புத்தகங்களைப் பராமரிப்பது குறித்து ஜெர்மானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். டூயிஸ்பர்க், இம்ஷ்லிங்க் சிட்டி லைப்ரரிக்கு மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது அங்கே இருந்த இரு பெண் லைப்ரரியன்களும் ரிடர்ன் வந்த புத்தகங்களை டிஷ்யூ மூலமாக சுத்தமாகத் துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். டூயிஸ்பர்க் இம்ஷ்லிங்கில் இருக்கும் சிட்டி லைப்ரரி மிக அழகானது. DUISBURG STADTBIBLIOTHEK. ( ஜெர்மனியில் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி )
வந்த தினத்தில் இருந்து பல்வேறு ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் இந்த லைப்ரரியும் புத்தகப் பராமரிப்பும் இங்கே வருகை தந்து வாசித்த குட்டீஸ்களும் பிரமிப்பூட்டியதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை இளஞ்சிறார்களிடம் விதைக்கும் ஜெர்மானியர்களின் திறம் வியக்கத்தக்கது.
வாசிப்பை ஊக்குவிக்க புக் கிளப், ஆசிரியர்கள் மூலம் புத்தகப் பரிந்துரைகள், புக் பைக் மூலம் மக்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்த்தல், குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிக்கச் செய்தல் ஆகியவற்றோடு சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது. சில வருடாந்திரத் திட்டங்களும் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. IKIBU -
ட்ராம், ட்ரெயின் ஆகியவற்றில் கூட புத்தகங்களுடன் பயணிக்கும் மக்களை நீங்கள் காண முடியும்.
வருடத்துக்கு 15 யூரோ செலுத்துவதன் மூலம் இந்த நூலகத்தில் அங்கத்தினராகலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம்.
மிக அழகான இந்த லைப்ரரியை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம் வாங்க. அநேகமா எல்லா புக்கின் தலைப்பையும் படிக்க முடியும் . ஏன்னா ஓரளவு ஜெர்மனும் ஆங்கிலம் போல் இருப்பதால் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனா புரியாது :) இங்கே ஆங்கிலப் புத்தகங்களே கிடையாது என்பதை அந்த ஜெர்மனி நூலகர் பெண்மணி சொன்னார்.
இது முகப்புத் தோற்றம்.
லோக்கல் பத்ரிக்கைகள் ஸூகுண்ட் - ஃப்யூச்சரைப் பற்றிக் கூறுகிறது. ஸ்டேட் பனோரமா, ரெயினிஷ் போஸ்ட்.
மருமகள் மொழி பயின்றாலும் இன்னும் சரளமாகப் பேச புத்தகங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். :)
சமையல், பெண்கள், அழகுக் குறிப்புகள், வாழ்க்கை முறை.
ஹாரி பாட்டர் போன்ற டிவிடிக்களும் கூட அணிவகுக்கின்றன.
வண்ணங்கள் குலையாத புத்தகங்கள்.
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் செக்ஷன்.
பெரியவர்களும் கூட சௌகர்யமாக அமர்ந்து வாசிக்கலாம்.
ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸும் இருக்கு.
இந்த குழந்தைகள் செக்ஷனில் அநேகம் காமிக்ஸ்தான்.
குழந்தைகளுக்கென குட்டி டேபிள் சேர்களும் புத்தகங்களும் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. பக்கமாக ரஜாய் போன்ற மெத்தைகளும் விளையாட்டுப் பொருட்களும் கூட.
குழந்தைகள் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கின்றனர் என்பதைத் தவிர எந்தப் பக்கத்தையும் மடக்குவதில்லை, கிழிப்பதில்லை, கிறுக்குவதில்லை. !!!
பொம்மைகள்.
குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ராக்குகளும் புத்தகங்களும்.
இதுதான் இண்டர்நேஷனல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கான அறிவிப்பு. ( 2017 ஆம் ஆண்டுக்கானது )
ஒவ்வொரு வருடமும் நவம்பரில் நடக்கிறது இந்த சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சி.
ஆயிரக்கணக்கான நூல்களை அழகுற அடுக்கி வைத்திருக்கும் பாங்கு வியக்க வைத்தது.
விதம் விதமான புத்தக ராக்குகள்.
அம்மாவுடன் புத்தகம் வாசிக்க வந்த குழந்தை. காமிக்ஸ் புத்தகங்களை திருப்பித் திருப்பிப் பார்த்தது :)
அம்மாவுடன் புத்தகத் தேடலில் ஈடுபடும் சிறுவன்.
புத்தகங்களை எண்ட்ரி போடுமிடத்தில் குழந்தைகள் விரும்பும் பொம்மை லெகோ ( LEGO ) உருவங்கள்.
இன்னொரு கவுண்டரில் குட்டி பாண்ட், தவளை, பறவை முட்டை, தாவரம், கரடி பொம்மைகள்.
மிக ரசனையான நூலகம்.
இருந்த நேரத்தில் உமன் என்ற மாகஸீனைப் புரட்டிப் பார்த்தேன். புரிந்தும் புரியாமலும் இருந்தது ஜெர்மன் மொழி. தொடர்ந்து படித்தால் கற்றுக் கொள்ளலாம் என்றும் தோன்றியது !
மருமகளுக்கு லைப்ரரி கார்ட் இருந்ததால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ( ஃபோட்டோ வழக்கம்போல் தடுத்துவிடுவார்களோ என்று அவசர கதிதான் :)
ஜெர்மனி வந்தால் இம்ஷ்லிங்கில் இருக்கும் இந்த நூலகத்துக்கும் ஒரு முறை போய் வாருங்கள். வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பண்பட்ட குடிமக்களாக இருப்பார்கள், அச்சமூகம், அத்தேசம் அனைத்திலும் விரைந்து முன்னேறும் என்பதில் ஐயம் சிறிதுமில்லை.

IKiBu - Internationale Kinderbuchausstellung in Duisburg
நவம்பர் 2019 இல் இது நடைபெறப் போகிறது.

மொழி தெரியாதவர்களுக்குக்கூட வாசிக்கும் ஆசை வந்துவிடும்போலுள்ளது.
பதிலளிநீக்குஅழகான நூலகம். எத்தனை சிறப்பாக பராமரிக்கிறார்கள். நம் ஊரில் நூலகங்கள் இருந்தாலும், பராமரிப்பில் ரொம்பவே சுணக்கம். மக்களும் நூலகங்களில் ஒழுங்காக நடப்பதில்லை.
பதிலளிநீக்குசிறப்பான நூலகம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.
ஆம் ஜம்பு சார்
பதிலளிநீக்குஉண்மைதான் வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!