செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

GLASS - CINEMA REVIEW. க்ளாஸ் -ஒரு பார்வை.

GLASS - CINEMA REVIEW. க்ளாஸ் -ஒரு பார்வை.

ஷ்யாமளன் எம் நைட் எடுத்த படம். ப்ரூஸ் வில்லீஸ், ஜேம்ஸ்மெகஅவோய், சாம்வேல் எல் ஜாக்ஸன் ஆகியோர் நடித்த படம். எக்ஸ்பெண்டபிள்ஸ், ஸ்ப்ளிட் ஆகியவற்றின் தொடர்ச்சி.


ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியான கெவின் வெண்டல் ( ஜேம்ஸ்மெகஅவேய்)  தன்னை ஒரு சூப்பர் ஹியூமனாக நினைத்துக் கொள்கிறார்.அவரைத் தவறாக வழிநடத்தி அவரை ஒரு பீஸ்ட் ஆக உருமாற்றுபவர் எலிஜா ப்ரைஸ் ( .

கார்ட்டூன் கேரக்டர்ஸின் தாக்கத்தைச் சொல்ல வந்த கதை இது. முந்தைய படங்களைப் பார்க்காவிட்டால் இது புரிவது சிறிது சிரமம்தான்.

கிட்டத்தட்ட 24 ஸ்ப்ளிட் பர்சனாலிட்டிகள் அடங்கிய மனிதன் கெவின். அவனது பீஸ்ட் என்ற பர்சனாலிட்டி இதில் அதிகம் வெளிப்படுத்தப்படுகிறது. இவருக்கு ஒரு பெண் தோழி உண்டு . அவள் பெயர் கேஸி குக். - ஆன்யா டெய்லர் ஜாய்.

அதேபோல் ப்ரூஸ் வில்லீஸ் ( டேவிட் டன் ) தண்ணீர் பற்றிய பயம் கொண்டவர். ( சிறுபிள்ளையில் நீச்சல் குளத்தில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் ) ஆனால் இவரிடம் ஒரு ஸ்பெஷல் திறமை உண்டு ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தன் நுண்ணுணர்வின் மூலமே கண்டுபிடிப்பார். இவர் மகன் ஸ்பென்சர் ட்ரீட் க்ளார்க் ( ஜோஸப் டென் ) நகரில் சில பெண்கள் காணாமல் போனதைக் கண்டுபிடித்துத்தரும்படிக் கேட்க மேப்பிங் செய்து கண்டுபிடிக்கிறார்கள். அப்போது கெவின் தான் குற்றவாளி என உணர்ந்து டேவிட் அவரைத் தாக்க அங்கே வரும் போலீஸ் இருவரையும் கைது செய்து எது உண்மை எனப் புரியாமல் அஸைலத்தில் அடைக்கிறது.

க்ளாஸ் எனப்படும் ஜாம்வேல் ஜாக்ஸன் ( எலிஜாப்ரைஸ் ) பீஸ்ட் மாதிரியான கேரக்டர்களை உருவாக்குவதில் மாஸ்டர் மைண்ட். இவர் தாயோ இவரை அதிகம் நம்புகிறார். சாம்வேல் ஜாக்சனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டும் அவர் ஒரு மாஸ்டர்மைண்டாகவே செயல்படுவது வினோதம்.

இவர்கள் மூவரும் ஒரு மெண்டல் அஸைலத்தில் அடைக்கப்படுகின்றனர். அங்கே இவர்களைக் கண்காணிக்கும் தலைமை டாக்டர் சாரா பால்சன் ( எல்லி ஸ்டாப்பிள் ) இவர்கள் கொண்டுள்ள சூப்பர் சக்திகள் எல்லாம் பிரம்மை எனவிளக்குகிறார்.

ஆனாலும் மூவரும் அங்கேயிருந்து தப்ப நினைக்கிறார்கள். கண்களை அடையாளமாகக்  கொண்டு ரூமில் சென்ஸார் அமைக்கப்பட்டிருப்பதால் அங்கேயிருந்து தப்பமுடியாமல் போகிறது. அதே போல் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் வந்தால் சென்ஸார் கதிர்கள் தாக்குவது திகீர் ரகம்.

