சனி, 15 ஜூலை, 2017

அலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.



ஒரு மனிதனின் வாழ்வில் இரு சிலம்புகளின் ஒலிக்கிடையேயான அவன் கதைதான் சிலப்பதிகாரம். 

ஒருத்தி சிலம்பினால் கவரப்பட்டு இன்னொருத்தி சிலம்பினால் மரணப்பட்ட கோவலனின் காவிரிப்பூம்பட்டினத்துக்குச் சென்றபோது அவனது வாழ்வின் மொத்தத் துயரையும் குத்தகை கொண்டதுபோல  ஆவேசமாக அடித்து அடித்து வருத்தம் தீர்த்துக்கொண்டிருந்தன அலைகள்.

ஒரு பெண்ணின் பார்வையிலேயே இதுவரை சிலம்பைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஆணின் பார்வையில் சிலநிமிடம் யோசித்தேன்.
திருமணமான உடனே ஆண் ஒருவன் ஒரு ஆடலரசியின் கால்தண்டையின் ஒலியின்பால் மயக்கப்பட்டுப் பின் சென்றுவிடுகிறான். 

அத்தலைக்கோலரிவையிடம் தன்னையே இழக்கிறான். தவறைத் தவறென்று அறியாமல் செய்த அவன் அத்தவறிலேயே மூழ்கி மணிமேகலை என்ற முத்தையும் எடுக்கிறான். 

அதன் பின் அவனுக்கும் அவனுடைய இணையான மாதவிக்கும் பிணக்கு ஏற்படத் திரும்பத் தன் மனை(வி)யிடமே திரும்புகிறான். எப்போதும் அவனுக்காய் மலர்ந்திருக்கும் கண்ணகியின் இல்லமும் உள்ளமும் அப்போதும் அவனை ஏற்றுக் கொள்கிறது. 

இருவரும் மதுரை திரும்புவதும் கவுந்தி அடிகளைச் சந்திப்பதும், அதன் பின் கண்ணகி கணவனுக்கு அறுசுவை உண்டி படைப்பதும் தனது தண்டையைக் கழட்டித்தருவதும் நிகழ்கிறது.

ஒரு சிலம்பில் வாழ்வைத் தொலைத்தவன் மறுசிலம்பில் மீட்டெடுக்கப் பார்க்கிறான். இரு சிலம்புகள் மட்டுமல்ல மூன்றாம் சிலம்பு ஊடுருவி ஊழ்வினையாய் அவனை ஆக்கிரமிக்கிறது.  ஆனால் தவறிழைத்தபோதெல்லாம் காத்த சிலம்பு சரியான பாதைக்கு வந்தபோது அவனைத் தவறானவனாகக் காட்டித் தண்டித்துவிடுகிறது.  

மிகுந்த துயரம் தோய்ந்த இக்கதையை இளங்கோ அடிகள் எப்படித்தான் எழுதினாரோ என்று வருந்தும்படி இருந்தது. 

சீர்காழிக்கு அருகில் உள்ள பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  கண்ணகி, கோவலன் மாதவியின் புடைப்புச் சிற்பங்களோடு கதை சொல்லப்பட்டுள்ளது. கண்ணகியின் கால் சிலம்பை எடுக்க முயன்றபோது காமிராவில் அந்த ஃபோட்டோ மட்டும் சரியா விழலை. அத அப்ப கவனிக்கவும் இல்லை. இதுனாலதானே அவனே போய்ச்சேர்ந்தான் என்ற காரணமோ என்னவோ.




கண்ணகியும் கோவலனும் மணக்கோலத்தில்.




பூம்புகார் என்ற பட்டினப்பாக்கம். ( காவிரிப்பூம்பட்டினம்.)



மணவிழா வாழ்த்து.




தலைக்கோல் சிறப்பு



நிலவொளியில் கோவலனும் மாதவியும்



கணவனின் நினைவில் கவலைதோய்ந்த கண்ணகி.




கணவனின் நினைவில் கவலைதோய்ந்த கண்ணகி.



நடுவில் கோவலனுக்கும்  மாதவிக்கும் பிணக்கு ஏற்பட்டு விட்டுச் சென்றுவிட தனியே திரும்பும் மாதவி.



கண்ணகியைப் போன்றே மாதவியும் கோவலனைப் பிரிந்து வாடுதல்.



மனையாட்டியுடன் மீண்டும் இணைந்த இன்பத்தில் கோவலன்.



பொருளனைத்தும் இழந்ததால் மீண்டும் பொருளீட்ட மதுரை பயணம்.



கண்ணகியின் கைப்பக்குவத்தில் உருவான சமையலை கோவலன் சுவைத்தல்.



பொருளீட்ட முதல் வேண்டி கண்ணகியின் சிலம்பைப் பெற்று கோவலன் பிரியாவிடை பெறுதல்.




முத்துப் பரல்களை உடைய சிலம்பைக் கோவலன் களவாடியதாகக் கொல்லப்பட உடன் கொந்தளித்து எழுகிறாள் கண்ணகி. தனது சிலம்பில் இருப்பவை மாணிக்கப்பரல்களே என்று பாண்டியனின் சபைக்குச் சென்று உடைத்துக் காட்டுகிறாள்.



அதன் பின் கோபாவேசத்தில் மதுரையை எரித்துக் கணவனுடன் வானகம் புகுகிறாள். அவளே ஆற்றுக்கால் பகவதியாக இன்றும் வணங்கப்படுகிறாள். 

அவளது கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் அந்தக் கற்பின் கனலிக்காகக் கனக விசயர் மூலம் கல்லெடுத்து வந்து கோயில் சமைக்கிறான்.




கண்ணகிக்கும் மாதவிக்கும் நடுமுற்றத்தில் தனித்தனியே சிலைகள். 

அதென்னவோ கண்ணகியின் பீடத்தைவிட மாதவியின் பீடம் உயர்வாக அமைக்கப்பட்டுள்ளது இங்கே.




இளங்கோவடிகள்.



சேரன்செங்குட்டுவன் சிலைகள் வெளியே உள்ள பூங்காவில் இருக்கின்றன.




சிலம்பால் வாழ்ந்து சிலம்பால் வீழ்ந்தவன் கோவலன். அதை முத்துப் பரல்களாய் அலைகள் வீசி அவலத்தோடு சலம்புகின்றது பூம்புகாரின் கடற்கரை..  மேலும் கடல் அழித்த ஊர், சனம், வாழ்வு. அதனால்தானோ என்னவோ அங்கே அதிகநேரம் இருக்கப் பிடிக்கவில்லை.


4 கருத்துகள்:

  1. முத்துப் பரல்களை உடைய சிலம்பைக் கோவலன் களவாடியதாகக் கொல்லப்பட உடன் கொந்தளித்து எழுகிறாள் கண்ணகி. தனது சிலம்பில் இருப்பவை மாணிக்கப்பரல்களே என்று பாண்டியனின் சபைக்குச் சென்று உடைத்துக் காட்டுகிறாள்.

    -- cant make corrections in blogger dashboard itself. something went wrong. what should be done i donno. so post it here

    பதிலளிநீக்கு
  2. படங்கள், தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  3. THANKS DD SAGO

    THANKS VENKAT SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)