திங்கள், 7 நவம்பர், 2022

ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள் - எனது இருபதாவது நூலின் முன்னுரை.

 இமயம் முதல் குமரி வரை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு தேசங்களும், சமஸ்தானங்களும்,பாளையங்களும் உள்நாட்டுக் கலகத்தாலும், அரியணைப் போட்டிகளாலும், அமைச்சரவை, இராணுவங்களின் கெடுபிடிகளாலும் கலகலத்துக் கிடந்தன.  


முகலாயர்கள், வியாபார நிமித்தமாய் வந்த போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள்,  ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பால் சுயராஜ்ஜிய தேசங்கள் தங்களுக்குள்ளே ஒன்று பட்டுப் பொது எதிரியை எதிர்த்தார்கள். .நினைவில் சுதந்திரம் பொதிந்த அவர்கள் அந்நியர்களால் அழிந்ததை விடக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலேயே அழிந்தார்கள். அப்படியும் தங்கள் உயிர் உள்ளவரை போராடி உடல், பொருள், ஆவியை  இழந்தவர்கள் அநேகம். 

அந்நியர் படையெடுப்பை எதிர்த்து மட்டுமல்ல, ஏகாதிபத்திய முகலாய ஆட்சியை எதிர்த்தும் இந்திய ராணிகள் தீரத்துடன் தங்கள் போர்க்கொடியை உயர்த்தி உள்ளார்கள். இதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் பேசப்படவில்லை. அந்தப் பெண்ணரசிகளின் தியாகங்களும் போற்றப்படவேண்டியவை. வடநாட்டில் ஒரு ஜான்சி ராணி என்றால் தென்னாட்டில் ஒரு வேலு நாச்சியார். அங்கே ஒரு ஜல்காரி பாய் என்றால் இங்கே ஒரு குயிலி என வீரப் பெண்மணிகள் போட்டி போட்டு அணிவகுக்கிறார்கள்.

இவர்களுள் 25 பெண் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து பாரதி பதிப்பகத்துக்காக நூலாக்கம் செய்துள்ளோம் தந்தைக்காக வாழ்ந்த ஜகனாரா பேகம்,, தன் நோக்கப்படி வாழ்ந்த உமையம்மா, ராக்கி அனுப்பிய கர்ணாவதி, ஆக்கிரமிப்பாளர்களின் மூக்கை வெட்டிய கர்னாவதி, அக்பரையே வியக்க வைத்த ராய்பாகினி,ஆலம்கீரையே எதிர்த்த கேளடிசென்னம்மா, ஆங்கிலேயர்களே மிரண்ட ஜிந்த் கவுர், புனிதப் போராளி மாய் பாகோ, இதயத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்த ரூப்மதி, தத்துவராணி அகல்யாபாய், ராணிகளின் ராணி நூர்ஜகான் இவர்கள் மட்டுமல்ல நாட்டைக் காக்க சமயோசிதத்துடனும் தீரத்துடனும் செயல்பட்ட ஒனகே ஓபவ்வா. வெற்றியைக் கையாள்வது பற்றி உரைத்த ராஜமாதா ஜீஜாபாய், பஞ்சாப் சிங்கத்தை உருவாக்கிய சதா கவுர், முகலாய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சந்த் பீபி   ஆகியோர் பெண் சக்தியின் அடையாளம், பெண்களுக்கான உத்வேகம். 

பத்தாம் நூற்றாண்டின் சுகந்தா முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சதா கவுர் வரை வரை தங்கள் வீரதீரத்தால் என்னை மெய்சிலிர்க்க வைத்தவர்களின் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பாரதி பதிப்பகத்தாருக்கு நன்றியும் அன்பும். 


6 கருத்துகள்:

  1. தங்கள் நூல்களை வாசிக்க ஆர்வமாக உள்ளது அம்மையாரே.
    எம் போன்ற மாற்றுத்திறனாளிகள் வாசிக்கும் வண்ணம், இதன் மின் வடிவ புத்தகத்தை வாங்கும் வசதி இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு

  2. 3088. Bharathi pathippagam

    To order the book kindly contact 9383982930

    Book rate 200rs 

    No postal charges

    பதிலளிநீக்கு
  3. பதிப்பாளரிடம் மின்வடிவ நூல் பற்றிக் கேட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பதிப்பாளரிடம் மின்வடிவ நூல் பற்றிக் கேட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)