வெள்ளி, 6 அக்டோபர், 2017

கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலைநிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலை அறிவியல் கல்லூரிகளும் , நர்சிங் கல்லூரி ஒன்றும் , ஒரு பாலிடெக்னிக்கும் , ஒரு பள்ளியும் இணைந்து செயல்படுகிறது.

அங்கே மகளிர் தினத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. சிறப்பான உரை என்று ஆசிரியர்கள் சிலர் பாராட்டினார்கள். தீசிஸ் மாதிரி இருக்கிறது என்றும் அதை மாணவிகள் புரிந்துகொண்டு  சிறப்பாகக்  கைக்கொள்ளவேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.



aஅதன்பின் சில காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டுப்புற நடனங்களும், மீம்ஸ் போன்ற நடனமும் சிறப்பாக இருந்தது.



பதின்பருவப் பெண்கள் ஆடித் தீர்த்துவிட்டார்கள். தாவணி என்பது இன்னும் அழகு பொலியும் உடையாகவே உள்ளது !
புடவை அணிந்த பெண்கள் பறை கொண்டு ஒரு நடனம் ஆடினார்கள். மொத்தக்கூட்டமும் கட்டுண்டு கிடந்தது.

சுடிதார் அணிந்த பெண்கள் சினிமாப்பாடலுக்கு நடனமாடினார். அவையும் சிறப்பே. அனால் என்ன பல நமக்குத் தெரியாத புதிய பாடல்கள். !

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊட்டுவதாக இருந்தது இந்த மீம்ஸ் ஷோ நடனம்.

தொகுத்து வழங்கிய அழகிய பெண் :)


ரசிக்கும் மாணாக்கியர் கூட்டத்தோடு நாமும் :)
பதின்பருவமே ரசனை மிகுந்ததுதானே. ! நாமும் சில கணம் டைம் மிஷினில் ஏறி நம் பள்ளி & கல்லுரிப் பருவம் சென்று மீண்டோம். இந்த நிகழ்வும் 2013 ஜூலையில் நடைபெற்றது. வாழ்க வளமுடன் அனைத்துச் செல்லங்களும்.  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)