திங்கள், 15 மே, 2017

பாகுபலி – 2 BAHUBALI – 2 REVIEW. இது ’இராஜ’ மௌலியின் காலம்.



பாகுபலி – 2  BAHUBALI – 2 REVIEW.

ரொம்ப ரொம்ப அழகான காதல் கதை என முதல் பகுதியின் ஒரு பாட்டை எதேச்சையா பார்த்துட்டுப் போனா திரை பூரா ஒரே அரசியல் நெடி. அதுதான் பாகுபலி -2. 

இராஜமாதா சிவகாமியும் தேவசேனாவும் மனசுல நிரம்பி இருக்காங்க. யப்பா என்னா கம்பீரம். சான்ஸே இல்லை. முன்னே எல்லாம் எனக்குக் கம்பீரமான பெண்கள் என்றால் முதலில் பானுமதிதான் தோன்றுவார். இந்தப் படம் பார்த்த பின்னாடி ரம்யாகிருஷ்ணனும், அனுஷ்காவும் அந்த இடத்துக்குப் போட்டி போடுறாங்க!

பிரபாஸ் வழக்கத்தைவிட அதிகமான SWEET சாக்லெட் ஹீரோ.
யானையின் மேல் அவர் அமரும் காட்சி மிக அழகு. எல்லா இடங்களிலும் இயல்பாய் நடிக்கிறார். ஆமா தெலுகு ஹீரோக்கள் எல்லாம் ஏழடி உயரமா J


அவரும் வில்லன் ராணா துகுபதியும் சரிநிகர் சமம். ஹீரோவான அவர் ஏன் வில்லனா நடிக்கிறார்னு அவரோட ரசிகர்கள் முதல்ல ஒத்துக்கலையாம். ஆனா படத்தோட வெற்றிக்குப் பின்னாடி சமாதானமாயிட்டதா கேள்வி. 

கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் படத்துல ஆகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட். மண்டையப் பிளக்குற வெய்யில் காலத்துல ஏசி தியேட்டர்ல மூணு மணி நேரம் ( இரண்டேமுக்கால் மணி நேரம் இருக்கலாம். ) ஆசுவாசமா உக்கார முடியுது. 

சில படங்கள் கொஞ்சம் பார்க்க ஆரம்பிச்சவுடனே போர் அடிச்சிரும். ஆனா இது ஆரம்பிச்சதும் முடிஞ்சதும் மகா ஃபாஸ்ட். ஏன்னா இது பக்கா மசாலா .. சாதா மசாலா இல்ல மிர்ச் மசாலா. அந்த யானை சிலை முகத்துவாரத்தில் இருக்கும் இடம் ஏதோ ஆங்கிலப் படத்துல பார்த்தமாதிரி இருக்குது. அப்புறம் கொஞ்சம் அம்மன், கொஞ்சம் லாஸ்ட் எம்பரர், கொஞ்சம் பென்ஹர், கொஞ்சம் அடிமைப்பெண், கொஞ்சம் ஆயிரத்தில் ஒருவன், கொஞ்சம் ப்ளானெட் ஆஃப் தெ ஏப்ஸ், கொஞ்சம் ஹாரி பாட்டர் எல்லாத்தையும் ஒரு குடுவையில் போட்டு நிறைய கிராஃபிக்ஸ் சேர்த்துப் பக்குவமான மசாலா ஆக்கி இருக்காங்க. 
  
மஹேந்திர பாகுபலி, அமரேந்திர பாகுபலி போன்ற பெயர்கள் நம்ம பல்லவர்களை ஞாபகப்படுத்துது. பல்லாளதேவன் , கட்டப்பா என்ற சத்யராஜ், பிஜ்ஜால தேவன் என்ற நாசர் நடிப்பில் அசத்துகிறார்கள். அதுவும் அந்த இடது கையை நாசர் காட்டும் விதமும், அமரேந்திர பாகுபலியின் மறைவின் போது மண்டியிடும் சத்யராஜும், பிரமிப்பின் உச்சத்தில் கொண்டு செல்கிறார்கள். 

