திங்கள், 17 பிப்ரவரி, 2020

மஞ்சளும் குங்குமமும் - 300 மாணவிகளும்.

பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது "மஞ்சளும் குங்குமமும்" நூல். இது எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் எழுதியது. இந்த நூல் மாணவிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களின் வாசிப்புக்காக இந்த நூல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நூல் குறித்து மாணவிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 300 பேர் இந்தத் தேர்வினை எழுதினர். அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தானம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வான "வாக்கத்தான் 2020" நிகழ்வின்போது பரிசு வழங்கப்பட்டது. மாணவியர் பங்கேற்று விழா மேடையில் நூல் குறித்தும் பேசினர். இந்த ஆண்டு வாக்கத்தானின் மையக் கரு "பெண் என்னும் பேராற்றல்". அதில் மாணவியர் பங்கேற்பு என்பது மிகப் பொருத்தமானது.

-- நன்றி திருமலை சார் & நமது மண்வாசம்.










மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் என்ற எனது நூல் விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள ( வளரிளம் பெண்கள் குழு - பெண்கள் சுய உதவிக்குழுவின் அங்கம் ) மாணவியர்க்கு சென்றவாரம் வழங்கப்பட்டு அதில் தேர்வு நடத்தப்பட்டது . 300 மாணவியர் அந்நூலைப் படித்து விடையளித்தமை வியப்பளிக்கச் செய்தது :)

வாழ்த்துக்கள் நம்பிக்கை நாயகிகளே.. நாளைய பாரதங்களே. 


மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் :- நமது பாரம்பர்ய விஷயங்களை அதன் மூலத்திலிருந்து அறியும் முயற்சியாகவும் தற்கால அறிவியலோடு ஒப்பு நோக்கியும் அதன் பயன்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக எழுதப்பட்டது இந்நூல்.


மதுரை வைத்தியநாதபுரம் கென்னட் தெருவில் உள்ள தானம் அறக்கட்டளையின் நமது மண்வாசம் அலுவலகத்தில் கிடைக்கிறது. பிரிண்டிங் விலையில் பெறலாம். விலை ரூ. 60/-


அமேஸானிலும் கிடைக்கிறது.

https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B07PRPLMPH?fbclid=IwAR2N5VYjYsxlP74M8q2rkHD7NVDstVsxO_HQI8XRSg21Jj8AHXcBLfC-9hs

விலை ரூ. 49/-

6 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி. தொடர்ந்து அசத்திக்கொண்டே இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு. எழுத்தும் சேவையும் தொடரட்டும்!

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது மஞ்சளும் குங்குமமும் – 300 மாணவிகளும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... மகிழ்ச்சி.

    தொடரட்டும் உங்கள் படைப்புகளும் சிறப்புகளும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்

    நன்றி டிடி சகோ

    ந்ன்றி ஜம்பு சார்

    மிக்க நன்றி சிகரம் பாரதி. நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)