அப்படியும் டாக்டரை ஒரு முறை தாக்குகிறார்கள் பேஷண்ட்ஸ் . அதேபோல் இரு காவலர்களை மிஸ்டர் க்ளாஸ் கொல்லுவது பதற்றம்.

சாம்வெல் ஜாக்சன் அசைவற்ற பார்வையுடன் வீல் சேரில் மிரட்டுகிறார்.ஆனால் சென்சாரிலிருந்து தப்ப கண்ணை மறைக்க மூன்று அடுக்கு கண்ணாடி தயாரிப்பது, சூப்பர் ஹியூமன் பற்றிய தகவல்களை கம்யூட்டர் மூலம் பதிவேற்றுவது, மாலில் இருக்கும் டவர் மூலமாக அங்கங்கே இருக்கும் டிவிக்களில் லைவாக தப்பிப்பது முதல் கொல்லப்படுவது வரை காண்பித்து இருப்பது திகில் ரகம்.

இவர்கள் கூடவே இருந்த எலிஜாவின் தாய், கெவினின் கேர்ள் ப்ரெண்ட், டேவிட் டனின் மகன் மூவரும் அந்த டவரில் தங்களைச் சார்ந்தவர்களை - சூப்பர் ஹியூமன் என்று நம்பியவர்களை - மெண்டல் அஸைலம் எப்படி தற்கொலைக்குத் தூண்டிக் கொலை செய்தது என்று வீடியோவில் ஒளிபரப்பாவதைக் கண்டு முகம் மலர்கிறார்கள், உலகத்து வெளிச்சமிட்டுக் காட்டி விட்டோம் என்று அமர்ந்திருந்தாலும் விநோதமான அவர்கள் முகபாவம் ஒரு மாதிரி சங்கடத்தை உண்டு பண்ணியது. 

இதில் க்ளாஸ் அச்சுறுத்துகிறார் என்றால் அவர் கட்டளைப்படி மிருகமாக மாறும் பீஸ்ட் அதிகமாகவே பீதியடைய வைக்கிறார். ஆனால் பல்வேறு கேரக்டர்களில் அவர் மாறி மாறிப் பேசும்போது தியேட்டரில் மென் சிரிப்பு உதிர்கிறது.

ஜேம்ஸ் மெகவே மிஸ்டர் ஹேண்ட்சமாக விருது வாங்கியவர் இதிலோ முழுக்க அரை மொட்டைத் தலை மற்றும்  நம்ம அந்நியன் மாதிரி மாறுவது அதிலும் பல்வேறு குணாதியசியங்களில் கலக்குவது மிரட்சியான அபாரம்.

அதேபோல் நமக்குப் பிடித்த ப்ரூஸ் வில்லீஸ். தன் நுண்ணுணர்வுப்படித்தான் செயல்படுகிறார் என்றாலும் அதை நிரூபிக்கப் போதுமான ருசு இல்லை.

இக்கதை அங்கங்கே கண்டினியுட்டி இல்லாமல் இருப்பதாக விமர்சகர்கள் சொன்னாலும் முதல் படங்களைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

கார்ட்டூன் காமிக் கேரக்டர்களை உண்மை என்று நம்பி ஒரு ஜெனரேஷனையே உருவாக்கி வைத்திருக்கிறோம். அவர்கள் அந்தக் கேரக்டர்களை உண்மை என்று நம்பி தன்னையும் அதே போல் நினைத்து அபாய வீர தீரச் செயல்களில் ஈடுபடுவது நடக்கிறது. ( குழந்தைகளை கவனித்துப் பாருங்கள் அவர்கள் கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது )

இதை கடைகளில் காமிக் புக் வாங்கிச் செல்லும் ஒவ்வொருவரிடமும் அவர்களின் அடிக்‌ஷன் பற்றி அவர்களின் முகங்கள் விழிகள் நடிப்பு மூலமே இயக்குநர் தெளிவுபடுத்துகிறார்.

அதே போல் பீஸ்டாக மாறும் ஜேம்ஸ் விதானத்தில் ஊர்ந்து வருவது அதிகபட்ச மிரட்சி. கட்டாயம் இப்படத்தைப் பாருங்க பிள்ளைகளை எல்லாம் கார்ட்டூன், காமிக் மோகத்திலிருந்து விடுவிக்கவே கட்டாயம் பார்த்தாகவேண்டிய படம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)