சனி, 24 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்



என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கிை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து  வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார். 

கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)

புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று. எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம் முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818 கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார் போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.


முதன்முதலாய் என் மகனின் முதல் பிறந்தநாளை புகைப்படம் எடுத்தேன். அதன்பிறகு கொடைக்கானல், கோயம்புத்தூர், ஊட்டி, வயநாடு, மைசூர் என்று சுத்தாத இடம் இல்லை என் கேமராவுடன்.கேமராக்கள் மட்டும் மாறிக்கொண்டேயிருந்தன, kodak, sony, samsung, nikon என்று.

பறவைகள் என்றால் தனி மோகம் உண்டு எனக்கு. அவங்க சிறகு விரிக்கும்போது நானும் கவிதை வடிக்கத் தொடங்கியிருப்பேன். அவங்களை என் புகைப்படபெட்டிக்குள் அடைப்பது எனக்கு பிடித்திருந்தது.

முகநூலில் அந்த புகைப்படங்களைப் போடவேண்டும் என்பதற்காகவே Clicks & Colours என்னும் புகைப்பட குழுவைத் தொடங்கி, அதுவும் இப்போது ஐந்தாயிரம் உறுப்பினர்களைக் கடந்து போய்கிட்டு இருக்கு. இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன.என்னுடன் இன்னும் மூவர் , அவர்களும் பெண்களே, அட்மின் ஆக குழுவில் உள்ளார்கள்.

என்னைப் போலவே நிறைய கத்துக்குட்டிகளும் அங்கே உண்டு. பெரிய புகைப்பட வல்லுநர்களும் உண்டு. வாரத்தின் இறுதி நாட்களில் ஒரு மையக்கரு கொடுக்கப்பட்டு அது சம்பந்தமான புகைப்படங்கள் வரவேற்கப்படும்.


அதன் லிங்க் :
https://www.facebook.com/groups/Cpature.Share/

‘முகம் பார்க்கும் கண்ணாடி’ ன்னு கொடுத்தால், ஒருவர் காரின் கதவில் உள்ள பெரிய கண்ணாடியைப் படம் பிடித்துப் போட்டு, சிக்னலில் நிற்கும்போது, பக்கத்தில் நிற்கும் காரின் கண்ணாடியில்தான் தலைசீவுவேன்னு எழுதியதைப் போல நிறைய சுவாரசியங்களும் இருக்கும். ஒருவருடன் ஒருவர் நடத்தும் மௌன யுத்தங்களும் இருக்கும். இருந்தும் குழுவின் ஒற்றுமைக்கு எப்போதும் உறுப்பினர்களே துணை நிற்பதைப் பார்க்கிறேன். ஒழுக்க மீறல்களை மட்டும் குழுவுக்குள் அனுமதிப்பதில்லை. இதுவே இதன் சிறப்பாய் நான் கருதுகிறேன்.

புகைப்படமும் பெண்ணும் 

இதுல முக்கியமாய் ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கனும்னு நினைக்கிறேன். ஒரு பெண் நிர்வகிக்கும் குழுவை சில ஆண்கள் எடை போடும் விதத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் கேள்வியாய் வைக்கப்படுவது, இந்த பெண்ணின் நிர்வாகத்திற்கு பின்னால், யாரோ ஒரு ஆண் இருப்பான் என்று உறுதியாய் நினைத்து, அப்பெண்ணைக் குறித்து புறம் பேசுவது. அடுத்தது, பெண்தானே, இவளுக்கு என்ன தெரியும் என்கிற ஆணாதிக்க நிலைப்பாடு.

எந்த கலையும் ஆண் பெண் என்று பேதம் பார்ப்பதில்லை. ரசிக்கும் தன்மை இருந்தால் போதும், காணும் காட்சியை நிழலுருவமாய் படைக்கமுடியும், கவிதையாய் சமைக்கமுடியும், காவியமாக்கவும் முடியும். எல்லா கலைகளையையும் கையாளும் திறமை, அது குறித்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வலிமை, அதனுள் புகுந்து சாதித்துக்காட்டும் ஆளுமை எல்லாமே பெண்களுக்கு உண்டு என்பதை பெருமைப்பட சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

அதே போல், நிர்வாகம் என்பதும் பால் பாகுபாடுகள் அறிந்து செய்வதல்ல. தன்னால் ஒரு விஷயத்தை சமன்படுத்த முடியும்ன்னு நினைக்கிற மனிதனால், அது ஆணோ பெண்ணோ, அதை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆணைவிட, பெண் என்பவள் எந்த விஷயத்திலும் கூடுதல் அக்கறை எடுப்பவள், பொறுமையாய் செயல்படுபவள். அதனால் நிர்வாகமும், கலைத்திறமையும் பெண்ணுக்கும் கை வந்த கலைதான்.


