புதன், 21 நவம்பர், 2018

கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.


கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.

தமிழ்நாடு இயல் இசைச் சங்கத்தின் கவிதைப் பட்டறையில் ஒருநாள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பேசப்பட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ( கிட்டத்தட்ட 2011 இருக்குமென நினைக்கிறேன். குறிப்புகளைப் பார்த்தால் நான்தான் எழுதி இருக்கிறேன். ஆனால் பிராமியா, தெலுங்கா, மலையாளமா, கன்னடமா தெரியவில்லை. சிறு குறிப்பெல்லாம் குட்டிக் குறிப்பாக இருக்கிறது. புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள். J

விக்கிரமாதித்தன் :- உரைநடையை மடக்கிய பாணி கவிதைகள் இப்போ அதிகம்.  

க நா சு, புதுமைப்பித்தன், குபரா, தேவதச்சன், சுகுமாரன், தேவதேவன் ஆகியோர் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.  உயிர்மை, உயிரெழுத்து, காலச்சுவடு ஆகியனவும்.


ட்ராட்ஸ்கி மருது :-70 - பரீட்சார்த்தமான எழுத்துக்களோடு ஓவியங்களும் பிரபல பத்ரிக்கைகளில் வரத் துவங்கிய காலம். 10 -15 வருடம் பயிற்சி செய்தால் கைகூடும். மொழியில் அக்ஷரத்தைப் படித்து வருவது போல சிதைத்து வரைகிற முறை. நேரடியான ஓவியம் ஒரு பாணி. சிதைத்து வரைகிற ஓவியம் ஒரு பாணி. ட்ரான்ஸிஷன். இது வாசகர்களோடு நேரடியாக உரையாட ஒரு ஐந்து வருடம் எடுத்தது.

20 ஆம் நூற்றாண்டின் ஓவிய ரசிப்புத் தன்மையைப் புதுப்பித்தவர் மைக்கேல் ஏஞ்சலோ. இது தனி ஓவியம் பாணி

கம்யூனிகேஷன் இல்லஸ்ட்ரேஷனை வெகு ஜனப் பத்திரிக்கையில் காட்சிப்படுத்தியவர் ஆதிமூலம். இதன் தாக்கம் சிறப்பாக இருந்தது. இதன் மூலம் வாசகர்களை வசப்படுத்த முடியும் எனக் கண்டுகொண்டேன்.

THEY ILLUSTRATE THE SCENES PREVIOUSLY. BUT NOW THEY TAKE THE NEXT STEP. THE PICTURE SHOULD TELL THE STORY. தனித்தும் இயங்கணும். சேர்ந்தும் இயங்கணும். ஏதோ ஒரு இடத்தில் LINK ஆகணும். சொல்லப்படாத , காண்பிக்கப்படாத இடம் பார்ப்பவரின் மனதில் உருவாக்குதல் வேண்டும். சக கலைஞர்களோடு சேர்ந்து ஏற்பட்ட மாற்றம். சுபமங்களா  நடுப்பக்கக் கவிதைக்கு ஒரே ஓவியம் எல்லாக் கவிதைக்கும். THEY USE THE SAME ELEMENT FOR ALL THE POEMS. ALL DIMENSIONS. SEEN IT IN NEW FILM TOO. நந்தலாலாவில் கவிதைபோல காட்சி அமைப்பு உண்டு. 75 வருட சினிமா ஷாட்டுகளில் இது வித்யாசமானது. எழுத்துடன் ஓவியமும் நவீன பாணியில் மாறி வருகிறது.

அழகிய பெரியவன் :- ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் கவிதை., தலித் சமூகப் பெண்கள், பழங்குடியினர் தங்கள் எண்ணங்களைப் பதிவது அதிகரித்திருக்கிறது. கவிதை என்பது மனதைத் திறந்து அகழ்ந்து செல்லும் படிமம். புதிய சாளரங்களை, காட்சிகளை, அனுபவங்களை ஏற்படுத்துகிறது. “ ஆயிரம் தந்திகளை உடைய இசைக்கருவி “ என்கிறார் பாரதி.

ப்ரத்யேகமான பார்வை வெளிப்பாடு, வாழ்க்கைமுறை ஒலித்திருக்கும் சட்டகம், நீண்ட தமிழ்ப் பாரம்பரியம் உடையது கவிதை.

பாணர்கள், உழவர்கள் சங்ககாலத்தில் இசையோடு வாழ்ந்தார்கள்.  “துடி பறியும் புலைய “ “ எரி கோலறியும் இழிசினர் “ என்று குறிப்பிடப்படுகிறது.

