வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

குவாலியர் சூரியனார் கோவிலில் சூரிய காந்தி.

குவாலியர் சூரியனார் கோவிலில் கோவிலே சூரியனின் ரதம் போல் அமைந்திருக்கும் அதிசயத்தோடு பல ஏக்கர் தூரத்துக்கு தோட்டமாய்க் காட்சி அளிக்கிறது. அங்கே யோகாப்யாசம், நடைப்பயிற்சி, தியானம் செய்பவர்களை அதிகாலையில் அதிகம் காணலாம். 

குவாலியர் நகரில் மொரார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். அதன் முன்புறம் இது. உள்ளே நீள் நடையில் சென்றால் பக்கவாட்டில் கோவில் இருக்கிறது. சுற்றிச் சென்று மேலேறினால் சூர்யப் ப்ரகாசத்தில் செந்நிறமாய் ஜொலிக்கிறது கோவில்.

எதிரே பசுமையாய் தோட்டம். லேசாய் வெம்மையோடு இருக்க மயில்களும் புறாக்களும் அகவுகின்றன, ஊடுகின்றன. 


கல் பாவிய நீண்ட நடை. நடைப்பயிற்சி செய்வோருக்கு உறுதுணையாகிறது. 

இந்த ப்ளாகர் மாறியதில் இருந்து ஃபோட்டோஸ் போட்டால் தலைகீழாக அப்லோட் ஆகிறது. எனவே எனக்காக கீழே இருந்து மேலே ஒருமுறை போஸ்டைப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். 

நாம் கடைசியாக அப்லோட் செய்வது மேலேயும் முதலில் செய்வது கீழேயும் வருது. இதுக்கு தீர்வு யாராகிலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 


தோட்டம் முழுதும் துள்ளி விளையாடும் அணில் குஞ்சுகள் 

நடைபாதை முடிவில் இப்படி ஒரு புல்வெளிப் பூங்கா அழகான தோரண வாயிலோடு வரவேற்குது. 


தோட்டத்துச் செடிகள். 


புல்வெளியும் சூரிய ஒளியும் 

டேலியா கினியா வகையறாக்கள். 

ரோஸாப்பூ. 


வெள்ளைசாமந்தி போல் ஒன்று. 

எங்கே சூரிய காந்தியைக் காணோம்னு நீங்க கேப்பீங்கன்னு தெரியும்.இதோ வருது :)


இவை மூன்றும்சூரிய காந்திச் செடிகள். 

மிக அழகாக விரிந்து விகசிப்போடு சூரியன் வரும் பாதையை எதிர்நோக்கி முகம் மலர்ந்திருக்கின்றன. 

மற்ற மரங்களும் செடிகளும் கொடிகளும். குரோட்டன்ஸுகளும். 

பார்டர் செடிகளும் டிசைன் க்ரோட்டன்ஸூகளுமாக மிக அழகாக இந்த ( நந்த) வனத்தைப் பராமரிக்கிறார்கள். 

புறாக்களின் அக் அக் அக் என்ற ஒலி. தானியம் கொத்துகின்றன. சூரியனையும் சேர்த்துத்தான் :) 

தென்னையில்/அலங்காரப் பனையில் அமர்ந்து அகவும் மயில். 


பனையின் தோகைகளும் மயிலின் தோகைகளும் போட்டி போட்டுக் கொண்டு மின்னுகின்றன. 

தலைவர் உள் நுழைகிறார். தூரத்தே ஒரு நுழைவாயில் தெரியுது பாருங்கள். அங்கே சென்றுதான் திரும்பி கோவிலுக்குள் செல்ல வேண்டும். 

சரி நீங்களும் ஒரு ரவுண்ட் காலாற நடந்து போய் அணில், மயில்,புறா எல்லாம் பார்த்துட்டு சூரியனையும் வணங்கிட்டு வாங்க :) 

டிஸ்கி :-

இதையும் பாருங்க.

3 கருத்துகள்:

  1. ஒரு விதத்தில் திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆசிரமத்தை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
  2. நானும் இங்கே சென்றிருக்கிறேன். நல்ல/அழகான இடம். படங்கள் மொத்தமாக பதிவேற்றினால் இப்படி பிரச்சனை வருகிறது. ஒவ்வொன்றாக பதிவேற்றும்போது பிரச்சனை வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. இருக்கலாம் ஜம்பு சார். நாங்கள் ஒருமுறை கிரிவலம் சென்றபோது ஆசிரமத்தைப் பார்த்தோம். உள்ளே சென்று பார்க்கவில்லை.

    ஐடியாவுக்கு நன்றி வெங்கட் சகோ. முயற்சிக்கிறேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)