வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

351. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

மிக அழகாகச் செல்லும் காதல். அப்பாஸும் ஐஸும். ஆனா நடுவுல புகுந்து அவர் ஏதோ சுயநலமி மாதிரி கெடுத்துடுவாங்க. அப்பத்தானே அழகன் வரலாம் ஐ மீன் மம்முட்டி. :) 




352. என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..இதை அஜீத் தபுவிடம் கேட்டபடி பாடும்போது மிக அழகாக இருக்கும். தபு கொஞ்சம் மஸ்குலைன் ஃபீமேல். அஜீத் கொஞ்சம் மென்மையான ஹீரோ. கடும் பாலைவனமும் வெய்யிலும் கூட தன்மையாக மாறிவிடும் அற்புதம். இசை சான்ஸே இல்லை. ஒருசில தமிழ்ப் பாடல்கள்  ஆல்பம் மாதிரி மாறிக் கொண்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று.


353. விழியிலே மணி விழியிலே

மோகன் நளினி.. மிக அருமையான பாடல் வரிகளுக்கும் இசைக்கும் கேட்பேன். நல்ல ரிதமிக்கான பாடல். ”மௌனமொழி பேசும் அன்னம். ”அழகு. 



354. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்

அழகு விஜயாம்மாவும் சிவாஜியும் . திரும்ப போட்டிருக்கனான்னு தெரில. பட் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். தனது காதலுக்குரியவன் சிறப்பாக வாழவேண்டும் என்று மிக மிக அழகான முகபாவங்களோடும் பாசத்தோடும் வாழ்த்துவார். "பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல  பலகோடி உன் வாழ்விலே. "



355. ஒரு கிளி உருகுது.

சின்னப் பிள்ளைகள் இருவரின் குறும்புக்  கூத்தாட்டம் வெகு அழகு. 



356. புத்தம் புதுக் காலை. 

வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ.. மனதில் ஆசைகள் இதழில் மௌனங்கள்.. என நான் இதில் ரசித்த வரிகள் நிறைய.. கார்த்திக் ராதா அப்போதைய காதல் சிம்பல்.



357. தட்டுத் தடுமாறி நெஞ்சம்

மிக மெல்லிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அழகான பாடல். ப்ளாக் & வொயிட் பழைய பாடல்கள் என்றுமே அழகுதான். 




358. உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

இந்த வரிகளுக்காகவே இந்தப்பாடலை ரசித்துக் கேட்பேன். என்ன ஒரு வலிமையான காதல் வார்த்தைகள். கேட்போரைப் பித்துப் பிடிக்க வைக்கும். 



359. என்ன என்ன வார்த்தைகளோ

ஜெயம்மா என் முதல் ஃபேவரைட். இந்தப் பாடலில் என்ன நளினம் அழகு. தென் தமிழ்நாட்டுப் பெண்களுக்குரிய ஒரு பொலிவு . அந்த நீளச் சடையும் புடவை அசைவும், நட்டநடு நெற்றியில் பொட்டும் நளினமான ஆடலும் சித்தம் கொள்ளைகொள்ளும். 



360. மகராஜா ஒரு மகராணி 

நம்ம விஜயாம்மாவும் சிவாஜியும்தான். அந்தக் குட்டி ராணி கொள்ளை அழகு. சின்னப் பிள்ளையில் கேட்ட பாடல் என்பதால் இதன் இசை பாடல் காட்சியமைப்பு எல்லாமே பிடிக்கும். பாந்தம். 



டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.





4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)