செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்

981.Sarithira mukkiyathuvam vaayntha sila uraiyadalgal namakku eeno ketkamalee poividukindrana. Oru kuttipaapuvin kural mattum kaathukalil sangeethamai olikkirathu.

#pappakkalin_ulagam 😘

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில உரையாடல்கள் நமக்கு ஏனோ கேட்காமலே போய்விடுகின்றன. ஒரு குட்டிப் பாப்பாவின் குரல் மட்டும் காதுகளில் சங்கீதமாய் ஒலிக்கிறது.

#பாப்பாக்களின்_உலகம்_ரிதம்


982. உடன்படும் கருத்துக்களோடு உடன்படாத கருத்துகளும் இருந்தால் லைக் போடுவது உவப்பானதாக இல்லை.


983. Tvn Tvnarayanan கூடிக் குலவி, சேர்ந்து உண்டு, குடும்பமும் நட்பும் ஒருசேர
இயற்கையை ரசித்து , உள்ளுரை இறைவனையும் நினைத்து கூடி பேசி மகிழும் கூட்டணி, உண்மையிலேயே வெற்றிக் கூட்டணி.. ஆனந்தம் இங்கிருந்து தான் ஆரம்பம்..அருமையான சொல்லாடல்; எளிமையான உரையாடல், நலம் பயக்கும் நட் பொருளாடல்! இன்றைய காலக் கட்டத்தேவையான செய்தியும் கூட...அருமை தேனம்மை அவர்களே...ரசித்தோம், ருசித்தோம் அதன் கருத்தையும், மகிழ்வையும்..வாழ்க, வளர்க வெல்க! நண்றி.. இறைவன் தங்களுக்கும்.குடும்பத்தாருக்கும், சகல நலமும் வளமும் சேர்க்கட்டும்..ஆயுராரோக்ய ஸெளபாக்ய மங்களம் நின்று நிலைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்.



தேனம்மை லெக்ஷ்மணன் :- அஹா தன்யளானேன். அவ்வப்போது நீங்கள் வழங்கும் ஆசிகளிலேயே உயிர்த்திருக்கிறேன். நன்றியும் அன்பும் மகிழ்வும் சார். உங்களுக்கும் இறைவனின் பேரருள் நிலைத்திருக்க வேண்டி வணங்குகின்றேன்.

984. உங்கள் ”சிவப்புப் பட்டுக் கயிறு” புத்தக மதிப்பீடு நடந்தபோது கலந்துகொள்ள இயலவில்லை. இன்று பார்க்க முடியுமா என்று ஒரு இனிமையான குரல் தொலைபேசியில் வினவியது. அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரி கல்வி ஆலோசகர் & கணேஷ் ஐ ஏ எஸ் அகாடமியில் பணியாற்றிய நெல்லை உலகம்மை. முகநூலில் மட்டுமே பார்த்த இவரை இவரது தன்னம்பிக்கைப் பதிவுகளுக்காக மிகப்பிடிக்கும். அஹா தன்யளானேன். இன்று சென்னையில்தான் இருக்கிறேன் என்றவுடன் உடன் கிளம்பி மனோ வேகம் வாயுவேகமாக தனது உதவியாளருடன் பெப்பில் வந்து இறங்கினார். சிறிது நேரம் புன்னகை பூக்க அளவளாவியவுடன் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். ( விலை கொடுத்து ) அன்புப் பரிசாக எனக்குக் கொய்யாக்கனிகளைக் கொடுத்தார். மனம் நிறைந்த ஒரு இனிமையான சந்திப்பு. நன்றி உலகம்மை வந்து சந்தித்தமைக்கு. :)

வேடியப்பன் சகோ கவனத்துக்கு நானும் 3500 ரூ க்குப் புத்தகங்கள் வாங்கி இருக்கேனாக்கும். :P :P


985.THX RAJI DEAR >>>NEW AIM.. + NEW achievement ..+ UR dedication..
+ Commitment.. = Success.. JUST DO IT WIN IT GOOD MORNING...


