செவ்வாய், 18 ஜூலை, 2017

ஆண்டொன்று போனால்..



HAPPY BIRTHDAY :) VAAZGHA VALAMUDAN :)

இதுதான் நான் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்று பார்த்தால் முகநூலில் வாழ்த்துச் சொல்லி எழுதுவது. வித்யாசமாய் செய்யவேண்டும் எனத் தோன்றியதே இல்லை.

ஆனால் என் பிறந்தநாளின்போது சில நட்பூக்கள் வாழ்த்தி இருந்தது அழகாய் இருந்ததால் அவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

நன்றியும் அன்பும் அனைவருக்கும்.  
GRASTLEY JAYA WISHES.

**Shivaji R S‎.

♪♥ (,) ♫♪♥
.....~.| |~ HAPPY
.....{░♥░}......
...{░♥░♥░} BIRTHDAY
.{░♥░♥░♥░}.......
\¤¤¤¤¤¤¤¤¤¤/
(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..Shirdi Sai Baba’s Blessings ♪♫•*¨*•.¸¸¸¸.•*¨*•♫♪? ! .. Be With You Always Dear One(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯)Vaazhga Valamudan (¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..

OM SREE SAMARTHA SAYEE
ANANTHAKOTI BRAHMANDA NAYAKA RAJADHIRAJA YOGIRAJA PARABRAHMA SACHIDANANDA SREE SREE SREE SAMARTHA SADGURU SAINATH MAHARAJ KI JAI..

-- நன்றி சிவாஜி சந்தானம் சார். 

** Dhavappudhalvan Badrinarayanan A M‎

வண்ண தமிழ் சொற்களின்
வான் தாண்டியும் கோலங்கள்.
நலமுடன் பல்லாண்டு
மகிழ்வுடன் வாழ
உமக்கான இந்நாளில்
அன்புடன் வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிச் சகோ.

-- நன்றி தவப்புதல்வன் பத்ரிநாராயணன் சார். 

** வழக்கறிஞர் கண்ணன்

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

-- நன்றி கண்ணன் சார். 

** யாழகிலன் அபிமன்யு சனா

இன்று கவிதை க்கு பிறந்த நாள் விழா.
வெறுமனே கவிதை மட்டும் அல்ல
அழகான கோலமும் சமையல் தடாகம்

உண்டவராக அம்மாவுக்கு
உப்பாய் நன்றி நன்றியும் உடனாக வாழ்த்த இறைவனை வேண்டுகிறேன் அம்மா

-- நன்றி அகிலா  
KAYAL WISHES<3 br="">

** Kayalvizhi Lakshmanan.

Happy happy b'day Thenammai Lakshmanan அக்கா..... எனக்குள் ஒளிந்து இருந்த எழுத்து திறமையயும் பேச்சு திறமையயும் கண்டுபிடித்து வெளி கொணர்ந்தவர் :)


--- அன்பும் நன்றியும் அணைப்பும் கயல்.  

எங்கள் அன்புக்குரிய புன்னகை தேவதை தேனக்காவுக்கு நமது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

** வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.

--சோ ஸ்வீட் ஆஃப் யூ ஸ்வாதி டியர். அன்பும் நன்றியும். 
THENAPPAN SIR WISHES.

**Shantha Dutt‎

இனிய பிறந்த தின வாழ்த்துகள் தோழி.! உங்கள் ஒவ்வொரு நாளும் வளமாகி வாழ்க்கை ஒரு வரமாக வாழ்த்துகள்..!

-- அஹா மிக்க நன்றி சாந்தா மேம்

**Panneerselvam Sumathi

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க் வளமுடன். அன்பு அக்கா Thenammai Lakshmanan.

-- வழக்கம்போல் அசத்திட்டீங்க பன்னீர் செல்வம் சகோ. அன்பும் நன்றியும்.
PANNEER SAGO WISHES.

**Bharathi Soundar‎·

பிறந்தநாள் வாழ்த்துகள்... சிறக்க, செழிக்க நிலைத்த புகழெய்த... வாழ்த்துகள்.

--நன்றி பாரதி சௌந்தர்
**Bala Murali‎

இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். கனவு மெய்ப்பட வேண்டும்

-- நன்றி பாலமுரளி
SR SIR WISHES.

**Su Po Agathiyalingam‎  

அன்பரே !
வணக்கம் .
உங்களுக்கு
என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !
அறிவைத் தேடிக்கொண்டே இரு!
அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு !
சாதியை உதறு ! மதத்தை மற! a
மனிதனை நினை! உழைப்பை நம்பு!
அன்புடன்,
சு.பொ.அகத்தியலிங்கம்

--நன்றி அகத்தியலிங்கம் சார்.  

