செவ்வாய், 3 நவம்பர், 2020

ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தினருடன்.

///ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் திரு அம்பலவன் புவனேந்திரன் அவர்களும், உபதலைவர் திரு சிறி ஜீவகன் அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வருகை தந்து வாழ்த்தினார்கள். இந்தச் சந்திப்புக்கு வழிகோலிய அன்புத்தோழி ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் , மூன்று நூல்களின் ஆசிரியர், பிரபல வலைப்பதிவர் திருமதி கௌரி சிவபாலன்.  அவருக்கு முதலில் என் நன்றிகள்.

இச்சங்கத்தில் 30 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களுள் தலைவரும் உபதலைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார்கள். ஜெர்மனிக்கு வந்துள்ள தமிழக எழுத்தாளர் என்ற முறையில் எனக்குப்  பொன்னாடை போர்த்திக் கௌரவித்து நூல்கள் அளித்துச் சென்றார்கள்.////

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு.


இதுபற்றி முழுமையாக இங்கே காணலாம். விட்டுப்போன சில புகைப்படங்களைப் பகிரவே இந்தப் பதிவு. 

பொதுவாகப் பள்ளி ஒன்றில் அழைத்துத்தான் சிறப்பு விருந்தினரைக் கௌரவிப்பார்களாம் இவர்கள். ஆனால் நான் ஊர் திரும்ப வேண்டிய காரணத்தால் வீட்டிற்கே வந்து பூங்கொத்துக் கொடுத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து நூல்களும் அளித்தார்கள். 



இதில் செவ்வரத்தை பாதி படித்துவிட்டேன். முழுதும் படித்ததும் விமர்சனம் எழுதுவேன். 
இலங்கையில் 50 எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத்  தொகுத்த நூல் அது. 
எங்கள் சந்திப்புக்கு உறுதுணையாக இருந்த என் மகன்.
சிறிது நேரம் தமிழ்ச்சூழல் பற்றியும், இலங்கை இந்திய ஜெர்மானிய வாழ்வியல் பற்றியும் , தமிழ்,தமிழர்கள் நிலை பற்றியும் கலந்துரையாடினோம். 




மிக இனிமையான மாலையாக அமைந்தது அது. அழகான பூங்கொத்துக்கும் அருமையான நூல்களுக்கும் நன்றி ஜீவகன் சார், அம்பலவன்புவனேந்திரன் சார். ( இவர் ஐந்து நூல்கள் வெளியிட்டு உள்ளார். இவரின் கவிதை நூல் பற்றி ஏற்கனவே நூல் பார்வை வெளியிட்டுள்ளேன். ) அன்பும் நன்றியும் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் , (இந்த நிகழ்ச்சியை எனக்காக நிகழ்த்திய தோழி பிரபல வலைப்பதிவர், மூன்று நூல்களின் ஆசிரியர்,இவரின் இரு நூல்களுக்கு நூல் பார்வை எழுதி உள்ளேன்.  )  கௌசி என்ற கௌரி சிவபாலன். :) 

4 கருத்துகள்:

  1. பதிவைப் பார்த்ததும் ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல் நினைவுக்கு வந்துவிட்டது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அவ்வப்போது அடியேன் தளத்திற்கு வரலாம்... அது தவறில்லை... (!) வாரம் ஒரு பதிவு தான்...

    பதிலளிநீக்கு
  3. அஹா ! நன்றி கீத்ஸ் !!!

    நன்றி டிடி சகோ. நிச்சயம் வருகிறேன். நேரம் கிடைப்பதில்லை. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)