புதன், 23 செப்டம்பர், 2020

ஓபர்ஹௌஸனில் ஒரு விருந்து

ஓபர்ஹௌஸனில் இருக்கும் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும், அவர் மனைவி லைலாவும் மிகவும் தன்மையானவர்கள். முதல் முறை என்னைப் பார்க்க வரும்போதே அவர் எங்களுக்கு இனிப்புகளும் வடையும் கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்கள். 

நான் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகனிடம் அவர் இல்லத்துக்குச் சென்று வர வேண்டும் எனக் கேட்டேன். தினமும் இருவரும் நடைப்பயிற்சி செல்வோம். ஆரோக்கிய உணவுகள், திருப்புகழ் பாராயணம், சாய் வரலாறு படித்தல்,மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து கொடுத்தல், அளவளாவுதல், ஹம் காமாட்சி அம்மன் கோவில், மகனது நண்பர்களின் வீட்டில் விருந்து, சாய் பூஜைகள், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், நிம்மி சிவா,  சந்திரகௌரி சிவபாலன் வீட்டிற்குச் சென்றது என நாளும் பொழுதும் ஓடி விட்டது. இவர்கள் எல்லாருமே தங்கள் அன்பினால் எங்களை மூழ்கடித்து விட்டார்கள். 

எனவே ஊருக்குச் செல்வதற்கு  முந்தைய வாரத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில்   ஓபர்ஹௌஸன் சென்று லைலா மேடத்தின் விருந்தில் களித்து அவர்கள் என் மகனுக்காகச் செய்து அனுப்பிய இனிப்பு பான்& இனிப்பு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி வந்தோம். 



கீழிருந்து மேலாக ஃபோட்டோக்கள் அப்லோடியதால் உங்களுக்கும் லைலா மேம் கொடுத்த பான் & சிப்ஸ். எடுத்துக்கொள்ளுங்கள். 

டூயிஸ்பர்க் டு ஓபர்ஹௌஸன் செல்ல எஸ்ஸன் செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். இந்த ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் 1847 இல் ஆரம்பிக்கப்பட்டதாம் !

ஓபர்ஹௌசன் எம்ஷயர் என்ற நதியின் கரையில் அமைந்திருக்கு. ஓபர்ஹௌஸன் என்ற கோட்டையின் பெயரால் இந்த ரயில்வே மெயின் ஸ்டேஷனும் ( ஓபர்ஹௌஸன் ஹாபனாஃப் ) , ஓபர்ஹௌசன் நகரமும் பெயரிடப்பட்டிருக்கு !

இங்கே அப்போ நிலக்கரிச் சுரங்கங்களும் இரும்பு மில்களும் இருந்ததால் பெருவாரியான மக்கள் இங்கே வேலை செய்ய வந்து போனாங்களாம். இரண்டாம் உலகப் போரில் இங்கே இருந்த செயற்கை எண்ணெய் ஆலை குண்டு வீச்சுக்கு ஆளாக இருந்ததாம். இப்போவெல்லாம் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் ( குறும்படத் திருவிழா ) ஃபெஸ்டிவல் எல்லாம் இங்கேதான் நடக்குதாம். !. 

எனவே பிரசித்தி பெற்ற நகரத்துக்கு எங்களைத் தனது காரில் அழைத்துப் போக ஓபர்ஹௌஸன் ஹாபனாஃபுக்கு வந்திருந்தார் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள். 

உணவுக்குப் பின் சாப்பிட்ட பழவகைகள். மிக அருமை. 

சிக்கனேதான். எல்லாவற்றிலும் காரம் கம்மி :)



ஃப்ரைட் ரைஸ். 
கத்திரி மசால் என நினைக்கிறேன். 
அவித்த முட்டை. 
எறால் - ப்ரான்ஸ். 
கோழி மசால். 
குழாய்ப் புட்டு. 
அட கூல் ட்ரிங்ஸ்தானப்பா. :) 




லைலாமேம் வீட்டை அடுக்கி வைத்திருந்தது வெகு நேர்த்தி. 

இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். அனைவரும் அங்கேயே பயின்று அங்கேயே காதல் கடிமணம் புரிந்திருக்கிறார்கள். மருமகள் இருவருமே ஜெர்மனிப் பெண்கள். 


இது ஓபர்ஹௌசன் ஹாபனாஃபில் ( மெயின் ரயில்வே ஸ்டேஷன் ) இருந்த அழகிய சிற்பம், குடும்பம் அதுவும் கூட்டுக்குடும்பமாக இருக்கும் இந்தச் சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. 

திருமண ஜோடி, மூன்று பிள்ளைகளுடன் தம்பதியர், அதன் பின் முதுமையில் தனித்து வாழும் தம்பதிகள் என யதார்த்த வாழ்வைச் சித்தரிக்கும் அழகான சிற்பம் இது. 

ஓபர்ஹௌசன் ரயில்வே ஸ்டேஷனில் கந்தையா முருகதாசன் சார் திரும்பக் கொண்டு வந்து விட்டார். 


அதன் பின் மறுநாள் சாய் பூஜைக்காக செய்த சேமியா பாயாசம் உங்கள் அனைவருக்கும். :)  அருமையான விருந்துக்கும் அன்புக்கும் நன்றி லைலா மேம் & கந்தையா சார். நம் தமிழ்ச் சொந்தங்களான நிம்மிசிவா, பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், சிவோஜினி மேம், லைலாமேம், கந்தையாசார், கௌசி ஆகிய அனைவருக்குமே என் மகனும் அவர்கள் மகன் போலத்தான் எனவே அவனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி வந்தேன். :) அனைவரின் அன்புக்கும் நன்றி :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)