செவ்வாய், 13 மார்ச், 2018

நான் வாங்கிய பல்புகளும் பலூன்களும்.

கரோல்பாகின் டி பி குப்தா ரோட்டில் சின்னவன் படித்த பள்ளி இருந்தது. அங்கே இருக்கும் சப்ஜி மண்டி அருகே கல்சா காலேஜ் வழியாக தினம் பள்ளிக்குச் செல்வதுண்டு. அந்த ரோடுகளில் அங்கங்கேதான் என் பிள்ளைகளுடன் படித்த  பிள்ளைகளின் வீடும் இருந்தது. அவர்களின் அம்மாக்களும் தமிழம்மாக்களே ஐ மீன் தமிழர்களே என்பதால் நாங்க எல்லாம் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ்.

மொழி ஓரளவு தெரிந்த ஊரில் பஸ்ஸில் கூட அமர்ந்து கஜ கஜ வென தமிழில் கதைத்தபடி கும்பலாகச்  செல்வது ரொம்பப் பிடிக்கும். சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டேன். அங்கே ஒரு ஹிந்திப் பெண்மணியும் எங்களுக்குப் பழக்கம்.

எனக்கு ஓரளவு வரையும் திறன் இருந்தது ( என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் ). எனது கணவரின் பழைய புகைப்படத்தை எடுத்து அச்சு அசலாக பென்சில் ட்ராயிங் செய்திருந்தேன். அதைத் தோழியரிடம் காட்டி மகிழ்ந்து கொண்டிருப்பேன். அதே போல் இந்தத் தோழியிடமும் காட்டினேன். ஏதோ பெரிய ஆர்டிஸ்ட் , கலாகார் என்ற நினைப்பில்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.. ”ஆர் யூ எ பெயிண்டர் ?”

-- பெயிண்டர் என்றால் நமக்கு வீட்டை பெயிண்ட் அடிப்பவர் என்ற அர்த்தம்தான். ஒரு டன் அசடு வழிய ஞே ஞே என்று நான் சிரிப்பும் முழிப்புமாக வாங்கிய  முதல் பல்பு..அதுதான். 


இன்சிடெண்ட் 2.

மிகப் ப்ரமாதமாக எழுதிக் கொண்டிருக்கிறோம் என நினைத்து அவ்வப்போது உறவினர்களுக்கு என் இடுகையின் லிங்குகளை அனுப்புவதுண்டு.  பெரிய படைப்புலக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற ரேஞ்சுக்கு இல்லாங்காட்டியும் கொட்டாவிவிடாமல் பிறர் படிக்கக்கூடிய அளவுக்கு எழுதுறோம்னு தோன்றியதுண்டு. கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர் அப்பிடின்னு நம்மள நாமளே ஃபேஸ்புக்கிலும் ப்லாகிலும் குறிப்பிடுவதுண்டு. கிரியேட்டர் என்ற ரேஞ்சுக்கு பெருமிதம் அவ்வப்போது எட்டிப்பார்க்கத் தலையில் கொட்டி அமரவைப்பதுண்டு.

ஒரு திருமணத்தின் போது  சொந்தக்காரர் ஒருவர் என்னைப் பார்த்து விட்டுச் சிரித்து “ரைட்டர் தேனம்மை.. எப்பிடி இருக்கீங்க  “ என்று அழைக்க திடுக் என்றாகி கிரியேட்டர் என்ற கொம்பு காலர் எல்லாம் உரிந்து  ஹி ஹி என வழிந்து  இரண்டாம் பல்பு கிடைத்தது.

இன்சிடெண்ட். 3.

இது கொஞ்சம் மொழித்தகராறு.

