வியாழன், 22 நவம்பர், 2018

அகத்திணை மரபுகள் :-


அகத்திணை மரபுகள் :-

1.அகத்திணைப் பாடல்களில் ஒருவரின் பெயர் சுட்டப் பெற்றிருக்காது.

“சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் “ என்பது அகத்திணைப் பாடல்களுக்குள்ள சிறப்பு மரபாகும்.

2.இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் மட்டுமே வாழும் தலைவன் தலைவியருக்கு அன்றி அனைத்துக் காலகட்டத்துக்கும், அனைத்துத் தலைவன் தலைவியருக்கும் அன்பு கொண்டோர் அனைவருக்கும் பொதுவானதாகும்.

3.ஆண்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படுமே தவிர பெண்மக்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படமாட்டாது. பெண்கள் மடலேறுவது முறையன்று.


பெரும்பான்மைப் பாடல்களில் தலைவனைக் கண்ட பெண்டிர் அவன் அழகில் மயங்கிப் பாடுவதாகவே அமைந்திருக்கும். 

ஒத்த காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பற்றிக் கூறுவது அன்பின் ஐந்திணை, பொருந்தாக் காதலைப் பெருந்திணையும், ஒரு தலைக் காமத்தைக் கைக்கிளையும் கூறி வருகின்றன.

காதல் கொண்ட பெண்டிரிடம் தலைவன் தூது போவதாகவோ, தலைவன் உலா வரக் கண்ட தலைவி, தலைவனிடம் தூது விடுவதாகவோ அமைந்திருக்கும். தலைவியின் காதலைத் தோழி செவிலியிடமோ, செவிலி நற்றாயிடமோ அறநிலைக்கப்பாற்படாதவாறு, மரபு குலையாதவாறு, நடுநிலையில் நின்று கூறுவதாக அமைந்திருக்கும்.

அன்பின் ஐந்திணை சுட்டும் முதல் உரிப்பொருள்கள்.:-

முதல் நிலம் பொழுது எனவும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது எனவும் பகுக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சி – பெரும்பொழுது - கூதிர், முன்பனி, இளவேனில், // சிறுபொழுது – வைகறை, நண்பகல், // காலம் – ஆவணி, புரட்டாசி, // உரிப்பொருள் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

முல்லை – பெரும்பொழுது - கார்காலம், இளவேனில்.// சிறுபொழுது – காலை, மாலை, // காலம் – ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, //  உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

மருதம் – பெரும்பொழுது – ஆறு வகைப் பொழுதும்,// சிறுபொழுது – ஏற்பாடு, வைகறை, யாமம், நண்பகல், காலை, மாலை, // உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நெய்தல் – பெரும்பொழுது – முன்பனி, // சிறுபொழுது – யாமம், ஏற்பாடு, வைகறை, // உரிப்பொருள் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பாலை – பெரும்பொழுது – பின்பனி, இளவேனில், முதுவேனில், // சிறுபொழுது – யாமம், ஏற்பாடு, வைகறை, நண்பகல், // உரிப்பொருள் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

நிலம் – உரிப்பொருள்.

குறிஞ்சி - ,மலையும் மலை சார்ந்த இடமும்.

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்.

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்.

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்.

பாலை- முல்லையும் குறிஞ்சியும் இயல்பாய் திரிந்த இடம்.

“மாயோன் பேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெரும்மணல் உலகமும் “ என்பது ஐவகை நிலம் பற்றிய நூற்பாவாகும்.

மருதத்துக்குரிய காலம் :- மாசி பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி.
பாலைக்குரிய காலம் :- சித்திரை, வைகாசி.
நெய்தற்குரிய காலம் :- ஆனி, ஆடி முதலியனவாம்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)