SETHUSIR WISHES.
**Sethu Kumarasamy

இன்று [14/07/2017]பிறந்தநாள் காணும் தமிழ்க் கடல் தேனம்மை லெக்ஷ்மணன் இன்று போல் என்றும் சிறப்புடன் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம் நண்பர்களே !

-- நன்றி சேது சார்.

** Balasubramanian Munisamy
 அன்பு நிறைந்த தோழியர்
ஆற்றல் நிறைந்த எழுத்தாளர்
நன்மனம் பெற்ற நாயகி
நாங்கள் சிலாகிக்கும் தாயிவர்
படைப்பை வாழ்த்தும் பாமகள்
பாரெலாம் சேர்க்கும் பூமகள்
தேனின் இனிய சொல்லரசி
தெய்வம் ஒத்த அருளரசி
தேனம்மை வாழ்க நூறாண்டு
தேசம் போற்றிட வாழ்கவே!

-- அஹா ! அன்பும் நன்றியும் பாலா !!!

**Nandha Periyasamy.
மேலும் வளர ...புன்னகையோடு வாழ ...உதவிகளை தயங்காமல் செய்ய ...சோதனைகளை சாதனையாக்க .... துயரத்தை உயரமாக மாற்ற .... நட்பை பாதுகாக்க ...உறவுகளை பலமாக்கி கொள்ள ...இறை வழி உணர ... எல்லோர்க்கும் உற்ற மனிதனாக வாழ ...பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கும் நந்தா பெரியசாமி

-- நன்றி நந்தா பெரியசாமி. 

KALIAMOORTHI SAGO WISHES.


**Valan Arul

இன்று பிறந்த நாள்...
கவித்தூரிகையை சிறப்பிக்கும் ராஜகுமாரிக்கு இன்று பிறந்த நாள்...
பண்ட, பலகாரங்களை சிறப்புடன் படைக்கும் நளபாக செல்விக்கு இன்று பிறந்த நாள்...
பல்சுவை ரசனையுடன் சிறுகதை தரும் கலைமகளின் பொன் மகளுக்கு இன்று பிறந்த நாள்..
சமூகத்தில் புறம் தள்ளப் பட்டோருக்காக சிந்திக்கும், உதவிக்கரம் நீட்டும் செம்மனச் செல்விக்கு இன்று பிறந்த நாள்...
வாழிய வாழியவே சிறப்புடன் வாழியவே
தேதிகளும், மாதங்களும் வந்து வந்து போகட்டும்
ஆண்டு மட்டும் இருக்கட்டும் அப்படியே...

-- அஹா அன்பும் நன்றியும் வளன் அருள்.

**Rockfort Ramani.
"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்".
உங்களின் இனிமையான வருங்காலங்களுக்கும், பரிபூரணமான தேக ஆரோக்கியமும், அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப் பெற்று தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல - கலியுக தெய்வம் காஞ்சி மகா பெரியவாளை பணிவுடன் பிரார்த்தித்துக்கொள்கிறேன். நம்மை படைத்த கடவுளுக்கும் நன்றி சொல்லி, அவரது ஆசியையும்
பெற்றுக்கொள்ளுங்கள்.
"மஹா பெரியவா பொற்பாதத்தில் சரணம்"
"ஹர ஹர சங்கர",
"ஜய ஜய சங்கர

தீர்க்காயுஷ்யமஸ்து, இன்றுபோல் என்றும் சந்தோஷமாக வாழ்க. நமக்கே வெற்றி, நாளையும் நமதே.

-- நன்றி ரமணி சார்

**Kumaresan Asak‎

தற்செயலாய் அமைந்தது பிறப்பு.
தன் செயலால் வாழ்வின் சிறப்பு.
மற்றவர் மகிழ்வில் செயலின் இனிப்பு.
மனிதநேயமே மண்ணுறு வெறுப்பு.
  
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

--நன்றி குமரேசன் சார்  

**ஜெயபால் ஜேபி

#வாழ்த்தி_மகிழ்கிறேன்..!!

இன்று பிறந்த நாள்காணும் என் அன்பு சொந்தத்திற்கு,
மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்கூறி மகிழ்கிறேன் !!!!

நீண்ட ஆயுளுடன், அனைத்து வளங்களையும், செல்வங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுமென உளம்நிறைந்து வாழ்த்துகிறேன் !!!

வாழ்க வளமுடன்...!!

--நன்றி ஜெயபால் ஜேபி

**Subramaniam Chupoo‎

அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Advance birthday wishes

-- நன்றி சுப்பு சகோ
REENA MAM WISHES.
**Bhagavathi Thirumalai.

வலிமையான, ஆழமான, அர்த்தம்தோய்ந்த எழுத்துக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் தேனம்மை அவர்கள் வாழிய பல்லாண்டு, வளம் அனைத்தும் பெற்று.. .திருமலை.


-- அஹா ! அன்பும் நன்றியும் திருமலை சார். !!!

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)