ஹிந்தி தெரியும் என்றாலும் பிரவேஷிகாவில் ஸ்டேட் தேர்ட் என்றாலும் பேச்சு மொழி வழக்கில் கொஞ்சம் சொதப்புவதுண்டு. மலையாளத்  தோழி ஒருவர் அவ்வப்போது என்னை ஹாங் ஜி என்று சொல்லுவார். அதுக்கு சொல்லுங்க என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு முறை மளிகைக் கடையில் பொருள் வாங்கும்போது கடைக்காரர் ஒரு பொருள் ( லோபியா - தட்டைப்பயிறு, காராமணி ) பற்றிக் கேட்டார். எவ்வளவு எனக் கேட்கிறாரா எனப் புரியாமல் ஹாங் ஜி என்றேன். முறைத்தபடி சென்ற அவர் அதை அரைக்கிலோவாகப் போட்டுப் பார்சல் செய்து கொடுத்துவிட்டார்.

எப்போதும் பேசுபவர்தானே இன்று என்னாச்சு இந்தாளுக்கு என நினைத்தபடி அந்த மலையாளத்தோழியிடம் விசாரித்தால் அவர் பொங்கிப் பொங்கிச் சிரித்துத் தீர்த்தார். ஹாங் ஜி என்றால் சொல்லுங்க இல்லியாம்.  என்னங்க என்று அர்த்தமாம்.

-- செமயா முதல் பலூன் உடைஞ்சது.

சப்ஜி மண்டியிலும் கரோல் பாகின் அஜ்மல்கான் மார்க்கெட்டிலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் க்யா ஹால் ஹை என விசாரிப்பதும் அதற்கு அவர்கள் பகுத் படியா ஹால் ஹை என பதில் அளிப்பதும் நடக்கும்.

எங்கள் தோழி ஒருவரின் வீட்டுக்கார அம்மணியை அந்த மார்க்கெட்டில் சந்தித்தபோது ( அங்கே உல்லன் துணிகளுக்குச் சாயமேற்றக் கொண்டு போயிருந்தோம். ) நானும் அவரை ஓரிரு முறை பார்த்த பழக்க தோஷத்தில் க்யா ஹால் ஹை என விசாரித்தேன்.

தோழியின் குழந்தையைக் கொஞ்சியவர் ஒன்றும் சொல்லாமல் போயே போய்விட்டார்.

க்யா ஹால் ஹை என்றால் என்ன விசேஷம் என்று அர்த்தம். பகுத் படியா ஹால் ஹை என்றால் ரொம்ப நல்லா இருக்கேன் என்று அர்த்தம்.

இது நான் உடைச்ச இரண்டாவது பலூன்.

ஆனா அதுக்கப்புறம் தோழி சொன்னார். அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு மருந்து வாங்க வந்துட்டுப் போனாங்களாம். அதுதான் பதில் சொல்லலையாம். இது எப்பிடி இருக்கு :) 

8 கருத்துகள்:

  1. சிந்திக்கவைக்கும் சிறப்புப் பதிவு

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே 100 வாட்ஸ் போலவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. ஆ..அக்கா செமையா வாங்கியிருக்கிறீங்க போல. வாசிச்சு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பல்பு செமை ஒளி!! 100 வாட்ஸை விட போல!! ஹா ஹா ஹா ஹா...ரொம்ப ரசித்தேன்....இப்படி நமக்கும் உண்டுல்ல...! ஹிஹிஹி...

    பாருங்க முதல் ரெண்டும் கொஞ்சம் யோசிக்கவும் வைச்சுச்சு...தமிழ்ல ஓவியர், எழுத்தாளர் என்று சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சி, பெருமை....ஆங்கிலத்தில் ரைட்டர் எனும் போது கொஞ்சம் குறைகிறதோ?! அது போல ஓவியர் எனும் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இணையான சொல் இல்லை என்றே தோன்றுகிறது....பெயிண்டர் என்றுதான் அர்த்தம்...ஆனால் பெயிண்டர் என்றால் நாம் வேறு அர்த்தத்திலும் கொள்வதால் இப்படி ஆகிப் போகிறதோ....அழகான தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் இல்லை அது போல சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் இணையான சொற்கள் இல்லை அல்லது நமக்குத் தெரிவதில்லை என்றே தோன்றுகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி டிடி சகோ :)

    நன்றி கில்லர்ஜி சகோ :)

    ஹாஹா நன்றி ப்ரிய சகி :)

    ஹிஹிஹி நன்றி கீதா :) சரியா சொன்னீங்க !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)