புதன், 30 செப்டம்பர், 2020

எதிஹாடில் பதிநான்கு மணிநேரம்

 ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து செல்லப் பல்வேறு விமானங்களும் பல்வேறு விமானத்தளங்களும் இருந்தும் நாங்கள் பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அங்கே எங்கள் பெரிய மகன் வேலை செய்து வருகிறார். 

அபுதாபி வழியாகச் செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸில் டிக்கெட்டும் வாங்கியாச்சு. விசா, டிக்கெட், இன்சூரன்ஸ் எல்லாம் உட்பட ஒரு நபர் சென்று வர ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வரை செலவானது. சின்ன மகன் அழைத்துச் சென்றார் என்பதால் எனக்கு இதன் செலவு விபரங்கள் எல்லாம் சரியாகத் தெரியாது :) :) :)  


ஜெர்மனி சென்றாச்சு. இருமாதம் தங்கி ஐரோப்பா டூர் எல்லாம் முடித்து ஜெர்மனியில் இருந்து திரும்பும்போது எதிஹாடில்  ஏறியபோது எடுத்த படம் இது. 
சும்மா பறக்கும் பஸ் மாதிரி ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு , மூன்று, இரண்டு என ஏழு சீட்டுகள்.  நடக்கும் பாதை கூட ட்ராலி தள்ளும் அளவுதான். 

நான் பார்த்ததிலேயே மிகப் பிரம்மாண்டமான ஃப்ளைட் என்றால் அது எதிஹாட்தான். கிட்டத்தட்ட 270 பேர் வரை செல்லலாமாம். குறைந்தது 30 இல் இருந்து 40 வரிசையாவது இருக்கும். 


புறப்பட்டவுடன் எட்டரை மணிக்கு ஒரு உப்பு பிஸ்கட்டும் தண்ணீரும் தந்தார்கள். அது பின்னே அப்லோட் ஆகி இருக்கு. இது ஏழெட்டு மணி நேரம் கழித்துக் கொடுத்த உணவு. ஃப்ரைட் சிக்கன், மசித்த உருளை, அவித்த காரட் பீன்ஸ், பன், ஜூஸ், சாஸ். தண்ணீர், 

ஒவ்வொரு சீட்டுக்கும்முன்னே டிவி உண்டு. என் எதிரே இருந்த டிவியில் டிஸ்னியைத் தட்டி அலாவுதீன் பார்த்தேன். 
இதுதான் முதலில் கொடுத்தது. 

அதுக்குள்ளே இண்டர்வெல் போல வை ஃப்ளை பற்றின விளம்பரம் பார்த்தேன். மிக அழகு. 

எனக்கு பொதுவாக ஃப்ளைட்களில் பிடித்த அம்சம். நாம் எங்கே எந்த நாட்டின் மீது பறந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டும் மேப்.

டுசில்டார்ஃப், க்ரேஸ், பெல்க்ரேட், இஸ்தான்புல், குவைத்சிட்டி மேலாக அபுதாபியை அடைகிறது இந்த ஃப்ளைட். 

குவைத் சிட்டி, பஹ்ரைன், அபுதாபி என்று காட்டுகிறது இந்த மேப்

டைம் டெஸ்டினேஷன், லோகல் டைம், கிளம்பி எவ்வளவு நேரம் ஆகுதுன்னு அனைத்தும் இதில் தெரியும். மேப், கனெக்டிங் கேட்,மெக்கா பாயிண்டர் என அனைத்தும் காட்டுகிறது. 
முக்கால்வாசி தூரத்தைக் கடந்துவிட்டோம். :) இன்னும் சிறிதுநேரத்தில் அபுதாபியில் லேண்டிங். ஐந்தரை மணி நேரப்பயணம் என்று பேர். ஆனால் காலை எட்டரைக்கு ஏறி மாலையோ இரவிலோ அபுதாபி வந்தோம். 2,934 மைல் தொலைவு ! மணிக்கு 500 கிமீ வேகம். 
மேலேயே டுசில்டார்ஃப் டு அபுதாபி எவ்வளவு தூரம், அதை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்று காட்டுகிறது. 

ஃபோட்டோக்கள் மாறி மாறி அப்லோட் ஆனதால் இப்படிக் குளறுபடிகள். டைம் லாக் வேற இல்லையா அப்படித்தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள். இதோ அபுதாபியில் இறங்கி பெங்களூரு செல்லும் அடுத்த எதிஹாடுக்காக வெயிட்டிங்.


இதோ அபுதாபியில் 7. 31 க்கு லாண்ட் ஆயிட்டோம். 



அப்புறம் அபுதாபியில் ஃப்ளைட் ஏறி பெங்களூருக்கு வந்து சேரும்போது அதிகாலை மூன்று மணி. ஜெகஜ்ஜோதியாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது ஏர்போர்ட்டில் . அதைவிட ஜெகஜ்ஜோதியாக வரவேற்றார்கள் கணவரும் மூத்த மகனும். 

எனக்கு வீல் சேர் அரேஞ்ச் செய்திருந்ததால் ஜில்லென்று அமர்ந்து வந்தேன் . கொஞ்சம் தயக்கமாகக் கூட இருந்தது ஏனெனில் என் வயது உள்ள எல்லாரும் க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். :) இதுவரை கணவர் பையன்களோடு சென்றதால் அவர்களே கூட்டிச் சென்று விடுவார்கள். நானே வந்து விடுகிறேன் என்று சொல்லியும் எங்கே தவறான கேட்டுக்குப் போய் அலைந்து தேடுவேனோ என்னவோ என்று வீல் சேர் அரேஞ்ச் செய்து விட்டான் பையன். அவர்களுக்குக் கொடுக்கத் தனியாக இரண்டு ஐந்து யூரோக்களையும் கொடுத்தனுப்பி இருந்தான். என் செலவுக்காகக் கொடுத்த யூரோக்களை செலவழிக்காமல் அப்படியே எடுத்து வந்துவிட்டேன் :) 

2 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)