புதன், 5 ஜூன், 2019

அழகப்பர் முன்னாள் மாணவர் பூங்கா. ALAGAPPA ALUMNI PARK.

ஒரு மாலை நேரம் இந்தப் பூங்காவுக்குச் சென்று வந்தோம். அழகப்பா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அமைத்த பூங்கா இது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5. 30 மணிக்கு இப்பூங்காவின் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.

இது மேலாண்மையியல் வளாகத்தின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் கோட்டையூர் ஸ்ரீராம் நகர் செல்லும் பாதையில் ஸ்ரீ ப்ரசன்ன மஹாலின் எதிர்ப்புறம் ரயில்வே ட்ராக்கை ஒட்டி அமைந்துள்ளது.

அப்போதைய துணைவேந்தர் சுப்பையா அவர்கள் தலைமையேற்க பேராசிரியரும் முன்னாள் மாணவருமான ஆதிச்சபிள்ளை அவர்கள் திறந்துவைத்திருக்கிறார்கள்.

காரைக்குடியிலேயே மிகப் பிரம்மாண்டமான பூங்கா. உள்ளே செல்ல எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு !. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபாதை பாவப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.

எல்லாப் பூங்காக்களையும் போல் இங்கேயும் ப்ளேகிரவுண்ட் உள்ளது.


தூரத்தே ஒரு காண்டீனும், க்ரவுண்டில் மக்கள் அமர்ந்து உண்ண ஸ்டோன் பெஞ்சுகளும் கண்டு களிக்க மெகா சைஸ் டிவியும் உண்டு.

புத்தகமும் வாசிக்கலாம். ஃபேஸ்புக்கும் பார்க்கலாம்.

மிகப் பிரம்மாண்டப் புல்வெளியில் புள்ளிமான்கள். ( சிலைகள் )

நடைபாதையின் ஆரம்பத்தில் ஸூவைப் போல் பறவைகள் கூண்டுக்குள்இருந்தன. சில வாத்துக்கள் முதல்கூண்டில்.

இன்னும் சில கூண்டுகளும் பல பறவைகளும், லவ்பேர்ட்ஸ் மற்றும் காடைகளும் இருந்தன.


நீளப் பாதை. இது குறுக்கே செல்லும் பாதை.

காம்பவுண்டை ஒட்டி சதுரப் பாதையும் அங்கங்கே குறுக்கே குறுக்கே இருபக்க பாதையை இணைக்கும் மூன்று குறுக்குப் பாதைகளும் இருந்தன.

குழந்தைகள் ஓடியாட ஏற்ற இடம். பூங்காவின் பாதிப் பரப்பில் கொரியன் க்ராஸ் மற்றும் மற்ற செடி கொடிகள்  பச்சைப்பசேல் என கண்ணைக் கவர்ந்தன.

இது இரண்டாவது குறுக்குப் பாதை. நிறையப் பேர் தெரியாத பூச்செடிகள் வேறு. அரளி, அலமாண்டா, இட்லிப் பூ, நந்தியாவட்டை, அந்தி மந்தாரை எனப் பல வண்ணப் பூக்கள் பொலிவூட்டின.

குட்டிக்குழந்தைகள் சவாரி செய்ய சில்ட்ரன் ரைட்கள். முன் பக்கம் தளம் போட்ட பிரம்மாண்டமான க்ரவுண்ட். இரண்டாம் பாகம் அதே அளவு புல்வெளி . மூன்றாம் பாகம் பிள்ளைகள் விளையாட மணல் மைதானம்.

இங்கே சறுக்குமரங்கள், ஊஞ்சல்கள், ஏணி, ஸீ ஸா,  ராட்டினம், எக்ஸர்சைஸ் செய்ய பார்கள், சவாரி செய்ய ரைட்கள் இருந்தன.

மக்கள் வெள்ளம்.


இது மூன்றாவது குறுக்குப் பாதை.

இப்போது ரிடர்ன். அதே குறுக்குப் பாதைகள். பாதையெங்கும் விளக்குகள். க்ரோட்டன்ஸுகள் அலங்கரிக்கின்றன.


காமதேனுவும் நந்தினியும் :)

பிளிறும் யானை. தூரத்தே உறுமீன் வரக் காத்திருக்கும் கொக்கு.


திரும்ப ப்ளேகிரவுண்ட். டிவி பார்ப்போம். நடந்த களைப்புத் தீர அமர்வோம்.:)

ஏழெட்டு ஸ்டோன் பெஞ்சுகள் தவிர இரும்பு சேர்களும் இருக்கு.

நடந்த களைப்புத் தீர பட்டாணி மசால் சாப்பிட்டு ஆசுவாசம் செய்வோம் :)

எண்ட்ரன்ஸ் டிக்கெட் பத்து ரூபாய்தான். அதேபோல் இந்தப் பட்டாணியும் பத்து ரூபாய்தான்னு நினைக்கிறேன். ஒரு மாலை ரிலாக்ஸா போய் நடந்துட்டு வரலாம். குழந்தைகளுக்கு எண்ட்ரன்ஸ் டிக்கெட் 5 ரூபாய்னு நினைக்கிறேன். குழந்தைகள் விளையாடவும் இளையவர்கள் உடற்பயிற்சி செய்யவும் பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும் உகந்த இடம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)