ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்திய நதிநீர் இணைப்பு.

எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.

மாசைக் கொட்டி தூசைக் கொட்டி
மாசற்ற நதிகள் மறைந்தே போனதே
பாசனம் நீர்த்ததே மாசனம் மரித்ததே
போசனம் அற்றபின் புத்தியில் உரைத்ததே
உலகத்தின் வளங்கள் நதிநீர்ப் பயன்கள்
நிலமகள் கொடுத்த நன்னீர்ச் சீர்கள்.
மாநிலங்கள் பிரித்த மகாகன நதிகள்
மனிதர்கள் பிரிக்க அனுமதி மறுப்போம்.
தேங்கும் நீரை அணையாய்த் தடுக்காமல்
தேசம் உய்யப் பகிர்ந்து கொடுப்போம். 

2 கருத்துகள்:

  1. மிஸ்ட் கால் பற்றி ஏதுமில்லையே

    பதிலளிநீக்கு
  2. அது பத்தி எழுதல பாலா சார். இது இயற்கை ஆர்வலரா எழுதியது.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)