சனி, 23 டிசம்பர், 2017

ரம் பம் பம் ஆரம்பம்..

ஒரு தோழியின் இல்லத்தில் கிறிஸ்மஸுக்கு முன்னான ஒரு இரவில் கிறிஸ்மஸ் கேரல்ஸ்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழி சென்ற நான் ஓரிரு நிமிடங்கள் புகுந்து க்ளிக்கியது.  அதிலும் இவர்கள் இரட்டையர்கள், டபிள் தமாக்கா. ரொம்ப சூப்பராக டான்ஸ் ஆடி மகிழ்வித்தார்கள். பார்வையற்றோர் பள்ளியிலிருந்து வந்து பின்னணி பாடும் சிறுமிகள் கலந்து கொண்டார்கள். 

கிறிஸ்மஸ் மரம், பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் விட சாண்டா க்ளாஸைப் பார்த்தாலே கிறிஸ்மஸுக்கான மணி மனதில் ஒலிக்கத் துவங்கிவிடும்.

கொயர் கேர்ள்ஸ் என்றிருக்கும் என் தோழிகள் பாடுவதை ரசித்துக் கேட்பேன்.

‘தந்தானைத் துதிப்போமே.. “

“ஆற்றலாலும் அல்ல.. சக்தியாலும் அல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே “ ஆகிய ஓரிரு பாடல்கள் தெரியும். ஆனால் கிறிஸ்மஸ் பாடல்கள் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடும் திருநாளாக பாலன் ஏசு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கிறித்துவப் பள்ளிக்கூடங்களிலும் , கல்லூரிகளிலும் படித்ததால், நொவினோ ( நவநாள் ) , காண்டில்லைட் செரிமானி ( மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டி வணங்கும் கல்லூரி விழா ) ஆகியவற்றில்  கலந்துகொண்டு வணங்கிய அனுபவம் உண்டு. 
முன்னே எல்லாம் வாசலில் கிறிஸ்மஸ்தாத்தா, கிறிஸ்த்மஸ் மரம், மணிகள் ஆகியவை மார்கழிக் கோலங்களில் ஒன்றாக ( வருடப்பிறப்பன்றும் இன்னொரு கோலம் ) மாபெரும் வண்ணக்கோலங்களாக மலரும்.
மொத்தத்தில் நாங்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்று மகிழ்கிறோம். எல்லாத் திருவிழாக்களும் எங்கள் திருவிழாக்களே. அன்பும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் மக்காஸ்.
இவர்கள் அன்பையே பரிசாகப் பெற்றுக் கொண்டு கிளம்பினோம் :)

அன்பையே போதித்த ஏசப்பாவை எங்கள் மனத்துணையாகக் கொள்கிறோம்.
MERRY X MAS AND A HAPPY NEW YEAR :) 

2 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. தாமதமான வருகை...படங்கள் ரொம்ப நல்லாருக்கு..அதுவும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சூப்பர்!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)