திங்கள், 12 ஜூன், 2017

ஊனையூரில் ஜல்லிக்கட்டு.


ஊனையூர் கானாடு காத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கே முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார்

ஊனையூர் கருப்பர், பண்டாரத்தையா, சோணையன், பண்ணி வீரப்பர், செட்டிச்சி அம்மன், முன்னோடி, விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் ஆகியோர் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள்.

வாயிலில் உயர்ந்து நிற்கும் மாபெரும் புரவி பேரழகு.

முதல் விளைச்சலை இங்கே கொண்டு வந்து படியளந்து கோயிலுக்கு சுற்றுவட்டார கிராமமக்கள் அளிப்பார்கள்.

கிடாவெட்டும் அவ்வப்போது நடைபெறும். கோழியும் சமைத்துப் படைப்பார்கள்.

சிவன்ராத்திரி பிரசித்தம். உறவினர்கள் ஒன்று கூடி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து இரவு தங்கி அபிஷேகம், அலங்காரம் பூசை செய்து வடித்து  உண்பார்கள்.

சாதாரண நாட்களிலும் திருமணம், பிறந்தநாள், தீபாவளி, சிவன்ராத்திரி, குடிபுகுதல் போன்ற பண்டிகைகள், திருவிழாக்களின் போது சென்று எல்லா திரவியங்களாலும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் பூமாலை சார்த்தி அபிஷேகம் செய்து தளிகை படைத்து வணங்குவது வழக்கம். சிலர் சுருட்டு சாராயமும் படைப்பார்கள்.

கோயிலின் இடப்புறம் ஒரு அழகான தாமரைத் தடாகம் காட்சி அளிக்கும். உள்ளே வாடாமல்லி தோட்டமெங்கும் நிரம்பிப் பூத்துக் கிடக்கும்.

கோயிலின் எதிரே ஒரு பரந்து விரிந்த கண்மாய் காட்சி அளிக்கும். இங்கே விடுமுறை நாட்களில் குழந்தைகள் குளித்துக் கும்மாளமிடுவார்கள். ஒருபுறம் கரை உயர்ந்து ஆலமரங்கள் வரிசையாக நின்று கவினுறக் காட்சி அளிக்கும்.

கம்மாயினுள் அமைந்திருப்பதுதான் சோணையன் கோயில். இவருக்குப் பொரி கடலை வெல்லம் படைத்து இளநீர் கண் திறந்து வைத்து சிதர்காய் செலுத்தி வருவது வழக்கம்.


இந்தமுறை சென்றிருந்தபோது அங்கே மஞ்சு விரட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அபூர்வக் காட்சி. சூரியன் ஓரமாய்ச் சுருங்கி விட்ட கம்மாயில் ஜொலிக்க கம்மாய் பூரா மனிதர்கள்.

கைகளில் காளைகளைப் பிடித்தபடி ஊர்க்கூட்டம். கிடாய்க்கன்றுகளும் கூடப் போட்டியில். பாடலும் பறையும் ஒலிக்க ஒரே ஜமாய்தான்.

சில காளைகள் விடுறா ஜூட் என்று கம்மாய்க்குள் நீந்திக் கரையேறி ஓடின. மாடுபிடி கயிறுடன் பலர் இருந்தார்கள். விதம் விதமான காளைகள். காளைகளின் கழுத்தில் பரிசுப்பணம் +துண்டு + மாலைகள்.

நாம்தான் மதியம் வேறு இடத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டதாலும் திடீர் திடீரென்று அங்கங்கே காளைகள் மிரண்டு கம்மாய்க் கரைக்குப் படையெடுத்துக் கொம்போடு தாக்க வந்து அனைவரையும் மிரட்டியதாலும் சிதறி ஓடி காரில் எஸ்கேப் :)


இனி படங்கள்.




பூசைப் பொருட்கள் எடுத்து வருகிறார்கள்.




எங்களையும் போட்டிக்கு அழைச்சாந்துட்டாங்க.


லேய் என்னப் பிடிக்கிறவன் எவண்டா :) தில் இருந்தா வா ராசா வா :) 


மாட்டு உடம்பில் அடையாளத்துக்காக  ஃபோன் நம்பர்கள்.


கம்மாயில் காளைகள்.


கம்பீரக் கொம்பழகன்




பூசாரி பூசை செய்ததும் கோயில் மாட்டுக்குத் தீபம் காட்டப்பட்டுக் கொட்டுடன் அழைத்து வரப்படுகிறது.

டண்டணக்கு டமக்குடக்கு டண்டணக்கு டமக்குடக்கு . கொட்டு முழங்குது.


எலேய் ஜெயிச்சிறோணும்கிறாரோ :)




வீரவிளையாட்டு ஆரம்பம்.
வாங்க ஜூட் ஓடலாம்.



பலர் பந்தய மைதானத்திலிருக்க வீடு நோக்கிச் சில சின்னவர்கள்.


2 கருத்துகள்:

  1. வாடிவாசல் போன்றவை இல்லாத ஜல்லிக்கட்டு.....?

    பதிலளிநீக்கு
  2. AAMAAM BALA SIR

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)