வியாழன், 12 நவம்பர், 2020

பிஸாவுடன் ஒரு செல்ஃபி.

 யூரோப் டூரின் ஏழாம் நாள் இரவு ஜெனிவாவுக்குப் போனோம். பகலில் பிஸா டவரைப் பார்த்தோம். பார்த்தவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டோம். பின்னே இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பதிநான்காம் நூற்றாண்டில் நிறைவடைந்த பெல் டவர் ஆச்சே !. ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சுடன் இணைந்து பெல் டவர் ஒன்றும் காணப்படுகின்றது. ஏழு நூற்றாண்டு கடந்தும் விழாம சாஞ்சே நின்று பெயர் வாங்கிருச்சு இந்த டவர். இதை உருவாக்கியவர் டியோட்டிசால்வி என்ற கட்டிடப் பொறியாளர். 

இங்கே பிஸா பாப்டிஸ்ட்ரி, பிஸா கதீட்ரல் ( சர்ச்) & பிஸா டவர் ( பிஸா பெல் டவர் ) மூன்றும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. இந்த பிஸா டவர் 55.86 மீட்டர் உயரம் உள்ளது. தோராயமா 184 அடி உயரம். இதோட அடியின் விட்டம் 57 அடி. தரைத் தளம் ( பூமி ) இந்தக் கட்டிடத்தோட எடையைத் தாங்கும் அளவு பலமா இல்லாததால இது நாலு டிகிரி சாஞ்சிருக்குன்னு சொல்றாங்க. ஐஞ்சரை டிகிரி வரை சாஞ்ச இதை 2001 வாகில் நாலு டிகிரி அளவு நிமிர்த்தி சரி செஞ்சிருக்காங்களாம். 

ஏழு மாடியோட சேர்த்து மொத்தம் 8 தளம் உள்ள கட்டிடம் இது. இரண்டரை அடி கனமுள்ள சுவர்கள், 296 படிகள். மழையும் அதுவுமா உள்ளே சுத்தி சுத்திப் போறதுக்குள்ள வழுக்குது. மேலே போனா ரெண்டு டைப் பெல் இருக்கு.  

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் வீக்கு என்னும் வடிவேலு வசனம் அசந்தர்ப்பமாக ஞாபகம் வந்து புன்னகைக்க வைத்தது. 

வருடா வருடம் சில இஞ்சுகள் சாய்ந்து வரும் இந்த பிஸா டவர் வருடந்தோறும் கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கே லெமன் செல்லா என்ற ட்ரிங்க் நன்றாக இருக்கும் என எங்கள் டூர் கைட் சந்தோஷ் ராகவன் பரிந்துரைத்தார். ( ஒரு பத்துத் தரமாவது சொன்னாரே என்று வாங்கிவிட்டு ரங்க்ஸ் அது ஒரே புளிப்பு. மனுஷன் குடிப்பானா என்று யாருக்கோ பரிசளித்துவிட்டார் :)


பிஸா டவருக்கு முன்னால் இருக்கும் பிஸா பாப்டிஸ்ட்ரி.இவை அமைந்திருக்கும் இடம் இத்தாலியின் டஸ்கனி. இதை பியாஸா டெல் டுமோன்னும் சொல்றாங்க. 
பின்னே தெரிவது பிஸா கதீட்ரல். 


பிஸாவைத் தள்ளும்படி போஸ் கொடுத்து அனைவரும் எடுத்துக் கொண்டிருக்க நாமோ பிஸா டவரின் முன் நின்று எடுத்துக் கொண்டோம். 


டவர் சாய்ஞ்சா போதுமா நாமளும் கொஞ்சம் காமிராவை சாய்ச்சு எடுப்போம் :) 

ஏழு அடுக்குகளிலும் விதம் விதமான சிற்ப வேலைப்படுகள் அலங்கரிக்கின்றன. 
முழுக்க முழுக்க மார்பிளால் கட்டப்பட்டது இந்த டவர். 
பெல் டவர் எல்லாமே வட்டவடிவில் கட்டப்பட்டுள்ளன். மேலே ஒரு சிவப்புக்கொடி எக்ஸ்ட்ராவா இருக்கு இங்கே.

டிக்கட் கவுண்டரில் இருந்து. இதுவே ஒரு ஆஃபீஸ் போல இருக்கு. அதிகமில்லை ஜெண்டில் மேன் ஒரு ஆளுக்கு 17 யூரோ எண்ட்ரன்ஸ் டிக்கெட். ஒரு காஃபி 3 யூரோ. மொத்தம் அறுபது யூரோ இதுக்கே காலி. 

இதுக்கெல்லாம் நாமதான் தனியா எண்ட்ரன்ஸ் டிக்கெட் செலுத்திப் போகணும். பிஸா டவருக்கு வர ஒரு குட்டி ட்ராம் மாதிரி ஒரு வண்டி இருக்கு. அதுக்கு மட்டும் ஸ்டார் ட்ராவல்ஸ் பே பண்ணி கூட்டிப் போவாங்க. 


மார்பிள் கட் வேலைப்பாடுகள் அலங்கரிக்கும் இதில் மனித உருவங்கள், மிருகங்களின் உருவங்கள், பூக்கள் என விதம் விதமா இருக்கின்றன. 


அசண்டா பெல், பாக்ஸ்குரஸியா பெல் என்ற இரண்டு தேவாலய மணிகளின் ஓசையும் இங்கேயிருந்து ஒலிக்கும் போது வெகு இனிமை. 

தேவாலையத்தை ஒட்டிய தேவாலய மணிகள் தாங்கிய டவர் என்பதால்தான் இது பெல் டவர். அதோ உயரத்தில் பெல் தெரியுதா. படியில் ஏறும்போது வழுக்கியதாலும், லேசாக தலைச்சுற்றலாக ( சுற்றிச் சுற்றி ஏறியதால் ) உணர்ந்ததாலும் புகைப்படம் எடுக்கலை. 

அந்த இரு மணிகளையும் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கேன். 





அன்றைக்கென்று ஒரே மழை வேறு. கண்ணும் புரியலை. மண்ணும் புரியலை. 


வேக வேகமா பிஸா பெல் டவரில் ஏறி இறங்கியாச்சு. பையர்தான் வீடியோ எடுத்தார். அதைக் கடைசியில் போட்டிருக்கேன். இல்லாவிட்டால் முகநூல் பக்க இணைப்பு கொடுத்திருக்கேன் பார்க்கவும். 


நெருக்கத்தில் ஒரு செல்ஃபி. 

தனியே ஒன்று :) 


கதீட்ரலின் பின்னால். இதைப் பற்றிய மிச்ச விவரங்களை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். 

நாலு பூகம்பத்தைத் தாண்டியும் சாஞ்சாப்புலயே ஸ்டடியா நிற்கும் இந்த பிஸா டவரைப் பார்த்து நாம தெளிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.  விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை என்று இந்த இளகிய மண்ணே பிஸா டவரை விழாமப் பிடிச்சிருக்கு. எனவே செல்ஃபி எடுத்து நாமளும் பிஸாவோட தன்னம்பிக்கையின் அங்கமாயிட்டோம். பின்னொரு இடுகையில் முழுசா விவரம் தர்றேன். 


பிஸா பெல் டவர் வீடியோ. 




1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)