ஞாயிறு, 23 ஜூன், 2019

வாசிப்பை சுவாசிப்போம்.

வாசிப்பை சுவாசிப்போம்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ . உடற்பயிற்சி உடலுக்கு நயம் பயப்பதைப் போல வாசிப்பு மூளையைப் புத்துணர்வாக்கும் என்பது பொன்மொழி.
இன்றைய இளம் தலைமுறையினர் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் வரும் நாலுவரி மெசேஜை பார்வேர்டு செய்வதும் அதைப் படிப்பதுமே பொழுதுபோக்கு, இலக்கியம் என்றிருக்கிறார்கள். இது நுரையை மட்டுமே ஒருவர் உண்டு வாழ்வது போன்றது என்று திரு ஞானசம்பந்தன் அவர்களும் நமது மண்வாசம் நான்காம் ஆண்டு ஆரம்பவிழாவில் கடிந்து இருக்கிறார். உண்மையான பிரச்சனைகளை இனம்காணவும் நல்லிணக்கத்தோடு கூடிய நற்சமுதாயம் அமையவும் வாசிப்பு அவசியம்.
புத்தக வாசிப்பு உங்களுக்கு உலகத்தையும் மனிதர்களையும் வாசிக்கக் கற்றுக் கொடுக்கும். கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் தனது அக்னிச் சிறகுகள் நூலில் கூறி இருக்கிறார். அக்கனவுகளை வளர்த்தெடுப்பது நெறிப்படுத்தப்பட்ட நன்னூல் புத்தக வாசிப்பே.

ஓதுவது ஒழியேல் என்றும் இளமையில் கல் என்றும், ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என்றும் ஔவையும் கூறி இருக்கிறார். சிறுவயதில் படித்தவைதான் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும் என்பதால்தான் பாடத்திட்ட முறைகளில் கூட மனப்பாடச் செய்யுள்களை வைத்துள்ளார்கள். வாசிப்பு மொழியைச் செழுமைப்படுத்தும். பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொடுக்கும்.
புத்தகமென்பது பரந்துவிரிந்த உலகை அறிமுகப்படுத்தும். பல்வேறு நாட்டு இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அறிய முடியும். சிறுவர் நூல்கள், இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள், ஆகியன எவ்வயதினரும் படிக்கக்கூடியன.
தினம் ஒரு புத்தகம் வாசிப்பது அதன் சுருக்கத்தைக் குறித்து வைப்பது என்பது நல்ல பழக்கம். புத்தகக் கண்காட்சிகளிலும் கம்பர் விழா. பள்ளி ஆண்டுவிழா போன்றவற்றிலும் போட்டிகள் வைத்துப் புத்தகங்கள் வழங்கினால்தான் இன்றைய சிறுவர்களுக்கு புத்தகம் பற்றியே தெரிகிறது.
ஃபாரன்ஹீட் 451 என்றொருபடத்தில் ஒரு நாட்டில் புத்தகம் படிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும். புத்தகங்களை எரிக்கும் வெப்பநிலைதான் 451 டிகிரி ஃபாரன்ஹீட். 



எங்காவது புத்தகங்களைக் கண்டால் அதை எரியூட்டவென ஒரு குழு பறந்துவரும். அப்படி வந்த குழுவில் இருக்குமொருவன் புத்தகங்கள் பால் ஈர்க்கப்பட்டு ஒரு வீட்டில் இருக்கும் புத்தகங்களை எரியூட்டாமல் விடுவான். அப்போதுதான் அவனுக்குத் தெரியவரும், இம்மாதிரி புத்தகங்கள் எரியூட்டப்படுவதால் ,அவற்றைக் காக்க ஈல் எனப்படும் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகத்தையும் முழுதாக மனப்பாடம் செய்திருக்கிறார்கள் என்பது. அவர்கள் ஒவ்வொருவரும் அதே புத்தகத்தைத் திரும்ப எழுத முடியும். பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் அவன் அந்தக் குழுவுக்கு உதவுவான். புத்தக வாசிப்பு என்பது உயிரையும்விட உயர்வானது என்பதை உணர்த்திய படம் ஃபாரன்ஹீட் 451.
2005 ஆம் ஆண்டிலிருந்து ”வாசிப்போம் சிங்கப்பூர்” என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
சிறார்களுக்கு வாசிப்பையும் எழுத்தையும் மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன. முதலில் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு நன்னூல்களைத் தருவித்துக் கொடுத்தல். இரண்டாவது நல்ல வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல், மற்றும் வாசிப்பை மேம்படுத்துதல். இதன் மூலம் இளம் குற்றவாளிகள் உருவாவது தடுக்கப்படுவது மட்டுமின்றி நாட்டை நல்வழியில் இட்டுச்செல்லும் இளைய பாரதத்தினர் பெருகவும் வழிவகுக்கும்.
பள்ளி நூலகத்தில் மாணவர்களுக்குத்தேவையான நூல்களை வாங்க வேண்டும். ஒவ்வொரு மாணக்கருக்கும் வாரம் ஒரு நூல் வாசிக்க வழங்கப்படவேண்டும். அவற்றைப் பற்றிய குறிப்பெடுத்தலும், மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறவேண்டும்.
பள்ளிகளில் முத்தமிழ் வாரம், நூலகவாரங்களில் அந்த நூலின் எழுத்தாளர்களோடும் கலந்துரையாடல் நடத்தலாம்.  நூல் ஆய்வுப் போட்டிகள் மட்டுமல்ல எளிய விநாடி வினாக்களும் நடத்தி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கலாம். மாவட்ட நூலகங்களில் அங்கத்தினராக்குதல், பள்ளி நூலகங்களைப் பயன்படுத்தப் பழக்குதல் மூலம் எதிர்காலத்தலைமுறையினரைப் பண்படுத்தும் கடமை பள்ளி, பெற்றோர் ஆகிய இருதரப்புக்குமே இருக்கிறது. 

12 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜட்மெண்ட் சிவா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. அற்புதமாக எடுத்துரைத்திருக்கிறீர்கள் 🙏

    பதிலளிநீக்கு
  3. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் 🙏

    பதிலளிநீக்கு
  4. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் 🙏

    பதிலளிநீக்கு
  5. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் 🙏

    பதிலளிநீக்கு
  6. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் 🙏

    பதிலளிநீக்கு
  7. அற்புதம், அருமை, சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி ஆசிபொறிதமிழ்

    மிக்க நன்றி பெயரில்லா!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)