வியாழன், 3 மார்ச், 2022

உலகம்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா மலர்.

 உலகம்பட்டி உலகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 2017 மலர்  தொகுத்த விதம் மிக அருமை.



ஆன்மீக மடங்கள், தலைவர்களின் அருளுரைகள், நகரத்தார் வாழ்த்து, அரசியல் பிரபலங்களின் வாழ்த்து, மலர்க்குழு, கும்பாபிஷேகக் கமிட்டி, நிதியும் விளம்பரங்களும் தந்த நல் உள்ளங்கள், கோவில் வாரியாகப் புள்ளிகள், திருப்பணி செய்தவர்கள், பிரபலங்கள் அறிமுகம், சென்னை வாழ் உலகம்பட்டி நகரத்தார்களின் சேவைகள் என நல்ல கட்டுக்கோப்பு.

ஞானியார் மடம், உலகநாதர் கோவில் உருவான விதம், கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் இவற்றோடு ஊரின் தொழில் வளர்ச்சி ஆலோசனைகளும் கூறப்பட்டிருப்பது வித்யாசம்.

தண்டாயுதபாணி போற்றிப் பதிகம் மட்டுமல்ல. நலம்தரும் பதிகங்களையும் கொடுத்துள்ளது அனைவருக்கும் பயன் தரும்.

காப்புக்கட்டுச் சடங்கு பற்றிய விளக்கமும், கம்பன் அடிப்பொடி ஐயாவின் நகரத்தார் வரலாறும் அசர வைத்தது.

காசியில் திரு. லேனா காசிநாதன் அவர்களின் செயல்பாடுகளும் ஊருக்கு முதல் உலகம்பட்டி என்ற நேர்மறை சொலவடையும் வியப்பளித்தன.

முக்கியமாக உலகம்பட்டி நகரத்தார் இளைஞர் சங்கம் என்ற ஒன்றும் இம்முயற்சிகளில் ( விளம்பரங்கள் பெற்றுத் தந்தது )  கரம் கோர்த்திருக்கிறது. பெரியோரைத் துணைக்கோடல் என்பதுடன் இளையோரையும் இணை வைத்துச் சிறப்பித்திருப்பது இம்மலரின் வெற்றி.

தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தியிலும்  படைப்புகள் வெளியாகி உள்ளன.    ஒரு சிறுவன் ஹிந்தியில் கவிதை கொடுத்திருக்கிறான்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சம மதிப்புக் கொடுத்து உலகம்பட்டியார் கொண்டாடி இருக்கிறார்கள். நூல் முழுவதும் உலகம்பட்டி பற்றிய பெருமிதம் நிரம்பிக்கிடக்கிறது.

சிறந்த தொகுப்பு ! வாழ்த்துக்கள் அனைவருக்கும் !!

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)