புகைப்படமும் ரசிப்பும்

‘இந்த படம் என் தங்கை இங்கு வந்திருந்தபோது எடுத்தது. அப்போ எவ்வளவு சின்னவளாக இருக்கிறா’
‘இந்த புகைப்படம் என் குட்டி பையன் முதன்முதலில் சுவரில் கிருக்கியபோது எடுத்தது’
‘இது கேமரா சற்று பழுதடைந்த போது, சிறு கீறலின் வழியே ஒளி அதிகமாய் விழுந்து புகைப்படம் சரியாய் விழாத காட்சி’ 

என்று ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னும் ஒரு குட்டி கதை சொல்லும் அளவுக்கு விஷயம் இருக்கும். அதுதான் புகைப்படக்கலையின் சிறப்பே.

கண்களால் கண்டு ரசிப்பவைகளை கைப்பேசியில் உள்ள கேமரா அல்லது டிஜிட்டல் கேமரா, DSLR கேமரா, எது நம்மிடம் உள்ளதோ அவற்றால் புகைப்படமெடுப்போம். நினைவுகளைப் படங்களாக்கி பத்திரப்படுத்துவோம். பின்னொரு நாளில் அவை நமக்கு சந்தோஷங்களை மட்டுமே திருப்பித் தரும் வல்லமை வாய்ந்தவை.

எனக்கு எழுத அருமையான வாய்ப்பு கொடுத்தமைக்கு என் இனிய தோழி தேனு என்கிற தேனம்மைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி..

ிஸ்ி:- சொன்ன ஒவ்வொரு வார்த்ையையும் ித்ேன் அகிலா. மிக அழாகொல்லிட்டங்க எல்லா அரியும் இப்பித்ான். அைச் சொல்ல என்னைப் போன்றோருக்கைர்யம் வுவில்லை. ஹேட்ஸ் ஆஃப் டு யூ. இன்னும் இன்னும் ிறையிக்காழ்த்ுகள் ோழி. சாட்டர்டே ஜாலி கார்னுக்காக எழித் ந்தைக்கு நன்றியும் அன்பும். வாழ்குடன். 

11 கருத்துகள்:

  1. உங்களின் இந்த பிரபலமான வலைத்தளத்தில் எனக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதற்காக நன்றியும் மகிழ்ச்சியும் தேனு.

    ஆண் பெண் அரசியலை தைரியமாக சொல்லவேண்டிய கட்டாயங்கள் அமைந்துவிடுகின்றன. அதுவே நம் வெற்றிதானே தோழி. மிக்க நன்றிப்பா

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான பேட்டி. அறிவுபூர்வமாக யோசித்துக்கூறியுள்ள அற்புதமான கருத்துக்கள். பறவைப்படங்கள் அனைத்தும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு...
    அகிலா அக்காவின் புகைப்படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் அகிலாக்கா. அருமையான பேட்டி. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள் அகிலாஜி.

    பதிலளிநீக்கு
  6. கோபாலகிருஷ்ணன் அய்யா, குமார், ப்ரியசகி மற்றும் வெங்கட் நாகராஜ் தோழமைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  7. இங்கே...நாம் விரும்பியதை புகைப்படம் எடுக்கவே...மிக பிரயத்தனப்படவேண்டியுள்ளது...அதற்கென ஒரு குழுமத்தை உருவாக்கி நிர்வகிக்க பெருமுயற்சி வேண்டுமென்பதை..உணர்கிறேன்.வாழ்த்துகள்ங்க அகிலா

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பக்கத்தில் நானும் உறுப்பினராய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
    ஜோதி கார்த்திக்

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஸ்ரீராம்

    பிரபலமான நீங்கள் எழுதியமை எனக்குப் பேறு அகிலா :) அன்பும் நன்றியும்டா :)

    நன்றி விஜிகே சார்

    நன்றி குமார் சகோ

    நன்றி பிரிய சகி

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி இயற்கை அனு :)


    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)