சோம.வள்ளியப்பன், உளவியல் ஆலோசகர் திருமதி.மணிமேகலை MSC, கயல்விழி மோகன், எழுத்தாளர் திருமதி. டெய்சி மாறன், டிஸ்கவரி பேலஸ் வள்ளி தாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


அன்பும் நன்றியும் அனைவருக்கும் மக்காஸ்.

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)