ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மைக்கேல் ( இன்ஸ்பிரேஷன் ) ஜாக்சன். - MICHAEL ( INSPIRATION) JACKSON !

 மைக்கேல் ஜாக்சனின் பாப் பாடல்களை ரங்கமணி கேட்பார். அடுத்துப் பிள்ளைகள். எனவே அடிக்கடி கேட்டுக் கேட்டு எனக்குப் பிடித்துப் போன பாடல்களை இங்கே பகிர்கிறேன். ப்ரேக் டான்ஸில் இருந்து பாப் பாடல் நடனங்கள் ரொம்ப வித்யாசமானவை அல்ல. !

மைக்கேல் ஹிஸ்டரி ஜாக்சன் என்ற வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்ததும் அவரைப் பார்த்து நிறையப் பேர் மயங்கி விழுவார்கள். அவ்ளோ க்ரேஸ்.

எனக்கு அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும். கமலஹாசனிலிருந்து பிரபுதேவா மற்றும் இன்றைய டான்ஸ் மாஸ்டர்கள் வரை அனைவருக்கும் ஒரு கருவூலம் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள்.

1. முதலில் கோஸ்ட் இதுதான் தசாவதாரத்தில் கமலின் மேக்கப்புக்கான இன்ஸ்பிரேஷனான இருந்திருக்கக் கூடும்.தனியே அமர்ந்து பார்த்தால் சிறிது திகிலூட்டக்கூடிய பாடல் காட்சி இது.



2. ஒரு முகநூல் நண்பர் பகிர்ந்திருந்த ராபர்ட் ப்ரவுனிங் பாடலை ஞாபகப்படுத்தும் ஆல்பம் இது. கமலஹாசனின் மாயா மச்சீந்திரா பாடலும் இதைப் போன்றதுதான்.



3. ரொம்ப ரசிச்ச பாட்டு இது. கொஞ்சம் முக்காபலாவை ஞாபகப் படுத்திய பாட்டு.




4. இந்தப்பாட்டு வந்தபோது சோ .. வக்கிர அசைவுகள் கொண்ட பாட்டு என்று கிண்டலடித்திருந்தார். இது ஜூடி ஃபாஸ்டருடன் என்று நினைக்கிறென். ஸ்டேஜில் மடோனாவுடன் ஆடும் ஆட்டம் ஃபைன்.



5. தன் மக்களுக்காக ஆதரவு காட்டிப் பாடும் ஜாக்சன் வெண்மை நிறத்தைத் தேர்ந்தெடுத்தது விநோதம்.



6. நான் விரும்பி ரசித்த த்ரில்லர். :) கடைசியில் ஜாக்சனுக்கு முளைக்கும் கோரைப்பல் இந்தியன் பாட்டிலும் கமலுக்கும் முளைக்கும். :) இதன் முதல் சில இடங்கள் வான் ஹெல்சிங்கையும் ஞாபகப்படுத்தியது.



7.  பில்லி ஜீன் மென்மையான பூனைப்பாடல். :)



8. இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடக்கும் சண்டை. பேட். :)



9. அடிச்சு நொறுக்குங்க என்று ஆக்ரோஷப் படும் பாடல். பீட் இட்.. 



10. இது ரொம்பவே வித்யாசமான பாடல். ஒரே பெண் பல உடைகளில் மேக்கப்புகளில்..



11. என்னுடைய எவர் ஃபேவரைட் பாட்டு. ப்லாக் /ஒயிட்.. ஹோம் அலோனில் நடித்த குட்டிப் பையனுடன் தவறாக நடந்துகொண்டார் என்பது சர்ச்சைக்குள்ளான விஷயம்.



இது எல்லாத்தையுமே பாடல், ம்யூசிக், நடனம் , காட்சியமைப்பு ஏதோ ஒரு தமிழ்ப்படத்தில் பார்த்திருப்பீங்க. எவ்வளவோ பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த மைக்கேல் எல்விஸ் ப்ரெஸ்லியோட பெண்ணை மணந்தார்.

 அவரோட ஒவ்வொரு ஆல்பம் வெளியீடும் உலகமெங்கும் ஒரு திருவிழாவாவே நடந்திருக்கு. த்ரில்லர், பேட், கோஸ்ட், டேன்ஜரஸ் என்று தலைப்புகளிலேயே மெகா புதுமை செய்தவர்.

அவரோட குழந்தைகளுக்கு காற்றைக் கூட வடிகட்டிக் கொடுத்தார். அவரோட உள்ளாடைகளைத் திருடிச் செல்லும் ரசிகர்களும் அதிகம். மிகப் ப்ராபல்யமா இருந்த மைக்கேலோட திடீர் மரணம்தான் மர்மத்துக்குள்ளானதா இருக்கு .. ஹ்ம்ம்.

இருந்தும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு இவரோட டான்ஸ் அசைவுகள் நம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல உலக அரங்கிலும் சாகாவரம் பெற்று உயிர்வாழும் தன்மையுடையவை. !!


4 கருத்துகள்:

  1. சில பாடல்கள் நானும் ரசித்திருக்கிறேன்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. "Tatiana Thumbtzen " இவர்தான்The way make me feel பாடலின் வீடியோ தொகுப்பில் மைக்கேலுடன் நடித்திருக்கிறார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)