செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2

தானே துயர் தீர்க்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள் என்ற தலைப்பில் முன்னேயே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்த இன்னும் சில ஓவியங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர்கள் ஜீவாநந்தன் பி ஆர் ராஜன் ஆகியோரின் ஓவியங்களை அதிலேயே பகிர்ந்துள்ளேன்.
ராம் அடைக்கலசாமியின் ஓவியம் மரங்களையும் இயற்கையையும்  பாதுகாக்கச் சொல்கிறது.
பாஸ்கரனின் ஓவியம். மீன்கள் இலைகள் என்று கலவையான படிநிலை ஓவியம்


ஓவியர் தெரியவில்லை. ஆனால் கைலாயம், சிவன், கங்கை, அத்துடன் கீழே கிடைக்கும் ருத்ராக்ஷம் ருத்ரமாகச் சீறும் நாகம் ஆகியன தெரிகின்றன.
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த்திருக்கும் தட்ஷிணாமூர்த்தி மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளார். வெண்கல சிற்பம் அல்லது ஐம்பொன்னாக இருக்கலாம்.

என்லார்ஜ் செய்து படித்தேன். கலைஞர் வி. ரவிராம். காப்பர் & பிராஸ் என்று போட்டிருக்கிறது.
நாட்டுப்புறத் தாயும் கொழு கொழு சேயும். என்லார்ஜ் செய்தும் தெரியல. ஆனால் ஓவியத்தில் ராமு என்பதுபோல் கையொப்பம் காணப்படுகிறது. 
தியானம் ஒளிவிடும் நிஷ்டைச்சிவன். ஓரா என்னும் ஒளிவட்டமாய் பின்னே நிலவும் முன்னே பிறையும். ஓவியர் பெயர் நடராஜனா எனத் தெரியவில்லை.

மீடியம் அக்ரிலிக்
சுதந்திரமாய் நடனம் ஆடும் இரு பெண்கள். ஓவியர் தங்கம் என நினைக்கிறேன்.

ஒரு பெண்ணின் காதில் ஜிமிக்கி கம்மல் !!! :)
இந்த பிராஸ் சிற்பத்தை உருவாக்கியவர் ப்ரபாகரன் பி வி. ஏதோ ஒரு கவலையில் ஆழ்ந்திருக்கும்  ஒரு கணவன் மனைவியின் சிற்பம். கணவன் என்ன செய்வதென வான் நோக்கி சிந்தித்திருக்க அவனுக்குத் தோள்கொடுத்துத் தாங்கியவாறு மனைவியின் கவலை கொண்ட முகம். தீர்வைத் தேடி இருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிஸ்டர் பொதுஜனம் பை  மதன் !

பாண்டி செல்வனின் அக்ரிலிக் பெயிண்டிங். கான்வாஸில். ஜன்னல் மிக தத்ரூபமாய் இருக்கிறது.
ஜெகந்நாதனின் அக்ரிலிக் பெயிண்டிங். சக்தியும் சிவனும்போல தோன்றுகிறது. ஆனால் தாயும் சேயுமா தெரியவில்லை.
இளையராஜாவின் அழகுப் பெண் ஓவியம். ஊரணியில் குளித்துவிட்டுத் துணிகளுடன் ஜில்லென்று புன்னகையுடன்  திரும்புவது சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
வாழ்வின் படிநிலைகளை விளக்கும் முரளியின் ஓவியம். மனுஷ வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து  அழகுற வரைந்திருக்கிறார். முதல் எட்டில் விளையாட்டு, இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் உத்யோகம், நான்காம் எட்டில் திருமணமும் குழந்தையும், ஐந்தாம் எட்டில் பணம் சம்பாதிப்பது. ஆறாம் எட்டில் பயணங்கள். ( விமானம் ! ). ஏழாம் எட்டில் ஒய்வு., எட்டாம் எட்டில் பூரணத்துவம் ! 

மனமென்னும் குதிரையை அடக்க முயலும் மனிதர்கள். புடைப்புச் சிற்பமாய். ஓவியர் பெயர் தெரியவில்லை.
செம்பருத்தியில் சின் முத்திரையுடன் வெண்ணிற புத்தர்.புத்தம் சரணம் கச்சாமி. கலர் காம்பினேஷன் அருமை.
சந்த்ரு வரைந்த ஓவியம். மிக்ஸ்ட். முதல் பார்வையில்  மனிதனுக்குள் இன்னொரு மனிதனா. இல்லை அவன் முகத்தில் முகமுடியா என்று சிந்திக்கவைத்த ஓவியம்.

காதை தன் காதலிக்காக அர்ப்பணம் செய்த வான்கோவின் ஓவியம் மிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 

டிஸ்கி :-இதையும் பாருங்க.

தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2  

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)