வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

அவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.

அவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார்.

அவரிடம் நான் கூறியவற்றை இங்கே பாருங்கள். :)


https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/entertainment/143128-favourite-books-of-famous-people.html


நகைச்சுவை எழுத்துக்களில் பாக்கியம் ராமசாமி, பாலா கணேஷ், அகஸ்தியன் ஆகியோரைப் பிடிக்கும் என்றாலும்  எப்போதும் பிடித்தவர் என்றால் அது சாவிதான். அதுவும் அவரது வாஷிங்க்டனில் திருமணம் என்ற நூலைப் படித்தது 80 களில் இருக்கும் என்றாலும் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை.

அடுத்தவர்களின் உடல் ஊனம்,  அவர்கள் சார்ந்த இனம்,  தன்னியல்போடு சிந்திக்கும் மனம் ஆகியவற்றைப் பாதிக்காமல் கண்ணியமான இயல்பான வாழ்வியல் நகைச்சுவைகளைக் கொடுத்தவர்களில் அவர் சிறந்தவர் என்று உறுதியாகக் கூறுவேன்.

திரைத்துரை எழுத்துக்களில் ராதா மோகன், கிரேஸி மோகன் போன்ற எழுத்துக்கள் பிடிக்கும் என்றாலும் நூலாக சாவியினுடைய “வாஷிங்டனில் திருமணம் “  எக்காலத்துக்கும் பொருந்தும் இயல்பான எளிய நகைச்சுவைகளை உள்ளடக்கிய  அற்புதமான புத்தகம் . ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடக்கும் திருமணத்தை அமெரிக்கப் பணக்காரரான ராக்ஃபெல்லர் தம்பதி நடத்தி வைப்பது போன்ற கதையமைப்பு எக்காலத்துக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.இந்தக் கதையை யார் மனத்தையும் புண்படுத்தாத நகைச்சுவை அம்சங்களுடன் நேர்த்தியாக அளித்திருப்பது சிறப்பு.

கருத்துக்கூற அழைத்தமைக்கு நன்றி தினேஷ் & அவள் விகடன்.

6 கருத்துகள்:

  1. பொடோமக் நதி ஓரத்தில் துணி துவைத்து காயப்போடுவது போலும் காட்சிகள் இருக்கும் அல்லவா என்றோ படித்ததில் நினைவுக்கு வருவது

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    ஆம் பாலா சார் எனக்கும்தான். :)

    நன்றி க்ரேஸ்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)