சனி, 5 செப்டம்பர், 2020

தினமலர், தினமணி, குமுதம் வாசகர் கடிதங்கள்.

 தினமலரில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட 110 சிறுகதைகள் ( இதிகாச புராண கதைகள் ) எழுதும் வாய்ப்புப் பெற்றேன். அதற்காக திரு. தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கு நன்றி. அதற்கு ஓவியம் வரைந்து எழில் கூட்டிய ஓவியர்கள் திரு அஷோக் & திரு ரஜினி ஆகியோருக்கும் நன்றி. ! 

நான்கு சிறுவர் மலர்களில் அட்டைப்படமாக என்னுடைய கதைக்கரு இடம் பெற்றது குறித்தும் மகிழ்ச்சி. 

குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமணி ( வாடாமலர் மங்கை என்ற ஆறுதல் பரிசு பெற்ற கதைக்கான வாசகர் கடிதங்கள் ) தினமலர் திண்ணையில் இடம் பெற்ற விமர்சனம் ஆகியவற்றையும் இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன். 


இதிகாச புராணக் கதைகள் நல்ல வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்று கூறிய மணச்சநல்லூர் வாசகி திரு பால அபிராமி அவர்களுக்கு மெத்த நன்றி. 


விலங்குகளின் உள்ளுணர்வை மதித்தால் நாம் ( நகுலன் கதை ) பாதுகாக்கப்படுவோம் என்ற இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் திரு ஆர். ஜானகிராமன் அவர்களுக்கு நன்றிகள். 

திருமூலர் கதையையும் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் திரு ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி. 


நரி பரியான கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர் திரு காசிதாசன் அவர்களுக்கு நன்றி. 

தாடகி கதையையும் பாராட்டிய வேதாரண்யம் வாசகர் திரு ஜானகிராமன் அவர்களுக்கு நன்றிகள். 

நந்தியின் கதையைப் பாராட்டிய திருவம்பநல்லூர் வாசகி திருமிகு செ. விஷ்ணுப்பிரியா அவர்களுக்கு நன்றி. 

சித்திரகுப்தன் கதையைப் பாராட்டிய தக்கோலம் வாசகர் திரு. மு. பயாசுதீன் அவர்களுக்கு நன்றி. 

இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய ஆறுபாதி வாசகி திருமிகு ஆ. மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றி. 

குமுதம் பக்தி ஸ்பெஷலில் மகா சிவராத்திரிக் கோலங்களைப் பாராட்டிய சென்னை வாசகர் திரு த. ரவி அவர்களுக்கு நன்றிகள். 

தினமணி கதிரில் இடம் பெற்ற ( ஆறுதல் பரிசு பெற்ற கதை ) வாடாமலர் மங்கைக்கு இரு வாசகர் கடிதங்கள் வெளியாகி உள்ளன. கதையைப் படித்து நெகிழ்ந்ததாகக் கூறிய காரைக்குடி வாசகர் திரு எல். சிதம்பரம் அவர்களுக்கு நன்றிகள். 

பிறர்க்காக வாழ்ந்த அக்கால மனிதர்கள் பற்றிய சித்திரத்தை உணர்த்தியதாகக் கூறிய சென்னை வாசகர் திரு ஜி. வாசுதேவன் அவர்களுக்கும் நன்றிகள்.  


தினமலரில் வெளியான காதல்வனம் விமர்சனம். நன்றி திரு தேவராஜன் ஷண்முகம் சார் & திரு. ஆகாஷ். 


தினமலரில் அட்டைப்படமாக இடம் பெற்ற நான்கு இதிகாசபுராணக் கதைகள். 

காமதேனு பற்றிய கதை. 

கிருஷ்ணர் பற்றிய கதை. 

சாதுவன் பற்றிய கதை. 


அரிச்சந்திரன் பற்றிய கதை. 


தினமலரில் இடம் பெற்ற விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம். நன்றி திரு தேவராஜன் ஷண்முகம் சார் & திருமிகு சக்தி. 
 


தினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்களில் ஏவுகணை நாயகனான திப்பு சுல்தான் பற்றி இடம் பெற்ற கருத்து. நன்றி தினமலர் திண்ணை & திரு. திருமலை சார். 

தினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்கள் நூலில் இடம் பெற்ற வேலு நாச்சியார் பற்றிய கட்டுரையில் வெட்டுண்ட உடையாளைப் பற்றிய பகுதி வெளியானது. நன்றி தினமலர் திண்ணை & திரு. திருமலை சார். 


இனி எப்போது புத்தகங்கள் தினசரிகள் சரளமாக வரப்போகின்றன எனத் தெரியவில்லை. இதேபோல் வாசகர் வரவேற்பும் கடிதங்களும் எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன். நன்றி அனைவருக்கும். அனைத்துக்கும். :) 

3 கருத்துகள்:

  1. என்னதான் ப்ளாகுகளில் எழுதினாலும் பத்திரிகைகளில்பிரசுரம் ஆவதில் வரும் மகிழ்ச்சியே தனி

    பதிலளிநீக்கு
  2. நான் எழுதி இதழ்களில் வெளியான கடிதங்களை இன்றுவரை பாதுகாத்து வருகிறேன். உங்களின் எழுத்துக்கு வந்த வாசகர் கடிதங்களைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. மென்மேலும் உங்கள் எழுத்துகள் சாதனை புரிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆம் பாலா சார். ! உண்மை :)

    நன்றி ஜம்பு சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)