சனி, 3 நவம்பர், 2018

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கில் எங்கள் நூல்களுடன் தோழி நிம்மி சிவா :) 

நிம்மி சிவா & ராஜ் சிவா இருவருமே எழுத்தாளர்கள். இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். ஷார்ஜாவில் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு எனது நூலையும் தனது கைகளில் ஏந்தி சிறப்பிடம் அளித்திருக்கிறார் தோழி நிம்மி சிவா. பெருமை மிகு இத்தம்பதிகள் ஜெர்மனியில் இருந்து ஷார்ஜாவுக்கு வந்து புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது ஆச்சர்யமும் மகிழ்வும் அளித்தது. மிக்க மகிழ்ச்சியும் அன்பும் நிம்மி.


நிம்மியின் நூல் - என் மனவானில். - கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது. ராஜ் சிவாவின் அறிவியல் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவை. பல்வேறு நூல்கள் வெளியாகி உள்ளன. 

///#சார்ஜாஉலகப்புத்தகக்கண்காட்சியைப் பார்வையிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மிக மகிழ்ச்சி. பல மொழிகள் நிறைந்த அரங்குகளில் தமிழ்நாட்டிலிருந்து #டிஸ்கவறிபுக்பாலஸ் அழகாகக் காட்சி அளித்தது.பாலைவன லாந்தர் அவர்களின் #லாடம் கவிதை நூலும்
Thenammai Lakshmanan அவர்களின் #சிவப்புபட்டுக்கயிறு நூலும் கண்களில் படவே உடனே எடுத்துக்கொண்டேன் . தம்பி Vediyappan M Munusamy கூறினானர். “ அண்ணி , தோழிகளின் நூல்கள் என்றவுடன் உடனேயே எடுத்து விட்டீர்கள் “ என்று😊😊
விடை பெற்று வரும் போது சிங்கக் கொடியுடன் சிறீலங்கா என்ற பெயர்ப்பலகையுடன் ஒரு அரங்கம் தென்பட ஆவலுடன் அங்கு சென்று பார்த்த போது எந்தவொரு தமிழ் நூல்களும் வைக்கப்படவில்லை என்பது தெரிந்து மனச்சோர்வுடன் திரும்பினேன்.////

அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் நிம்மி :) 


டிஸ்கி :- ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் எனது சிவப்புப் பட்டுக்கயிறு நூல் டிஸ்கவரி அரங்கில் கிடைக்கும். வாங்கி படிச்சுப் பார்த்துட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ். 

9 கருத்துகள்:

  1. ஜெர்மானிய தம்பதிகள் சார்ஜா புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டது நல்ல செய்தி என்றால் தங்கள் நூலைத் தேர்ந்தெடுத்தது அதைவிட மகிழ்ச்சியான செய்தி தானே. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நானும் இனிமேல் தான் இந்தப்புத்தகக் கண்காட்சிக்குச் செல்லலாமென்று நினைத்திருக்கிறேன். போய் வந்ததும் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. நான் இரண்டு நாளாக ஷார்ஜாவில் தான் இருக்கிறேன்! உங்கள் நூலை இங்குப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி! நம் நண்பர் வேடியப்பனுடன் வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டேன் வரும்11வரை நான் இங்கு இருப்பேன்! நண்பர்கள் வேறு யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்களேன்! ����

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    ஆம் முத்துசாமி சகோ கருத்துக்கு நன்றி

    புக் ஃபேர் போயிட்டு வந்தீங்களா மனோ மேம்.

    நன்றி துளசி & கீத்ஸ்

    நன்றி முத்துநிலவன் சார். திருமண வீடுகள் செல்ல வேண்டி இருந்தது. ஆன்லைன் வரமுடியாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை முத்துநிலவன் சகோ.

    நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!



    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)