ஆனால் கடவுள் நம்பிக்கை அற்ற சத்யராஜ் குழந்தையேயானாலும் அரசனின் பாதத்தை எடுத்து நெற்றியில் வைத்து வணங்குவது போன்ற காட்சி ஆண்டான் அடிமையினை காட்டுவதாக மட்டுமில்லாமல் வர்ணபேதம் மிகுந்ததாகவும் இருந்தது. 

நடிகர்கள் நடிகைகள் செம ஃபிட். காட்சிக்குக் காட்சி நடக்கும் விதம் நிற்கும்விதம் எல்லாமே பர்ஃபெக்ட். செம எடிட்டிங். இதுவே ஒரு அழகான ஓவியமா மனசுல படத்தை நிக்க வைக்குது. 

யூஷுவலா டங் சிக் டங் சிக் என்றோ டக்கட்டா டக்கட்டா என்றோ பூட்ஸ் காலோடு சிரஞ்சீவி, நாகார்ஜுனா இன்னபிற ஹீரோக்கள் ஹீரோயின்களோடு கோணல் மாணலான கோணத்தில் எல்லாம் ஃபாஸ்ட் எக்ஸர்ஸைஸ் செய்வது போன்ற பாடல்காட்சிகள் இந்தப் படத்தில் இல்லவே இல்லை. J

சிவுடு சிவன் சிலையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசி கத்திக் காயத்தையும் ஆற்றுகிறார். அரசியல் படங்களில் இது எல்லாம் சகஜம்தானே. J ஹீரோயினோடு ஒரு ஆட்டம்கூட இல்லை. எல்லாம் வீர தீரப் பரிமாற்றம் மட்டுமே. அதுவும் அந்த நாலு நாலா அம்பை எடுத்து எய்யும் இடம், “கற்றாரைக் கற்றாரே காமுறுவர் “ போல மயங்க வைத்தது. செம ஜோடி என்று பாராட்டவும் தோன்றியது.

வீட்ல பார்த்தா அது மெகா சீரியல். தியேட்டர்ல பார்த்தா அது மெகாஹிட் திரைப்படம். சமீபமா தமிழ்ல பெரிய ஹீரோ திரைப்படம் ஏதும் வரல. சம்மர் ஹாலிடேல ஏசி தியேட்டர் ( தேவி தியேட்டர் மகா நாத்தமா இருந்தாலும் ) வெய்யிலுக்கு உகந்ததா ஆயிடுச்சு. இதெல்லாம் சில காரணங்களா இருக்கலாம். ஆனா காரைக்குடி போன்ற சின்ன ஊர்ல கூட 2, 3 தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல்லா ஓடுது.

நடிகர்களின் உழைப்பையும், இயக்குநரின் திறமையையும் இன்னபிற டீம் வொர்க்கையும் குறைவா மதிப்பிட்டுவிட முடியாது. கரெக்டா பர்ஃபெக்ட் ப்ளெண்டா கலந்து பரிமாறினா எத்தனை மசாலா படம் வந்தாலும் ரசிப்போம், மகா வெற்றி அடைய வைப்போம்னு இந்திய ரசிகர்கள் உலகத்துக்குச் சொல்லி இருக்குற சேதிதான். .. இதோட மெஹா வெற்றி

முக்கியமா விக்கிரமாதித்தனின் வேதாளம் இல்லாமலேயே கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற மில்லியன் டாலர், தலைவெடிக்கும் கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. J இது ’இராஜ’ மௌலியின் காலம். J 

 
என்னோட ரேட்டிங் நாலரை.*****



4 கருத்துகள்:

  1. ரசித்துப் படித்தேன்! நல்ல விமர்சனம்!

    பதிலளிநீக்கு
  2. நல்லா எழுதிட்டு
    அதென்ன 4 1/2 மார்க்?

    பதிலளிநீக்கு
  3. Thanksda Madhavi :)

    Thanks DD sago

    eppavumey fulla paratirapadathulla athan karanamMic Sago :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)