வியாழன், 29 செப்டம்பர், 2016

அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.

1021. கொடிக்கம்பம்னு போட்டுட்டு கொடிய என்ன பண்ணாங்க.. ?? அம்மா நீங்கதான் கேக்கணும். :(
#கண்டனூர்_நகர_சிவன்_கோயில்_ஊருணிக்கருகில்.


1022. மருதமலையில் ஒரு திருமண வீடு

1023.ஹோட்டல்ல ஸ்டே பண்ணும்போதெல்லாம் காஃபியும் டீயுமா குடிச்சே தீர்த்திருக்கேன் :)
#ARVEE_HOTELS.

புதன், 28 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.



சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3.


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 



சனி, 24 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்



என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கிை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து  வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார். 

கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)

புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று. எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம் முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818 கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார் போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.



அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.



சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.



இந்த விமர்சனம் அமேஸானில் ”சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


புதன், 21 செப்டம்பர், 2016

கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.

1001.நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

1002. கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

1003.நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

1004.விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

1005.கடலில் நீந்திய மீனுக்குத் தொட்டிச் சிறை.பெருநகரத்தில் உலவியவனின் தீபகற்பமாய்க் குடும்பம்.  தனித்தனித் தீவுகளாய் மனிதம். அலையில் மின்னும் சூரியனாய் நம்பிக்கை

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1



சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 



சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.

N.Rathna Vel added 2 new photos — .
September 10 at 1:06pm ·

நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)

எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com

பக்கங்கள் 108 – விலை ரூ.80

ஆசிரியர் பற்றி:

எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுகளில் நட்பு, முகநூலிலும் தொடர்ந்தது. இது அவர்களின் 5வது புத்தகம்.

சிவப்பு பட்டுக் கயிறு
அருமையான முகப்பு,
அருமையான கட்டமைப்பு, அச்சு.

படித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.



436. வலைப்பீரோ - சமைத்த பொருட்களை வைக்கும் அலமாரி
437. ரேடியோப் பெட்டி அலமாரி - ரேடியோ வைக்கும் அலமாரி.  இுள்ே குமிழ் ிருகும் பெரிய ேடியோ,எலிமினேட்டர், ஒயர்கள் இருக்கும். :) !

438. குளுதாடிதண்ணீர் ஜாடி. ( ாக்கல்லத் ூக்கிப் போட்டத் ண்ணீர் குடிக்குமில்லையா அந்தைப் ஜாடி )

439 மங்குச் சாமான் - இரும்பில் எனாமல் பெயிண்ட் அடித்தது போல் உள்ள சாமான்

440. வெங்கலச் சாமான் - பித்தளைப் பாத்திரம் 

வியாழன், 15 செப்டம்பர், 2016

மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.



417. மார்கழித் திருவாதிரைப் புதுமை - அந்தக் காலத்தில் செய்தது இப்போது வழக்கொழிந்து விட்டது.   பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் பிறந்தநாள் போன்ற ஒரு விழா. சர்வ ஆபரணமும் அணிந்த சர்வ அலங்காரம் செய்த குழந்தையைத் தங்கத் தட்டிலோ, வெள்ளித் தட்டிலோ உட்கார வைத்துத் தூக்கி ஆலத்தி போல சுத்தி இறக்குவார்களாம். திருஷ்டி கழியச் செய்வது இது. 


”திருவாதிரை நாச்சியாரே செங்கோடி அம்மனே
திருவாதிரை கும்பிட திருவே எழுந்திரு
மாச்சலைப் பாராமல் மயிலே எழுந்திரு
கூச்சலைப் பாராமல் குயிலே எழுந்திரு

ஆத்திமனப் பத்தேறினாலும் ( – பத்தே நாமம் )
அரிசிக் கடகாம் பத்தேறம – (பத்தே நாமம் )
கொம்பும் கொழையும் பத்தேறினாலும் ( - பத்தே நாமம்)   
ஓரட சுட்டு உரியில வைச்சு …. ” சிறிது மறந்துவிட்டதாகச் சொன்னார்கள் இருவருமே.