புதன், 12 ஜூலை, 2017

வள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.




சென்னையில் 1976 இல் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விடுமுறை நாளில் தம்பி பிள்ளைகளுடன் பார்க்கச் சென்றிருந்தேன். ம்யூசியம், மிருகக்காட்சி சாலை, கண்காட்சி, பொருட்காட்சி, தீம் பார்க் எல்லாம் இப்படி பிள்ளைகளை சாக்கு வைத்துத்தான் நாமும் சென்று பார்க்கவேண்டியதா இருக்கு J






1330 குறள்களும் 133 அதிகாரங்களும் கொண்ட குறள் சிற்பமாவும், ஓவியமாவும் வடிக்கப்பட்டிருக்கு.  எழுத்து வடிவிலும் இங்கே செதுக்கப்பட்டிருக்கு.



அறத்துப்பால் குறள்கள் கறுப்பு கிரானைட்டிலும், பொருட்பால்,காமத்துப்பால் குறள்கள் வெள்ளை செந்நிறக் கற்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன.





முன்புறமும் பக்கவாட்டிலும் பூந்தோட்டமும் கீழே நாலாயிரம் பேர் அமரக்கூடிய ஹாலும் ( கலைமாமணி விருது விழா இங்கேதான் நடந்தது ). மேலே வேயாமாடமும் அதற்குச் செல்ல முன்புறம் படிகளும் அமைக்கப்பட்டிருக்கு.



சென்றமுறை ஒரு நிகழ்வின்போது எனக்குத் திருக்குறள் புக் பரிசளிக்கப்பட்டது. ( சிறப்பு விருந்தினர் இன்னும் சிறப்பா திருக்குறளைப் படிக்கணும்னோ என்னவோ J சரி நாம திரும்பப் படிக்கவேண்டிய காலம் வந்தாச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். )



தேரும் திருவள்ளுவரும் வெகு சிறப்பாக வடிவமைச்சிருக்காங்க. தேரின் நான்கு சக்கரங்களும் யானை இழுத்துச் செல்வது போல இருப்பதும் கொள்ளை அழகா இருக்கு.



வாழ்வியல் நெறிமுறைகள் அடங்கியுள்ளதால் தமிழர்களின் வேதம்னு திருக்குறளைச் சொல்லலாம். கட்டாயம் ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள். வளரும் தலைமுறையினருக்குக் கற்பிக்கவேண்டிய நன்னெறி நூலும் கூட. எல்லாருமே ஒரு சில திருக்குறள்களாவது அறிந்திருப்பது நலம் பயக்கும்.




என் தம்பி பிள்ளைகள் அழகுபோல சேட்டை ஏதும் செய்யாமல் சொன்னபடி கைபிடிச்சு வந்து சில குறள்களையும் படிச்சுப் பார்த்தாங்க. அப்புறம் கே கே நகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் சிவன் பார்க்குக்குப் போய் சீ ஸா விளையாடினாங்க.

அப்புறம் களைச்சுப் போய் அமர்ந்துட்டாங்க.


நான் ஒரு ரவுண்ட் வாக்கிங் போனேன். ரொம்பக் கூட்டம். வெளியில் என்ன என்னவோ தின்பண்டங்களும், பலூன்களும்  ராட்டினமும் கூட இருந்தது. 


எனக்குக்கூட வாங்கித் தின்னணும்னு ஆசை இருந்துச்சு ஆனா பிள்ளைகள் ஒன்னைக்கூடக் கேக்கலை. ! சமத்துப் பிள்ளைகள். J



3 கருத்துகள்:

  1. சில குறள்களாவது தெரிந்திருக்க வேண்டும் மிகச்சரி எனக்கும் மிகச்சில குறள்களே தெரியும்

    பதிலளிநீக்கு
  2. இந்தியாவை பற்றி எந்த கவலையும் இல்லை: சொல்கிறார் விஜய் மல்லையா
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1812127

    பதிலளிநீக்கு
  3. FINE BALA SIR


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)