வெள்ளி, 20 ஜனவரி, 2017

இருகோடுகளும் இணைகோடுகளும்.

ஹாலிடே நியூஸ் செந்தில் சகோவின் ஒரு இடுகையில் இண்டர்நேஷனல் ரயில்வே ஸ்டேஷன் & ஏர்போர்ட்ஸ் பார்த்திருக்கிறேன். இருகோடுகளில் இணைகோடு போட்டுப் பயணிக்கும் இரயில் வண்டி என்றால் எனக்குக் காதல். :)

மும்பை, சென்னை, ஹைதை, டெல்லி, பெங்களூரு, குவாலியர், குல்பர்கா,கோவா, மைசூர், பழனி, மதுரை, காரைக்குடி, திருச்சி, ( துபாய், சிங்கப்பூர் ) ஆகிய இடங்களில் என்னை எப்போதும் கவரும் ரயில்வே ஸ்டேஷன்களையும், சென்னை, மும்பை, ஹைதை, துபாய், சிங்கப்பூரில் ஏர்போர்ட்டையும் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப் & செல்ஃபோன்களில் ஹோகயா.

வீட்டில் அட்வான்ஸ்டா இருக்கு என்று ஃபோன் மாத்தி சிம் போட்டு கொடுத்ததும் ஙேஙேஙேதான்.சரி விடுங்க இருக்கத வைச்சு இடுகையைத் தேத்துவோம் :) வாங்க போவோம் கூஊஊ பூம்ம்ம்ம் சிகுபுகு சிகுபுகு :)

டாப் 1. மனங்கவர்ந்த காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் நியூ எண்ட்ரன்ஸ் :)



மிக மிக நீண்ட கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன். 
 
கருத்தைக் கவர்ந்த ஹைதை/மும்பை ஏர்போர்ட் . ( நாளாச்சுல்ல மறந்தே போச்சு :(


இதுவும்தான். மும்பை/ஹைதை ஏர்போர்ட்.
சென்னை மெட்ரோ. ஒரு மாலை இளவெயில் நேரம்.
மிக மிக அழகான காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன்.
மண்டை தெறிக்க வெய்யில் அடிச்சாலும் காரைக்குடிக்கு ஈடு இணை எதுவுமே இல்லையாக்கும் :)
செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷன்.
இரு கோடுகள் இணைகோடுகள்.
இருகோடுகள் இணையாத பெரும்பயணம்தான் வாழ்க்கை.
சரி அடுத்த பயணத்தில் சந்திப்போம். இது சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம். வாழ்க்கையில் மறக்கமுடியாத மேம்பாலம். ஏன்னா எப்பவும் விடிகாலைல இங்கே இறங்கித்தான் வீட்டுக்குப் போவோம். :)

6 கருத்துகள்:

  1. அதானே...? உங்கள் ஊரை உட்டுகுடுக்க மாட்டீங்களே...! ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  2. படங்களிலேயே பல ஊர்களுக்கும் சென்று வந்த மகிழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொடுத்து விட்டீர்கள்.

    //டாப் 1. மனங்கவர்ந்த காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் நியூ எண்ட்ரன்ஸ் :)//

    ஆஹா, ’நம்ம காரைக்குடியா!’ என மூக்கில் விரல் வைக்க வைத்து விட்டது. டாப்-1 கொடுக்க வேண்டியது மட்டுமே.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  3. ஆமா டிடி சகோ

    மிக்க நன்றி விஜிகே சார்

    ஆமாம் பாலா சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)