ஞாயிறு, 6 டிசம்பர், 2020

நமது மண்வாசமும் பெண்மொழியும்

 நமது மண்வாசம் மதுரையில் இருந்து வெளிவரும் மாத இதழ். தானம் அறக்கட்டளையின் ரிஃப்ளெக்‌ஷன் பதிப்பகத்தின் மூலம் இன்று வரை இடையறாது ஆறாண்டுகளுக்கும் மேலாகப்  பயணம் செய்து சமூக மாற்றத்தை உண்டாக்கி  வரும் இதழ். இதில் கிட்டத்தட்ட 50 இதழ்களுக்கும் மேலாகக் கதை, கவிதை, கட்டுரை எனப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. 





2018 இல் என்னுடைய பெண்மொழி ( ஆஸ்த்ரேலியாவின் தமிழ் நண்பன் “மெல்லினம்” இதழில் வெளியான 42 கட்டுரைகளில் 20 ஐத் தொகுத்துப் பெண்மொழி என்ற தலைப்பில் ஒரு) நூலை வெளியிட்டவர்கள் தானம் அறக்கட்டளையின் ரிஃப்ளெக்‌ஷன் பதிப்பகத்தார்தான். 






சுய உதவிப் பெண்கள் குழு, வளரிளம் பெண்கள் குழு என கிட்டத்தட்ட 13,000 குழுக்களும் 5 லட்சம் வாசகர்களும் கொண்டது நமது மண் வாசம் இதழ். இந்த இதழின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவில் இந்நூலை திருமதி சாந்திமதுரேசன் அவர்கள் வெளியிட பேராசிரியர் திரு. கு. ஞானசம்பந்தன் பெற்றுக் கொண்டார். 









எனது எட்டாவது நூலான பெண்மொழியை அடுத்து மஞ்சளும் குங்குமமும் என்ற கட்டுரைத் தொகுப்பும், பெண் அறம் என்ற கட்டுரைத் தொகுப்பும் அதே ரிஃப்ளக்‌ஷன் பதிப்பகம் மூலம் வெளியாகி உள்ளது. 







மிக்க நன்றி இம்மூன்று புத்தகங்களையும் வெளியிட்ட ரிஃப்ளக்‌ஷன் பதிப்பகம், நமது மண்வாசம், நிர்வாகக் குழுவினர், சுய உதவிக்குழு மகளிர் & ஆசிரியர் திரு திருமலை சார். மேலும் எனக்காக நிகழ்வுக்கு வந்து முழுவதும் இருந்துஆசி வழங்கிய என் பெற்றோருக்கும் நன்றி. 





2 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு நன்றிகள் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)