986. PLEASE EXIT THE GROUP IF THERE IS ONE OR MORE NEGATIVE ENERGY RADIATORS EXISTS IN THAT/ANY GROUP.

987. வெட்டி வேலைங்கிறாங்களே அப்பிடின்னா என்ன. நாம் செய்யிறது எல்லாம் உருப்படியான வேலைதானா

988.காளி என்றால் காளிதாசன் என்கிறாய்.
பேச்சி என்றால் பிரியன் என்கிறாய்
யட்சி என்றால் என்ன செய்வாய்
யட்சனாவாயா  ராட்சஸா.

989. சண்டே வந்தா நான் இன்ஃபர்மேஷன் கோடவுன் ஆயிடுவேன். தலீவர் அன்னிக்கு எல்லா பேப்பரும் வாங்குவார். அனாலேருந்து அஃக்கன்னா வரைக்கும் முன்னே படிப்பேன். இப்ப கோழி கொத்துறா மாரி மேயுறேன். :)

990. ஹிண்டு படிச்சா PROSE மாதிரி ஒரு ஃபீலிங். டைம்ஸ் ஆஃப் இந்தியா படிச்சா நாவல் மாதிரி ஒரு சுவாரஸ்யம். எகனாமிஸ் டைம்ஸா எனக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லை. அது தலைவர் டிபார்ட்மெண்ட். :)

991. பாட்டி :- சோப்பு டப்பி மாரி ஆளாளுக்கு கையிலே வைச்சி சொரண்டிட்டுருக்கீங்களே குளிக்கப் போறீங்களா

பேரன் :- பாட்டி அது செல்ஃபோன்.

992. ம் என்றால் ஆமாம்

ம்ம்ம்ம்ம் என்றால் கோபம்

பிரமாதம் என்றால் சூப்பர்

பிரம்மாதம் என்றால் கடுங்கோபம்

அருமை என்றால் நல்லா இருக்கு

அருமையோ அருமை என்றால் வெறுப்பா இருக்கு

-- எஃபி டிக்‌ஷ்.

993. இந்த எஸ்டிடி - STT - கொள்ளையோ கொள்ளை. லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் ப்ரோக்கரேஜ் போக எஸ்டிடி வேற. அதுவும் ஃப்யூச்சர் & ஆப்ஷன்னா லாட் லாட்டா போகும். :(

994. N.Rathna Vel நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)
எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com - மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். - மகிழ்ச்சி & வாழ்த்துகள் எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.

995. படைப்பூக்கத்தின் உச்சத்தில் சிலர் கவிதைகளைக் கொட்டும்போது இதைப்போல் ஒன்று.. ஒன்றே ஒன்று எழுதிவிடவேண்டுமென ஐம்புலனும் தவிக்கிறது...

996. சிலேடையுமில்லை, வெறும் புகழுமில்லை. மனம் நினைக்கும் வார்த்தைகளைக் கவிதையாகக் கொட்ட சரம் சரமாகத் தன்னைத் தொடுத்து அது பிரம்மாண்டப் பூமாலை ஆகிறது.. தாளாதவரிடம் போட்டு மூழ்கடிப்பதை விடத் தகுந்த தோள்களில் அணிவிப்பதுதான் முறை.

997. என்ன யாராவது திட்டுங்க என்று வம்பு சண்டைக்கு அலைந்து கொண்டிருப்பது என்ன மாதிரியான டிசைன்.. ??

998. உடனே சொல் உடனே சொல் ..
மழலை மாறா
சிறுபிள்ளையாய்த் தொணதொணப்பு
இன்றே இறந்தா போகப்போகிறேன்
உடனே சொல்லிவிட்டுச் சாக.

999. காலக் கெடிகாரம்
ஞாபக மாலையின் இதழ்களை
ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போடுகிறது
எல்லாம் உதிர்ந்தபின்னும்
அது சரத்தில் இல்லை
என்றாகிவிடுமா..

1000. களப்பலிகள் கேட்பதில்லை
காதல் யுத்தம்.
சதுரங்கச் சிப்பாயல்ல
சாய்த்துவிட.
எத்திக்கும் சித்திக்கும்
சாதுர்ய ராணிக்குத்
திசைகள் புரிவதில்லை
பேதமையாகிறாள்.
முற்றுமுணர்ந்த ராஜாவின்
கம்பீரப் பார்வை
ராணியின்பக்கம்
மௌனமாய்.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)