திங்கள், 11 செப்டம்பர், 2017

இனியெல்லாம் பிஸினஸே

இனியெல்லாம் பிஸினஸே

தேங்க்ஸ் டு ராம் சார் !!!


ஐபிசிஎன்னுக்காக வாரந்தோறும் ஒருவர் வீதம் போராடி வென்ற  52 பிசினஸ் புள்ளிகளை பேட்டி எடுத்து அவை  தொகுக்கப்பட்டு இனியெல்லாம் பிஸினஸே என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகி உள்ளன.

இதில்  கட்டுரைகளுக்கு  எனது பங்களிப்பைச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இந்த நல்வாய்ப்பை நல்கிய ஐபிசிஎன் 2017 குழுமத்துக்கும், அதன் கமிட்டி ஹெட் ஆத்தங்குடி திரு.எஸ் ராமநாதன் அவர்களுக்கும், கோஆர்டினேட்டர்கள் திருமதி தெய்வானை சேகர், திருமதி தேவி ரமேஷ் ஆகியோருக்கும், எடிடோரியல் டீமின் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு மெய்யப்பனுக்கும் ( எனது சகோதரன் ) ஐடி விங் திரு சுந்தரம். ஆச்சி வந்தாச்சு இதழின் ஆசிரியை திருமதி கமலா பழனியப்பன், திரு சுந்தரேசன், குழுத்தலைவர் திரு ஏ என் சொக்கலிங்கம், சோழபுரம் திரு ரமேஷ் ஆகியோருக்கும். மற்றும் அருமையான புத்தகமாக்கம் செய்து மற்றும் அநேக கட்டுரைகள் எழுதி இருக்கும் திரு எஸ் பி அண்ணாமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இக்கட்டுரைகள் இணையத்தில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஒவ்வொரு பேட்டிக்கு முன்பும் தகுந்த விபரங்கள் கொடுத்து தயார்படுத்தி அந்தப் பேட்டி எப்படி எல்லாம் சிறப்பாக அமையவேண்டும் என்று சொல்லி வழி நடத்திய ராம் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். புத்தகமாகப் பார்க்கும்போது மிகவும் அழகாக உள்ளது. அதில் இன்சொல் கூறி அறிமுகப்படுத்தியமைக்கும் மிகுந்த நன்றிகள் சார் :)
இந்த 52 பேரில் நான் பேட்டி எடுத்த ஐவரும் மிகப்பெரும் புகைப்படங்களில் இன்னும் பொலிவாகக் காட்சி அளிக்கின்றனர். அது அவர்களின் தன்னம்பிக்கையின் ஒளி. மென்மேலும் இவர்கள் ஒளிரவும் உயரவும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

2 கருத்துகள்:

  1. வளந்த் வருவோருக்கும், வளர்ந்தோருக்கும் நல்ல ஆக்க ஊக்கம் தரும் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. nandri Nisha :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)