ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலகப் புத்தக நாளில் தினமணிக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் சிறப்பு நன்றி.

உலகப் புத்தகநாளை ஒட்டி காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் கடந்த வியாழன் அன்று ( 20. 4. 2017 ) குழந்தைகளுக்கு வாழ்வியல் நீதிகளைப் போதிக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

கல்வியாண்டின் இறுதி நாளான அன்று ஒரு ஆசிரியையும் பணி ஓய்வில் செல்லவிருந்தார். அந்தப் பரபரப்புக்கிடையிலும் புத்தகம் வழங்கும் பணியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜ் அவர்களும், மற்ற ஆசிரியைகள் கோமதி ஜெயம் மற்றும் சித்ரா அவர்களும்.

சிறப்புத் தகவல் என்னன்னா அங்கே படிக்கும் பிள்ளைகள் பேச்சாற்றலில் சிறந்து விளங்க வேண்டும் என்று போடியம் ஒன்று புதிதாய் அழகாய்ச் செய்திருக்கிறார்கள். அதைக் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து மாணவர்கள் அந்த போடியத்தின் முன் நின்று சிறப்பு உரையாற்றும் அளவு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தன் எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். இப்படி ஊக்கம் கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வரையில் பிள்ளைகளுக்கு என்ன குறை.சிறந்தோங்கி வளர்வார்கள் நிச்சயம்.

கோமதி ஜெயம் தன் வகுப்புப் பிள்ளைகளின் அந்த வருட செயல்பாடுகளைப் பாராட்டி நீதி நெறி அடங்கிய சில சிறுவர் புத்தகங்களை வழங்க என்னை அழைத்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் கூட மாலையில் கைபேசியில் என்னை அழைத்து ஆறாம் வகுப்பு மாணவர்கள் என்றாலும் என் பேச்சைக் கவனித்து உள்வாங்கித் தன்னிடம் பாராட்டியதாகச் சொன்னார்.

மேலும் நேற்று ( 20. 4. 2017 )  ஒன் இந்தியா வலைப்பக்கத்திலும் இன்று ( 21. 4. 2017 ) தமிழ் இந்து தினசரியிலும், தினமணி செய்திப் பத்திரிக்கையிலும் புத்தகம் வழங்கும் விழா பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களை அனுப்பினார். 

ஆசிரியை கோமதி ஜெயம் அவர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், மற்ற ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், தமிழ் இந்துவுக்கும், தினமணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகள். நலந்தா ஜம்புலிங்கம் சாருக்கு நன்றிகள்.

புத்தகங்களை வாசியுங்கள் வாழ்வை நேசியுங்கள். :) 

////Thanks to Dinamani for the news update. Thanks to HM Peter Raja sir, Gomathi Jeyam mam & Ramanathan chettiar municipal school teachers for making me a part of World Book Day Celebrations held at their school, yesterday. 😀 spl tx to Nalanthaa jambulingam sir


Thanks to The Tamil Hindu newspaper for the update of World Book Day celebrations held at Ramanathan chettiar municipal school, karaikudi, yesterday. Spl thanks to HM Peter Raja sir, Gomathi Jeyam mam and the faculty members & Nalanthaa Jambulingam sir

புத்தக நாளில் அனைத்துப் பத்ரிக்கைகளுக்கும் வாழ்த்துகள்.


3 கருத்துகள்:

  1. நல்லதொரு நம்பிக்கையளிக்கும் செய்தி. பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளும், தங்களின் போட்டோவும் எப்போதும் போலக் கலக்கல். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    உலகப் புத்தகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தி இந்து தமிழ் நான் வாங்குகிறேன். எப்படி இதை பார்க்காமல் மிஸ் செய்தேன்?

    வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. Thanks VGK sir

    THanks Sriram !. throughout Tamilnadu ore paper aa ? i mean edition ..

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)