திங்கள், 20 ஜூலை, 2020

பிதார் - மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும்.

ஏழு தர்வாஜாக்கள் அமைந்திருக்கும் பிதார் கோட்டையில் நாம் இப்போது ஏழாவது தர்வாஜாவிலிருந்து திரும்பி முதல் தர்வாஜா வரை வரப்போகிறோம். முன்பே தர்வாஜாக்களைப் (வாயில்கள் )  பார்த்துவிட்டதால் இப்போது அங்கே மினி கோட்டைகளைப் போலக் காட்சி அளிக்கும் களஞ்சியங்களை, கருவூலங்களைப் பார்வையிட்டு வருவோம்.

மண்டூ தர்வாஜா, கல்மகடி தர்வாஜா, டெல்லி தர்வாஜா, கல்யாணி தர்வாஜா, கர்நாடிக் தர்வாஜா எனச் சில வாயில்களுக்குப் பெயர். இவற்றில் நாம் கர்நாடிக் தர்வாஜா பகுதியிலிருந்து திரும்பி மண்டூ தர்வாஜா வரப்போகிறோம் .

இங்கே காபா முறையில் கட்டப்பட்ட மினி கோட்டை ஒன்று காட்சி அளிக்கிறது.

இக்கோட்டையில் மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும் நான் கண்ட வித்யாசமான காட்சி.


பாஸ்டியன்ஸ் எனப்படும் மதிற்சுவர்கள். டைனோஸரின் முதுகெலும்பு போல மிக விரிவானவை, அடுக்கடுக்கானவை.




ஏதோ ஒருதர்வாஜாவின் முன்னால் தலைவர் நிற்கிறார்.


இந்த பாஸ்டியன்ஸ் மிகப் பரந்து விரிந்து இருக்கின்றன. நான் பார்த்த கோட்டைமதில்களிலேயே பிதார் கோட்டை மதில்தான் மிகப் பரந்தது. பல கிலோமீட்டர் சுற்றளவு இருக்கலாம்.


நீளமாகத் தெரியும் அமைப்பில் வீரர்கள் ஒளிந்து நின்று கொண்டு மேலேறி வரும் எதிரிப் படையினர் மீது அம்பு வீசுவார்களாம்.

அடைபட்ட வாயில்.

கம்பிக் கதவுளகோடு ஒரு வாயில்

அடுக்கடுக்கான கற்சுவர்கள்.

சார்நிலைக் கருவூலம் மாதிரி ஒரே அடர்த்தியான வட்ட வடிவ கோட்டை அமைப்புகள்.

தூரத்தே தெரியும் மதிற்சுவர்களையும் பாருங்கள். அம்மாடியோ எத்தனை ஏக்கர் நிலப்பரப்போ இக்கோட்டை.



மாடங்கள் அல்லது மதில் பொந்துகள்.

தூரத்தே தாரகேஷ் மஹால் அல்லது சோலா கம்பா மாஸ்கின் பின் பகுதி.

எத்தனை நீண்ட நெடிய சுவர்கள்.


இவை எல்லாம் கோட்டைக்குட்பட்ட பகுதிகள்.

கோட்டைக்குள்ளே ராஜபாட்டை.

கருவூல அமைப்பில் கோட்டை.

இக்கோட்டைக்குள் எதிரிகள் நுழையவே முடியாது. எதிரிகளை ஏமாற்றவென்றே சிக் சாக் அமைப்பில் கட்டப்பட்டவை இதன் நுழைவாயில்கள்.

சரிந்துகிடக்கும் ஒரு கல் பாத்திரம்.! மிருகங்களுக்கு நீர் காட்டப் பயன்பட்டிருக்குமோ என்னவோ. சாய்வாகக் கிடக்கிறது.
பெர்சிய ஈரானியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை.


பாருங்கள் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டடுக்கு மதிற்சுவர்கள். ! மேலே கண்காணிக்க மாடங்கள் !

சிக் சாக்காக இஸட் போலத் திரும்பி வெளியேறி விட்டோம்.

வெளியேயும் இரட்டை அடுக்குக் கோட்டைச் சுவர்கள். நடுவில் அகழி. அதுவும் மூன்றடுக்கு அகழி. சரியாய் புகைப்படமெடுக்க முடியவில்லை. தோட்டங்கள் , மசூதிகள் , மஹல்கள், வளைவுகள் , வாயில்கள் என பிரம்மாண்டமாய் மிரட்டும் கோட்டை இது.


உயரமான மதிற்சுவர் ஒன்று. வெளியே அகழிக்கான மதிற்சுவர் இன்னொன்று. எனவே இரண்டு அடுக்குப் பாதுகாப்பு இக்கோட்டையில் . மீறி வந்தால் எண்ணெய்க் கொப்பரை, வில் , அம்பு அந்தக்காலம். அதன்பின் துப்பாக்கிக் குண்டுகளிலோ அல்லது அங்கே இருக்கும் 36 பீரங்கிகளில் ஒன்றிலோ மாட்டிக் கொள்ளவேண்டியதுதான்.


அகழியின் குறுக்காகக் கோட்டைக்குப் போகும் பாதையைப் பாருங்கள். கோட்டையிலும் எத்தனை கண்காணிப்புத் துளைகள். !

மூன்றடுக்கு அகழி. ஆனால் காரிலிருந்து பயணத்தில்  சரியாய் எடுக்க முடியவில்லை.


இரட்டை அடுக்கு மதிற்சுவர்கள் அருகி சிதைந்து காணப்படுகின்றன. அகழி எங்கும் மரம் செடி கொடிகள்.நீர் வற்றி விட்டது. எம்மாம் பெரிய கோட்டை. இதை விட்டு விட்டு இதை ஆண்டவர்கள், இதில் வாழ்ந்தவர்கள்  எல்லாம் எங்கே போனார்கள்.


அந்தக் காலத்திலேயே இரண்டடுக்கு மூன்றடுக்கு மாளிகையாய் சோபித்துத் திரிந்த கோட்டை இன்று சோபிதம் இழந்து வாடிய மலராய் சருகாய்க் கிடக்கிறது.

எத்தனை அடுக்குக் கோட்டைச் சுவர்கள் கட்டி என்ன. மனிதர்கள் மண்ணோடு மண்ணாய் மட்டும் போவதில்லை. கல்லோடும் கல்லாகச் சிதைந்துதான் போகிறார்கள்.

ஆனால் இன்றும் எவ்வளவு சிதைந்தும்  இவை பஹாமனி அரசர்களின் ஆட்சிக்குச் சான்றாய் நூற்றாண்டுகள் தாண்டியும் நிற்கின்றன.


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?! 

6. பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

7. ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

3 கருத்துகள்:

  1. மிக நேர்த்தியான பயணக்கட்டுைரை

    பதிலளிநீக்கு
  2. ஆம் டிடி சகோ

    நன்றி கஸ்தூரி ரங்கன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)