வெள்ளி, 22 ஏப்ரல், 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 2.

 ஃப்ரான்ஸ் சென்றிருந்த போது பாரீஸில் “பாட்டிக்ஸ் மௌச்சஸ்” என்னும் பறக்கும் படகில் சென்றது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். மிக வித்யாசமான அனுபவம் அது. ஒர்ஸே மியூசியம், லூவர் மியூசியம், நாட்டர்டேம் கதிட்ரல் , ஈஃபில் , சுதந்திர தேவி சிலை, பல்வேறு கட்டடங்கள்,  பாலங்களைக் கண்டு களிக்கலாம். 

1870 இல் ஃப்ரான்கோ- ப்ருஷ்யன் போரில் காயம் பட்ட வீரர்களை ஆம்புலன்ஸின் வேகத்துடன் பறந்து சிகிச்சைக்குக் கொண்டு சென்றதால் இப்படகுகளுக்குப் பறக்கும் படகுகள் என்று பெயர். இதற்கு ரெட் கிராஸின் மெடல்களும் வழங்கப்பட்டிருக்கு ! 

ஃப்ரான்ஸில் ஓடும் நதியின் பெயர் ஸீன். 
அதில் பறக்கும் படகில் டெக்கில் அமர்ந்து பயணித்தது ஒரு சுவாரசியமான & த்ரில்லிங்கான  அனுபவம். 
இது வான்கூவரோ , லூவரோ.. சரியா தெரில. ஏதோ ஒரு மியூசியம். 
லூவர் மியூசியம்தானாம். கூகுள் சொல்லுது.  இதை எல்லாம் சுத்திப் பார்க்க நாட்கணக்கில் ஆகுமாம். 
 ஏதோ ஒரு மியூசியத்துலதான் மோனாலிசா புன்னகைக்கும் ஓவியம் இருக்கு. 
ஃப்ரான்ஸ் நகரமே கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் நகரம்.

நல்ல ஆர்க்கிடெக்ஸிங்.

போன பதிவில் பார்த்தமாதிரி இது இன்னொரு பாலம்.

எதிர்த்தாற்போல் தெரிவது படித்துறை  :) படகுககளின் இன்னொரு துறைமுகம். 


இந்த டெக்கில் சுமார் 500 பேர் அமர்ந்து செல்லலாம். 
கல்யாண மண்டபம் போல போட்டைக் கட்டி இருக்காங்க :) 


எங்க கூட யூரோப் டூர் வந்த இந்தூர் டாக்டர்  குடும்பம்தான் 

படகு  ஆலவட்டம் போட்டுத் திரும்புகிறது. 
இரண்டு மூணு பட்டேல் குடும்பத்தினரும் அமெரிக்காவிலிருந்தும் லண்டனிலிருந்தும் வந்திருந்தார்கள். 

இவர் ஆந்திராவைச் சேர்ந்தஒரு டாக்டர். இவரும் குடும்பத்தோடு வந்திருந்தார். 


அடுத்த பாலம். ஒவ்வொரு பாலமும் வித்யாசமா வடிவமைக்கப்பட்டிருக்கு. வெகு அழகும் கூட. அந்த விளக்குத்தூணைப் பாருங்க. கலை நயம். 

இடது பக்கம் ஏதேதோ சர்ச்சுகள் வந்தன. 

பாலத்தின் மீது நிற்பவர்கள் எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள். :) 

இதுதான் தீயினால் எரிந்து தற்போது ( 2019 இல்)  புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கதீட்ரல். 


ஒரு பாலத்தின் அடிப்பக்கம். கட்டிட அமைப்பு வித்யாசம் பாருங்க. 


எங்கெங்கு நோக்கினும் கட்டிடங்கள். 

விதம் விதமான மக்கள். 

விதம் விதமான ரசனைகள். 


அடுத்தொரு பாலத்துடன் இந்த இடுகையை முடிக்கிறேன். இன்னும் இரு இடுகைகளில் பயணத்தைத் தொடருவோம். 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)