மாங்குடி மருதனார், ” துடியன், பாணன், பறையன், கடம்பன் இவர்கள் அல்லாது குடியும் இல்லை. இவர்கள்தான் தொல்குடிகள்”  என்கிறார்.

உத்தரநல்லூர் நங்கை 15 ஆம் நூற்றாண்டு. வாய்ச்சலூர் பதிகம் – 11 பாடல்.

“ சந்தனம் அகிலும் வேம்பும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால்
அவர்மனம் வீசக்காணோம் “

“யோனி பேதம் “ பீகாரின் பன்வாரி தேவி 45 வயதுக்கு மேல் உயர் சாதியினரின் வன்புணர்ச்சிக்கு ஆளானார். உயர் சாதிக்கு என்று ஒன்றும் கீழ் சாதிக்கு என்று ஒன்றும் இருக்கிறதா என சந்தேகமாய் இருக்கிறது. எனக்கும் ஒரு சந்தேகமிருக்கிறது சாதிக்கொரு பாலுறுப்பு இருக்கிறதா ? பதிவிரதை என்று பெண்ணைக் கட்டி வைக்க அவள் பாலுறுப்புதானா பயன்பட்டது ?

மேல் சமூகம்தான் கவிதை எழுதுகிறார்கள். 

நவீனத்துவம் என்பது மன அவசங்களை, காட்சிச் சித்திரங்களை, மொழி விளையாட்டை, தத்துவ விசாரங்களைக் கொண்டது.

இன்றைய கவிதைகளில் மண் சார்ந்த குறிப்புகள் இல்லை. சாதி, பெண்ணியம், பால் சிக்கல்கள் பற்றி பேச இடமில்லை.

தணிகைச் செல்வன், கந்தர்வன், ஈரோடு தமிழன்பன், ஆகியோர் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

“அரிசனம் என்பது ஆரியர் வழக்கு
பறையர் என்பது பண்ணையார் வழக்கு “

“ நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
இதனால் யாவருக்கும் – ரவிக்குமார்.

தலித் இலக்கியம் என்பது இதுதான்.

வி அரசு, மார்க்சீய சிந்தனையேடு - திராவிட இலக்கியம் – தலித் இலக்கியத்தின் முன்னோடி.

பொதியவர்த்தன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

“பறையர் சுடுகாடு
படையாச்சி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு “

கறுப்பர் இலக்கியம் லாங்கஸ் & ஹ்யூஸ்.

“ ஓ கறுப்பர்களே உங்கள் கறுப்புத் தோலைப் பதாகையாகத் தூக்கிப் பிடியுங்கள். “

கறுப்பு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், - இதெல்லாம் ஒரு மாற்றுப் பார்வையில் தனது இலக்கியத்தைப் பதிவு செய்வது.

தலித் இலக்கியம் தாமதமாகவேனும் தமிழ்நாடு வந்ததற்கு திராவிட சிந்தனைதான் காரணம். கேரளாவில் தாமதமாகவேனும் வந்ததற்கும் மார்க்சீய சிந்தனைதான் காரணம். ( உபசெய்தி ) புதைக்க கூட இடம் கேட்டு அரசாங்கத்திடம் போராட்டம்.

பிரசாரமாய் எழுதுகிறீர்கள் அல்லது அவர்களைப் போல எழுதுகிறீர்கள் என இரண்டு குற்றச்சாட்டு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை இன்று சிவகாமி, பூமணி ஆகிய இலக்கியவாதிகள் எழுதுகிறார்கள்.

இந்த சமூகத்தின் முன் நாகரீகமாக நான் ஏன் பேசவேண்டும். வேதனையை வலியை, கோபத்தைச் சொல்ல வேண்டியதிருக்கிறது கவிதை. இன்று களிப்பு, கொண்டாட்டம் எல்லாமே கவிதையாகிறது.

ரவிக்குமார், சிவவேந்தன், ராஜ் கவுதமன், அன்பாதவன், உமாதேவி, யாழன் ஆதி, இமையன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

கே ஏ குணசேகரன்

“எங்கப்பாவுக்கு அழகன்னு
அப்பா பேரு வைச்சா
கறுப்பான்னு எங்க
ஆண்டை கூப்பிடுவார் “

ஆதவன் தீட்சண்யா ,

” என் அம்மா
மசக்கையில் அள்ளித் தின்றதைவிட
எங்கள் மண் இங்கு எது ? “

“முள் வாங்கும் உன் நினைவு.
எங்கிருந்து வருகிறாய்
எங்கே போகிறாய் ? “

2 கருத்துகள்:

  1. கவிதைகள் மக்களின் வலியை உணர்த்துகின்றன

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)