புதன், 1 ஏப்ரல், 2020

”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.

இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,
பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.


என்னுரையில் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தேன் ( களஞ்சியத்தோடு நீங்கள் மட்டுமல்ல நாங்களும் வளர்ந்தோம். நமது மண்வாசம் இதழும் வளர்ந்தது. எங்களை எழுதவும் உங்களைப் படிக்கவும் வைத்த நமது மண்வாசத்தின் ஆசிரியர் குழாமுக்கும், வாசிமலை சார் , திருமலை சார் வெங்கடேசன் சார், கிருஷ்ணமூர்த்தி சார் மற்றுமுள்ள லே அவுட், புகைப்பட ஆர்டிஸ்ட் ஆகியோருக்கும் நன்றி எனச் சொன்னேன். மேலும் என் குழந்தைகள், கணவர் ஆகியோருக்கும் நன்றி சொன்னேன். களஞ்சியம் தலைவி சின்னப்பிள்ளை அம்மாவிடமிருந்துதான் தலைமைப் பண்பையும் ஆளுமைப் பண்பையும் கற்றோம். அவர்கள் அன்று விதைத்த விதைகள் இன்று எங்கள் கண்முன்னே விருட்சங்களாகி அமர்ந்திருக்கிறீர்கள்.டாக்டர் நல்லினி அருளுக்குப் பெண்களின் அமோக ஆதரவு இருக்கிறது. எனவே அனைத்துப் பெண்களும் தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும். வருடம் ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனது மகளிர் தின வாழ்த்துகள் என் சகோதரிகளுக்கு எனச் சொன்னேன் )

மதுரை தானம் அறக்கட்டளையின் மைய அலுவலகத்தில் சர்வதேச பெண்கள் தின  விழா கொண்டாடப்பட்டது. எனது பதினோராவது நூலான " பெண் அறம்" மருத்துவர் நல்லினி அருள் அவர்களால் வெளியிடப்பட்ட து. களஞ்சியத்தின் தலைவி சின்னப் பிள்ளை அம்மா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது இந்நூல் வெளிவர உறுதுணையாய் இருந்த நமது மண்வாசம் ஆசிரியர் திருமலை சார் அவர்களின் உரையில் ஒரு பகுதி.



இனி நிகழ்வின் புகைப்படங்கள்.

களஞ்சியம் உறுப்பினர் 300 பேரை எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் 650 பேர் வந்திருந்தார்கள்.



சிறப்பு விருந்தினர் பானுவுடன்.

மருத்துவர் நல்லினி அருள் சுகம் என்ற செவிலியர் குழுவுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். கூட்டத்தில் இருந்த வளரிளம் பெண்கள்  நல்லினி அருள் பெயரைச் சொன்னதும் உரக்கக் கரகோஷம் மற்றும் ஒலி எழுப்பி வரவேற்றனர். சிங்கப்பெண் நல்லினி அருள்.


மருத்துவர் நல்லினி அருள் வெளியிட களஞ்சியம் தலைவி சின்னப்பிள்ளை அம்மா பெற்றுக் கொண்டார்கள். வாசிமலை சார், திருமலை சார், சாந்தி மதுரேசன் மேடம், மகேஸ்வரி மேடம், உமாராணி மேடம், பானு ஆகியோரும் பெற்றுக் கொண்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் நல்லினி கொண்டு சென்று கொடுத்தது வெகு அழகு.


















எனது பதினொன்றாவது நூலுடன் சிறப்பு விருந்தினர்கள். இது நமது மண்வாசம் வெளியிடும் மூன்றாவது நூல்.


களஞ்சியம் அலுவலர் பாண்டிமீனா அவர்களுடன்.  களஞ்சிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வைத்துள்ளனர். உலக உருண்டையும் அதை ஒட்டி மகளிரின் ப்ரகாசமான வளர்ச்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் அலங்காரக் கும்பம்  எல்லாம் ஒவ்வொரு களஞ்சியம் பிரிவிலிருந்தும் தலைவிகளால் கொண்டு வரப்பட்டது. எழுச்சிப் பெண்களின் முன்னேற்றம். சிங்கப் பெண்கள்.


இவள் நந்தினி. குட்டிச் சிங்கப் பெண். மஞ்சளும் குங்குமமும் என்ற எனது நூலைப் படித்து அதில் வைக்கப்பட்ட வளரிளம் பெண்களுக்கான தேர்வில் முதலிடம் பெற்றவள்.


நன்றி நமது மண்வாசம், களஞ்சியம், தானம் அறக்கட்டளை, திருமலை சார்.

4 கருத்துகள்:

  1. பெண் அறம் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சகோதரி...

    காணொளி ஏனோ வரவில்லை...

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி மனோ மேம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)